Wednesday, August 25, 2010

வேகமாக வாகனம் செலுத்தியமைக்கு 11 கோடி ரூபா அபராதம்

சுவீடனைச் சேர்ந்த சாரதி ஒருவர் தனது காரை வீதியில் அதிவேகமாக ஓட்டிச் சென்றமைக்காக சுமார் 11 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகில் வேகமாக காரோட்டியமைக்காக விதிக்கப்பட்ட அதிகூடிய தொகை இதுவாகும்.

37 வயதான மேற்படி சாரதி, அண்மையில் தனது மேர்சிடிஸ் பென்ஸ் ரக ஸ்போர்ட்ஸ் காரை மணித்தியாலத்துக்கு 290 கிலோமீற்றர் வேகத்தில் ஓட்டியுள்ளார். சுவீடனில் அதிகபட்சமாக மணித்தியாலத்திற்கு 125 கிலோமீற்றர் வேகத்தில்தான் வாகனம் செலுத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் சுவிட்ஸர்லாந்து சாரதி ஒருவர் வேகமாக வாகனத்தை செலுத்தியதற்காக சுமார் 3 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. வேகமாக வாகனம் செலுத்தியமைக்கு இதுவரை அதுவே உலகிலேயே அதிக்கூடிய அபராதமாக இருந்தது.

சுவீடன் பொலிஸ் பேச்சாளர் பேனியட் டுமாஸ் இது தொடர்பாக கூறுகையில், 290 கிலோமீற்றர் வேகத்தில் சென்றதற்கு எந்த நியாயத்தையும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

குறித்த சுவீடனைச் சேர்ந்த சாரதி தனக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை தவணை அடிப்படையில் 300 நாட்களில் செலுத்தி முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF