Monday, August 23, 2010

5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் உணர்வு

ஒருநாள் ஒரு பெரிய காட்டுஎருமை கூட்டத்தில் இருந்து தனது குட்டியுடன் தாய் மற்றும் தந்தை காட்டுஎருமை மேய்வதற்காக ஒரு ஆற்றின் ஓரமாக செல்கிறது. அப்பொழுது அவற்றிக்கு தெரிய வாய்ப்பு இல்லைதான் குட்டிஎருமை சிங்கங்களுக்கு இரையாகும் என்று. சற்று தொலைவில் இரையை எதிர்நோக்கி ஒரு காட்டுராஜா கூட்டம். 

அமைதியாக மேய்ந்து கொண்டிருந்த குட்டி எருமையை குறி வைத்தாகிவிட்டது. மெதுவாக குட்டியை நோக்கி நகர தாய் மற்றும் தந்தை எருமை தனது குட்டியை கேடயம் போல் பாதுகாத்து அழைத்துக்கொண்டு ஓடுகிறது. என்னதான் ஓடினாலும் சிங்ககளின் சூட்சிவலையில் இருந்து தப்பமுடியாமல் பக்கத்தில் இருந்த ஆற்றினுள் தவறிவிழ சிங்கங்கள் சூழ்ந்துகொண்ட்டு அதை இரையாக்க அதன் கழுத்தை கவ்வி கொண்டு மேல்வர முயற்சி செய்கிறது, 

ஆற்றினுள் இருந்து ஒரு முதலையும் தன் பங்கிற்கு அந்த குட்டி எருமையை பிடித்து இழுக்க சிங்கங்கள் வெற்றிபெற்று கரையில் கொண்டுவந்து அதனை கடித்து குதறிக் கொண்டு இருக்கிறது. 

அப்போதுதான் ஒரு அதிசயம் நிகழ்கிறது. குட்டியை பிரிந்த தாயும் தந்தை எருமையும் தனது கூட்டத்தை அழைத்துவந்து அந்த சிங்ககங்களை படுத்திய பாட்டினை இந்த காணொளியில் காணவும்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF