Wednesday, August 18, 2010

பறக்கும் சுறா - மெய்சிலிர்க்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு



பெருஞ்சத்தத்துடன் இசை மழையில் நனைந்து கொண்டே நீர்ப்பரப்பில் பறக்கலாம். குதித்தும் விளையாலாம். சுறா மீனில் சவாரி செய்வது போன்ற இந்த வாகனத்தை கண்டுபிடித்திருக்கிறார் ரோப் இன்ஸ். ஆனால் இதில் பயணிக்க மனத் தைரியம் மிக அதிகமாக வேண்டும். பயணிக்கும் போது இசையை சவுண்ட் சிஸ்டத்தில் கேட்பதை விட அதிக சப்தமாக வைத்தால் சிறிது பயம் குறைய வாய்ப்பு உண்டு

மிக வேகமாக செல்லும் சுறாவைப் போன்று 12 அடி உயரத்திற்கு மேலே பறந்து பின்னர் நீருக்குள் வேகமாக செல்கிறது இந்த Seabreacher. மணிக்கு 50 மைல்கள் உச்ச கட்ட வேகத்தில் செல்லக் கூடியது இந்த வாகனம். இருவர் அமர்ந்து பயணிக்கலாம். வெள்ளை சுறாவில் பயணிப்பதை போன்ற திரில்லிங் ஆன அனுபவம் பெறலாம். சுறாவின் தாடை பற்களை போன்ற அமைப்பும் உள்ளது.

கடலுக்கு மேலே மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் செல்லும் இந்த வாகனம் தண்ணீருக்குள்ளும் மணிக்கு 20 மைல்கள் வேகத்தில் செல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாகனம் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு வாகனம் தான். இதன் விலை அறுபதினாயிரம் பவுண்டுகள். மத்திய கிழக்கு பகுதிகளில் இந்த பொழுதுபோக்கு விளையாட்டு வாகனம் சற்று பிரபலமானது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF