ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் என்பது மென்பொருள் எழுதுபவர்கள் அல்லது பெரிய நிறுவனங்கள் மட்டும் பயன்படுத்தும் ஒரு கருவி ஆக இருந்தது. ஆனால், இப்போது எல்லோரும் பயன்படுத்தக் கூடிய ஒரு கருவியாக மாறிவிட்டது.
அதாவது, வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரவர்களுக்குத் தேவையான அளவில் பயன்படுத்துகிறார்கள்.
குறிப்பு எழுத, அலுவலகத்தில் விட்டுப் போன வேலைகளை வீட்டில் செய்ய, கல்வி பயில, சில நேரங்களில் பாட்டுக் கேட்க, திரைப்படம் பார்க்க, புகைப்படங்களைத் திருத்தி அமைக்க, வீடியோ பைல்களை VCD மற்றும் DVDக்கு மாற்ற, முக்கியமாக இணையத்தில் உலாவ, மின்னஞ்சல் அனுப்ப என்று பல விதங்களிலும் பயன்படுத்துகிறார்கள்.
வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சி இருப்பது போல், வீட்டிற்கு ஒரு கம்ப்யூட்டர் இருக்கப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை; அதுவும் இணைய வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர்.
கம்ப்யூட்டரின் பயன்பாடுகள் மற்றும் தேவைகள் அதிகமாக, அவற்றைப் பூர்த்தி செய்யக் கூடிய மென்பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. என்வே, அத்தகைய மென்பொருட்களைப் பற்றிய தகவல்களும், அவற்றை எவ்வாறு எதற்குப் பயன்படுத்த்லாம், எங்கு கிடைக்கும் என்பதைப் பற்றிய அறிவும் அவசியமாகிறது.
வணிக ரீதியிலான மென்பொருட்களோடு, open source மற்றும் freeware எனப்படும் வகையிலான இலவச மென்பொருள்களும் அதிக அளவில் கிடைக்கின்றன. அப்படி வணிக ரீதியிலான மென்பொருள்களைத் தயார் செய்யும் நிறுவனங்கள் கூட சிலசமயம் தங்கள் மென்பொருட்களை இலவசமாகத் தருகிறார்கள் - விளம்பர நோக்கில்.
அப்படிப்பட்ட இலவச மென்பொருட்களைத் தருகிற இணையதளம் தான் http://www.giveawayoftheday.com.
இந்த இணையதளத்தில் இருந்து நீங்கள் தினமும் ஒரு மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், அப்படி அந்த மென்பொருளை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொண்ட உடன் அல்லது அன்றைய தினத்திற்குள் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி விட வேண்டும். 24 மணி நேரம் கழித்து உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவினால், அந்த மென்பொருள் முழுமையாக வேலை செய்யாது அல்லது சில நேரம் அதை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவ முடியாமலே போகலாம்.
அவ்வாறு, பதிவிறக்கம் செய்தவுடன், கீழே உள்ள 4 வழி முறைகளில் எதாவது ஒன்றின் மூலம் நீங்கள் அந்த மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவலாம்.
1. முதலில் activation.exe பைலை இயக்குதல். பிறகு setup.exe பைலை இயக்குதல்.
2. முதலில் setup.exe பைலை இயக்குதல். பிறகு activation.exe பைலை இயக்குதல்.
3. முதலில் setup.exe பைலை இயக்குதல். பிறகு அந்தந்த இணையதளத்தின் மூலம் பதிவு செய்தல்.
4. முதலில் setup.exe பைலை இயக்குதல். பிறகு கொடுக்கப்பட்டுள்ள license key-ஐ உள்ளீடு செய்து பதிவு செய்தல்.
இவ்வாறு எந்த வழிமுறையில் நிறுவ வேண்டும் என்பதை அந்த மென்பொருள் தொகுப்போடு கொடுக்கப்பட்டுள்ள readme.txt பைலை படித்து தெரிந்து கொள்ள்லாம்.
இந்த மென்பொருட்கள் மட்டுமல்லாது, நீங்கள் எத்தகைய மென்பொருளையும் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவும் முன் அதோடு கொடுக்கப்பட்டுள்ள readme.txt பைலை படித்து விட்டு செய்வது நல்லது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF