கேள்விப்படும் கான்ஸ்பிரசி தியரிகளில் கொஞ்சமாவது உண்மை இருக்கின்றதோ இல்லையோ ஆனால் அது கொண்டுவரும் தகவல்கள் நம்மை மயிர்கூச்செறிய செய்பனவாக உள்ளன. இப்படித்தான் ஹெய்தி பூகம்பத்தை ஒட்டி உலாவந்திருக்கும் இந்த மிகப்பெரிய கான்ஸ்பிரசி தியரியும். நிலநடுக்கங்களை மனிதன் செயற்கையாக உருவாக்க முடியுமா? அவற்றை எதிரிநாடுகளுக்கு எதிராக, அல்லது ஏதோ ஒரு லாபத்துக்காக இன்னொரு நாடு மீது ஏவிவிட முடியுமா என்றால், ஒருசாரி புள்ளிகளும்,விஞ்ஞானிகளும் இது சாத்தியமே என்கின்றார்கள்.
ஹார்ப் என்று அமெரிக்காவில் அறியப்படும் இந்த உயர்தொழில் நுட்பம் சீனா, ரஷ்யா உட்பட பிறநாடுகளிலும் உள்ளதாம். மிகப்பெரிய ஆண்டனாக்கள், டவர்களோடு கூடிய இந்த பெரிய செட்அப் மூலம் வான்வெளியில், வாயு மண்டலத்திற்கும் மேலிருக்கும் அயானோஸ்பியர் பகுதியிலுள்ள அயான்களை புகையச்செய்து வாயுவெளியில் துளைகளை உண்டாக்கி அதன் மூலம் பூமியில் நிலநடுக்கங்களை உண்டு பண்ண முடியும் என்கின்றார்கள். ஒலி அலைகள் நம் காது eardrum-ல் அதிர்வுகளாக மாற்றப்படுவதால், அதாவது மெக்கானிக்கல் ஆற்றலாக மாற்றப்படுவதால் தானே நம்மால் சத்தங்களை கேட்கமுடிகின்றது. அப்படித்தான் படித்ததாக நியாபகம். பாட்டுக்களை உச்ச சத்தத்தில் காரில் ஓட விடும் போது காரே அதிர்வதை உணர்ந்திருக்கின்றேன். இது போல சில நம் புலங்களுக்கெட்டா மாய அலைகளை உருவாக்கி அதன் மூலம் எதிரிநாடுகளில் பூமிஅதிர்ச்சியை வரவைப்பதிலிருந்து, காலநிலைகளை தம் கட்டுக்குள் கொண்டுவருவது, அல்லது அதால கோர தட்பவெப்பநிலைகளை, ஹரிகேன், புயல், வெள்ளம் போன்றவற்றை எதிரி நாட்டில் உருவாக்குவது போன்ற செயல்களையும் செய்ய முடியுமாம். பொதுவாக பார்க்க அது ஒரு இயற்கையின் சீற்றம் போல இருந்தாலும் அது உண்மையில் மனிதனின் கட்டுபாட்டால் இயக்க வைத்ததாக இருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக இந்த சர்ச்சைகள் கூறுகின்றன. அது மட்டுமல்லாமல் இந்த உருவாக்கப்பட்ட அரோரா ELFகாந்த அலைகளால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருக்கும் மக்களின் மனநிலையைக் கூட தங்கள் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்கின்றார்கள். என்னவென்று சொல்வது, போகின்ற போக்கை. ஏற்கனவே ஜார்ஜியாவில் நடந்த பூமிஅதிர்ச்சிக்கு ரஷ்யாதான் காரணமென அதன் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தார்கள். இனி நடக்க இருக்கும் இயற்கையின் பேரழிவுகளுக்கு ஒரேயடியாக கடவுளையோ, பூமிமாதாவையோ குறை சொல்லமுடியாது போலிருக்கின்றது. இந்த பாழாப்போன மனிதன் தான் பின்னால் இருப்பான் போலிருக்கின்றது. இது குறித்ததான ஒரு முழு நீள விவரணப்படம் யூடியூபில். ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF