இந்த நிலவு பூமியிலிருந்து மிகத் தொலைவில் தென்படுவதனாலேயே, நிலவு சிறியதாக காட்சியளிக்கும் என 'ஸ்பேஸ்' அமைப்பின் இயக்குநர் சி.பி. தேவ்கன் தெரிவித்துள்ளார்.
ஒகஸ்ட் மாதத்தில் தோன்றும் இந்த பௌர்ணமி நிலவு, 'தானிய நிலவு' என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் மிகப் பெரிய நிலவை விட இன்று வானில் தோன்றும் நிலவு, 15 சதவீதம் சிறியதாக காட்சியளிப்பதுடன், ஒளி அடர்த்தி 30 சதவீதத்தால் குறைந்து காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிலவுக்கும் பூமிக்கும் உள்ள சராசரி தூரம் 2 லட்சத்து 39 ஆயிரம் மைல்கள் ஆகும்.
ஆனால் இன்றைய தினம் 2 லட்சத்து 52 ஆயிரம் மைல்கள் தூரத்தில் பௌர்ணமி நிலவு உள்ளதால் பார்ப்பதற்கு சிறியதாகத் தோன்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து 2011 ஒக்டோபர் 12ஆம் திகதி இதேபோன்று மிகச் சிறிய பௌர்ணமி நிலவு தோன்றும் எனவும் 'ஸ்பேஸ்' அமைப்பின் இயக்குநர் சி.பி. தேவ்கன் கூறியுள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF