Sunday, August 29, 2010

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த எரிமலை வெடிப்பினால் சுமார் 1500 மீற்றர் உயரத்திற்கு புகையும் சாம்பலும் கிளம்பின. பல மைல் தொலைவிலிருந்தும் எரிமலைக் குழம்பை பார்க்க முடிந்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.
'சினாபங்' எனும் இந்த எரிமலை வெடிக்கத் தொடங்கியதையடுத்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
சினாபங் எரிமலை சுமத்ராவின் பிரதான நகரான மேதானிலிருந்து சுமார் 60 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. கடந்த 400 வருடங்களில் இந்த எரிமலை வெடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேஷிய தீவுகளில் இயங்கு நிலையில் சுமார் 129 எரிமலைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF