Tuesday, August 31, 2010

உங்கள் கணணியை பார்மட் செய்வதற்கு முன்

கணினி பயனாளர்கள் தங்களது கணினியின் வன்தட்டை ஃபார்மேட் செய்து மறுபடியும் புதிதாக இயங்குதளத்தை நிறுவி விடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, சிஸ்டம் ஃபைல்களில் கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின் பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள். 

ஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது 'டிவைஸ் ட்ரைவர் சிடி கையில் இல்லையே?'  என்பதாக இருக்கலாம். காரணம் மிக சரியானதே. ஏனெனில் புதியதாக நீங்கள் இயங்குதளத்தை நிறுவிய பிறகு, உங்கள் கிராபிக்ஸ் கார்டு, சவுண்ட் கார்டு, வெப் கேமரா, பிரிண்டர், ஸ்கேனர் போன்ற சாதனங்கள் முறையாக வேலை செய்வதற்கு, அந்தந்த கருவிகளுக்கான பிரத்யேகமான டிவைஸ் ட்ரைவர்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் அந்த டிவைஸ் ட்ரைவர் சீடிக்கள் உங்கள் வசம் இல்லாத பொழுது,  உங்கள் கணினியில் புதியதாக இயங்குதளத்தை நிறுவ  அல்லது ஒரே கான்பிகரேஷனை கொண்ட உங்கள் நண்பரின் கணினிக்கு உங்கள்  கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள டிவைஸ் ட்ரைவர்களை  படி எடுத்து  கொடுக்க என மிகவும் பயனுள்ள ட்ரைவர் பேக்கப் மற்றும் ரீஸ்டோர் மென்பொருள் 

இதிலுள்ள Scan பொத்தானை சொடுக்கியவுடன், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து டிவைஸ் ட்ரைவர்களும்  பட்டியலிடப்படும்.
இந்த பட்டியலிலிருந்து நமக்கு தேவையான டிவைஸ் ட்ரைவர்களையோ, அல்லது எல்லாவற்றையுமோ தேர்வு செய்து Backup பொத்தானை அழுத்தி, பிறகு திறக்கும் Backup Drivers வசனப் பெட்டியில், இதனை எங்கு சேமிக்க வேண்டும் (பென் ட்ரைவிலும்) என்பதை கொடுத்து விட்டால் போதும்.


இயங்குதளத்தை மறுபடியும் நிறுவிய பிறகு இந்த பேக்கப் ஃபோல்டருக்குச் சென்று இங்குள்ள Double Driver அப்ளிகேஷனை ரன் செய்து ட்ரைவர்களை மறுபடியும் எளிதாக ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.


மென்பொருள் Download செய்ய
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, August 30, 2010

வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்'

பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் “கனவுலக’ விமானமான “போயிங் 787 டிரீம்லைனர்’ விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
உலகின் அதிநவீன, சொகுசு விமானம் என்று அழைக்கப்படும் இந்த விமானம் அடுத்த சில நாட்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்த கனவுலக விமானத் திட்டம் குறித்து போயிங் நிறுவனம் அறிவித்தது. ஆனால், இந்த புதுமையான விமானம் திட்டமிட்டபடி வெளிவரவில்லை. அதிக விலையும், குறைவான ஆர்டருமே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், மூலப் பொருட்கள் பற்றாக்குறை, அதிக எடை, இறக்கைகளை பொருத்துவதில் ஏற்பட்ட தொழில் நுட்ப சிக்கல் போன்றவைகளும் 'டிரீம்லைனர்’ விமானம் தாமதமானதற்கு காரணங்கள் ஆகும்.
இத்தனை தடைகளையும் தாண்டி, சமீபத்தில் இந்த விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது. முதற்கட்டமாக, பத்திரிகையாளர்கள் இந்த வெள்ளோட்டத்தின் போது விமானத்தில் பயணித்தனர். “டிரீம்லைனர்’ விமானம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. உயரம் அதிகம் கொண்ட கேபின், அமர்ந்திருப்பதே தெரியாத அளவிற்கு மெத்தை போன்ற இருக்கைகள், கண்களைக் கவரும் பல வண்ண விளக்குகள், மிக குறைந்த எரிபொருள் செலவு, நிறைந்த திறனும், குறைந்த சத்தமும் கொண்ட இன்ஜின்கள், பயணிகள் விண்ணைப் பார்த்து ரசிப்பதற்காக நீண்ட ஜன்னல்கள் என பல சிறப்புகள் இந்த விமானத்தில் உண்டு.
இந்த விமானம், சிட்னியில் இருந்து சிகாகோ வரையில் தரையிறங்காமல், தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஏர்பஸ் நிறுவனம் ஏ 380 என்ற உலகின் மிகப் பெரிய விமானத்தை அறிமுகப்படுத்தியது. இந்த விமானத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிகின்றன. இந்நிலையில், ஏ 380 ரக விமானத்திற்கு போட்டியாக போயிங் நிறுவனம் 'டிரீம்லைனர்’ விமானத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏ 380 விமானத்தில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய முடியும். இதனால், நீண்ட தூர விமான சேவையில் ஏர்பஸ் ஏ 380 விமானங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால் 'டிரீம்லைனர்’ விமானத்தில் 290 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இருப்பினும் இரு நகரங்களுக்கு இடையிலான, சொகுசு பயணத்திற்கு 'டிரீம்லைனர்’ விமானம் ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எப்படியோ மிக நீண்ட தாமதத்திற்குப் பின், உலகின் கனவுலக விமானம் என்று கருதப்படும் 'டிரீம்லைனர்’ விமானம் அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகள் சேவைக்காக வெளி வந்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்!

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன.
வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அந்தந்த நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜைகளே அனுப்பப்படுகின்றனர். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொதுவான அம்சம் அல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அமெரிக்கா அனுப்பி வைத்த பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.
- ஐந்து அமெரிக்க முஸ்லிம்கள், தாலிபானில் சேருவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் சி.ஐ.ஏ. உளவாளிகள் என தெரிய வந்தது.
- 1994 ம் ஆண்டு, நியூ யோர்க்கை சேர்ந்த அமெரிக்க யூத டாக்டர் இஸ்ரேலுக்கு Baruch Goldstein சென்று காஹ் அமைப்பில் இணைந்தார். அங்கே தொழுகையில் ஈடுபட்ட 29 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றார்.
- ஐரிஷ் அமெரிக்கர்கள் IRA க்கு நிதியுதவி வழங்கியதுடன், பிரிட்டனில் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
- சுவாரஸ்யமாக, இந்தியாவில் மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலிலும் சி.ஐ.ஏ. பங்கெடுத்துள்ளது. David Headley என்ற அமெரிக்க பாகிஸ்தானி நபர் தாக்குதலுக்கு உதவியதை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த நபர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு பின்னர், அமெரிக்க போதைவஸ்து தடுப்பு பணியகத்தில் வேலை செய்தவர். பாகிஸ்தானிலும், அமெரிக்காவிலும் இரட்டை உளவாளியாக செயற்படுகிறார். இது போன்ற தகவல்கள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா பயங்கரவாதிகளை உருவாக்குவதும், ஏற்றுமதி செய்வதும் புதினமல்ல. அது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் ஒன்று. ஐம்பதுகளில் ஐரோப்பிய நாடுகளில் Gladio என்ற ரகசிய பயங்கரவாத இயக்கங்கள் அமைக்கப்பட்டன. ஒரு வேளை சோவியத் யூனியன் படையெடுத்தால், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுவது அந்த ரகசியக் குழுக்களின் வேலை. ஆனால் எதிர்பார்த்த சோவியத் படையெடுப்பு ஒரு நாளும் வரவில்லை. மாறாக ரகசிய பயங்கரவாத குழுக்கள் தமது நாடுகளிலேயே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். உதாரணத்திற்கு சில:
- 1960 ம் ஆண்டு, துருக்கியில் ஏற்பட்ட சதிப்புரட்சியில் பங்கெடுத்தது மட்டுமல்லாது, பிரதமரை கொலை செய்துள்ளனர்.
- 1967 ல், கிரீசில் சதிப்புரட்சி செய்து இராணுவ அரசை நிறுவியது.
- 1971 ல், மீண்டும் ஒரு முறை துருக்கியில் சதிப்புரட்சியில் பங்கெடுப்பு. தொடர்ந்த சர்வாதிகார ஆட்சியில் Gladio பயங்கரவாதிகள், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொலை செய்தனர்.
- 1977 ல் இடம்பெற்ற மாட்ரிட் படுகொலை, 1985 ல், பெல்ஜியத்தில் இடம்பெற்ற சூப்பர் மார்க்கட் படுகொலை... இவ்வாறு தமது சொந்த மக்கள் மீதே பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது.
- 1990 ம் ஆண்டு, சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னாள் Gladio தலைவர் அனைத்து இரகசியங்களையும் வெளியிடப் போவதாக தெரிவித்தார். மறு நாள் அவர் வீட்டில் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, August 29, 2010

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த எரிமலை வெடிப்பினால் சுமார் 1500 மீற்றர் உயரத்திற்கு புகையும் சாம்பலும் கிளம்பின. பல மைல் தொலைவிலிருந்தும் எரிமலைக் குழம்பை பார்க்க முடிந்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.
'சினாபங்' எனும் இந்த எரிமலை வெடிக்கத் தொடங்கியதையடுத்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
சினாபங் எரிமலை சுமத்ராவின் பிரதான நகரான மேதானிலிருந்து சுமார் 60 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. கடந்த 400 வருடங்களில் இந்த எரிமலை வெடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேஷிய தீவுகளில் இயங்கு நிலையில் சுமார் 129 எரிமலைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பாம்பு ஒயின்

பாம்பு ஒயின் வியட்நாமில் உபயோகபடுத்தபடும் ஒரு விதமான மது வகையாகும், முழு பாம்பு உயிருடன் மது பாட்டினுள் அடைக்கபட்டு அந்த பாம்பின் விசம் கொஞ்சம் கொஞ்சமாக மதுவில் கலந்துவிடும்.

பாம்பின் விசம் மதுவில் உள்ள எத்தனாலினால் விஷ தன்மையை முறித்துவிடும். கிழகத்திய நாடுகளில் பாம்பின் விஷம் மருத்துவ குணம்முடையது என்பதால் இந்த விஷ பாம்பு ஒயின் கண்பார்வை குறை, மற்றும் முடி உதிர்தல் தன்மையை குறைக்கும் என்று நம்பபடுகிறது. இதில் இரண்டு வகையான விஷ பாம்பு ஒயின் உள்ளது.

ஓன்று உடனடியாக அருந்துவதற்கு, அதாவது ஒரு மது பாட்டிலினுள் விஷ பாம்புகள் உயிருடன் அடைக்கபட்டு அதன் உடல் சாறாக பிழியபட்டு உடனடியாக அருந்துவது. இரண்டாவது முறையானது மது பாட்டிலினுள் விஷ பாம்புகள், தேள்கள், பல்லிகள், ஓணான்கள், மற்றும் பூச்சியினங்கள் உயிருடன் அடைக்கபட்டு பலமாதங்கள் கழித்து குடிப்பது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, August 28, 2010

நோக்கியா கைத்தொலைபேசி வாங்குகிறீர்களா...? எச்சரிக்கை...!

பலருடைய நோக்கியா கைத்தொலைபேசி புதிதாக வாங்கி சில மாதங்களிலேயே காலை வாரத்தொடங்கிவிடும்.ஆனால் சிலருடையது வாங்கி ஐந்து வருஷம் சென்றாலும் அப்படியே இருக்கும்.

நீங்கள் பயன்படுத்தும் Nokia கைத்தொலைபேசி அசலா ? போலியா ? ? என நீங்கள் சோதித்திருக்கிறீர்களா ?இல்லையெனில் இதோ அருமையான முறை * பின்வரும் இலக்கங்களை அழுத்துங்கள் *#06#* 7வது 8வது இலக்கங்களில் உள்ளவற்றை கவனமாக பார்த்து கீழுள்ளவற்றோடு ஒப்பிடுங்கள்.

Number---------Phone serial no
1 ----------------------x
2 ----------------------x
3 ----------------------x
4 ----------------------x
5 ----------------------x
6 ----------------------x
7th------ --------------?
8th------- -------------?
9 -------- ------ -------x
10----------------- ----x
11 ---------------------x
12 ---------------------x
13 ---------------------x
14------------- --------x


  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 02 அல்லது 20 ஆகஇருந்ததால் உங்களுடைய போன் ஐக்கிய அரபு நாடுகளில் தயாரிக்கப்பட்டது.
  • சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 08 அல்லது 80 ஆக இருந்ததால உங்களுடைய போன்ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை .
  • சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 01 அல்லது 10 ஆக இருந்ததால உங்களுடைய போன்பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. நல்லது சில வருடங்கள் பாவிக்கலாம்.
  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 00 ஆக இருந்தால் உங்கள்போன் ஒரிஜினல் கம்பனியில் தயாரிக்கப்பட்டது. பல வருடங்கள் பாவிக்கும்.
  • உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 13 ஆக இருந்தால் உங்கள்போன் Azerbaijan இல் தயாரிக்கப்பட்டது.
இனியாவது மொபைல் போன் வாங்கும்போது மேற்கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு வாங்குங்கள். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

எந்த மென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வோர்ட் கொடுப்பது எப்படி..?

எந்தமென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் முடியும். (மற்ற வின்டோஸ் தொகுப்பிற்கு சில ஷேர்வேர் புரோகிராம் மூலம் பாஸ்வேர்ட் கொடுக்கலாம்உங்கள் ஹார்ட் டிஸ்க் என்.டி.எப்.எஸ்., முறையில் பார்மட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அப்படித்தான் செய்திருக்கப்படும்இனி எந்த போல்டரை உங்களுடையதாக மட்டும் ஆக்கிட வேண்டுமோ அதில் ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும்பின் கிடைக்கும் விண்டோவில் ஷேரிங் என்ற டேபைக் கிளிக் செய்தால் “Make this folder private” என்ற பெட்டி தெரியும்.இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்பின் அப்ளை (Applyஎன்ற பட்டனை அழுத்தவும்.உங்களுடைய கம்ப்யூட்டர் அக்கவுண்டிற்கு தனியாக பாஸ்வேர்ட் இல்லை என்றால் கம்ப்யூட்டர் உங்களிடம் இந்த போல்டருக்கு பாஸ்வேர்ட் கேட்கும்.
பாஸ்வேர்ட் கொடுத்து உறுதி செய்தபின் “Create Password” என்ற பட்டனை அழுத்தி பின் பாஸ்வேர்ட் விண்டோவினை மூடவும்பின் புராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸில் ஓகே அழுத்தி மூடவும்இனி பாஸ்வேர்ட் தராமல்நீங்கள் உட்படஇந்த போல்டருக்குள் நுழைய முடியாதுஎனவேநீங்களும் இந்த பாஸ்வேர்டைச் சரியாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

தன்னம்பிக்கை : வெற்றியின் அடிப்படை




நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பல தடைகளைச் சந்திக்கின்றோம். மேலும் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நமது வாழ்வில் நிறையவே ஏற்படுகின்றன. இவ்வாறான தடைகளுக்கும், சவால்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமைக்கான முக்கிய காரணமாக விளங்குவது தன்னம்பிக்கையின்மையாகும். பொதுவாகப் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நம்பிக்கை குறைந்தவர்;களாகவோ அல்லது நம்பிக்கையற்றவர்களாகவோ இருப்பதை நடைமுறையிற்...
கண்டுகொள்ள முடிகின்றது. பொதுவாக தன்னம்பிக்கை குறைந்தவர்கள் அல்லது தன்னம்பிக்கை அற்றவர்கள் என அடையாளப்படுத்தப் படுகின்றவர்கள் வாழ்க்கையில் பெரும்பாலான நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குவதனை அவதானிக்க முடியம். மனிதர்கள் அடிப்படையாகவே மகிழ்வாகவும், உளத்திருப்தியுடனும் இருப்பதற்கே விரும்புகின்றனர். அவ்வாறு மகிழ்ச்சி, உளத்திருப்தியை நோக்கியதான நகர்வுகளின் போதெல்லாம் முட்டுக்கட்டைகளையும், இடர்பாடுகளையும் சந்திக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் நமது வாழ்வில் நிறையவே ஏற்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில்; மகிழ்ச்சியும் உளத் திருப்தியும் மனிதனை விட்டு துரத்தியடிக்கப்படுகிறது. இதற்கான அடிப்படைக் காரணம் நம்பிக்கையீனம்(Lack of Faith) என அடையாளப்படுத்தப் படுகிறது.

தன்னம்பிக்கை குறைவதற்கான அடிப்படைக் காரணம்.
தன்னைப்பற்றியுள்ள தாழ்வு மனப்பான்மை.
உள நோய்கள்.
சமூக, கலாசார மற்றும் சூழல் தாக்கங்கள்.
தொடர்ச்சியான தோல்விகள்.
சாராய, சிகரட் மற்றும் ஏனைய போதைப்பொருட்களின் பாவனை.
தோல்வி மனப்பான்மை.
·         வாழ்க்கையில் அன்றாடம் இடம்பெறுகின்ற செயற்பாடுகளாக இருக்கலாம் அல்லது நேர்முகப்பரீட்சையாக இருக்கலாம் அல்லது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சவாலாக இருக்கலாம், இவற்றுள் தோல்வி ஏற்பட்டவுடனேயே நம்பிக்கை வீணடிக்கப்படுகிறது. உதாரணமாகப் பரீட்சையை எடுத்துக் கொண்டால், பரீட்சை என்ற பொழுது தன்னையறியாத ஒருவகையான பயம் மனதில் ஏற்படத்துவங்குகின்றது. இத்தகைய பய உணர்வானது அதிகமான சந்தர்ப்பங்களில் தோல்வியை நோக்கியே கொண்டுசெல்கின்றது. இவ்வாறானவற்றுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருப்பதே காரணமாக அமைகின்றது. நவீனகால உளவியலாளர்கள் குறிப்பிடுவதுபோல ஒவ்வொருவருடைய வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் தன்னம்பிக்கையென்ற விடயமே காணப்படுவதாகவும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் போது வெற்றிகான பண்புகள் அதிகரிப்பதாகவும், தன்னம்பிக்கை குறையும் போது தோல்விக்கான பண்புகள் அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சுருக்கமாகக் குறிப்பிடுவதானால் தன்னம்பிக்கை என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் காப்புறுதியாக அமைகின்றது.

எந்தவொரு இலக்கையும் அடைவதற்கு அல்லது ஒரு வெற்றியாளனாக மாறுவதற்கு முதலில் இருக்கவேண்டியது மன உறுதியென அடையாளப்படுத்தப்படுகின்ற தன்னம்பிக்கையாகும். குறிப்பாக எந்தவொரு செயலிலும் வெற்றிபெறுவோம்என்ற உறுதியான நம்பிக்கையானது வாழ்க்கைக்குப் பாதுகாப்பைத் தருகிறது. அத்தோடு எந்தவொரு காரியத்தையும் அடைவதற்கு முன்பும் வெற்றிபெறுவேன்அல்லது வெற்றிபெறுவோம்என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது மிக மிக முக்கிமானதொன்றாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமாயின் அவ்விலக்கை அடைவதற்கு மாத்திரம் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்து உழைக்க வேண்டும். குறிப்பாகக் கூறுவதானால் தன்னிடமுள்ள எதிர்மறை எண்ணக்கருக்களை(Negative) நேர் எண்ணக்கருக்களாக(Positive) மாற்றியமைத்துக் கொள்வது இன்றியமையாதது.

சிலர் எவ்விடயத்தையெடுத்துக் கொண்டாலும் நேர் எதிராக சிந்திப்பதனையே பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். எத்தகையதொரு செயலை எடுத்தாலும் என்னால் முடியாது அல்லது இச்செயல் எனக்குக் கடினமாக இருக்கிறது என்ற நம்பிக்கையீனமாகவும் தோல்வியுணர்வு படைத்தவராகவும் கருத்துக்களை வெளிப்படுத்துவதனை அவதானிக்க முடிகிறது. எந்த சூழ்நிலையிலும் தோற்றுவிடுவேனோ என்று சிந்திக்காதீர்கள் நான் ஒரு வெற்றியாளன் என்ற நம்பிக்கைளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது கடினமான விடயமாக இருந்தாலும், பிரச்சினைக்குரிய விடயமாக இருந்தாலும் தடைகளை உடைத்தெறிந்து முன்னேறிச் செல்ல வழிபிறக்கும். குறிப்பாகக் கூறுவதானால் தன்னம்பிக்கைக்கும் வெற்றிக்கும் இடையில் பெரியதொரு தொடர்பு காணப்படுகிறது. உலகில் அரிய பல சாதனைகளைப் படைத்தவர்கள் சாதனை படைத்தது அவர்களது வலிமையினாலல்ல. அவர்களைச் சாதனையாளர்களாக மாற்றியது அவர்களது கடின உழைப்பும் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் என்பதனை யாரும் மறுக்கமுடியாது.
நாம் எந்தப்பணியை மேற்கொள்கிறோம் என்பது முக்கியமில்லை. அந்தப் பணியில் நம்முடைய ஆற்றலை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம் நமக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி வளர்த்துக்கொள்வதென்பது நம்முடைய ஆர்வத்தையும, முயற்சியையும், நம்பிக்கையையும் பொறுத்தே அமைகிறது. குறிப்பாக நாம் விரும்பியது கிடைக்கவில்லையெனில், கிடைத்ததைவைத்து விரும்பக்கற்றுக் கொள்ளவேண்டும். பொதுவாக நமக்குள்ளே ஏற்படுகின்ற நம்பிக்கையீனமானது தாழ்வு மனப்பான்மை, அச்சம், சந்தேகம், எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை போன்றவற்றுக்கு வித்திடுகிறது. இதன் விளைவாக நம்மிடமுள்ள ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் போகின்றது. வெற்றியை நோக்கிப் பயணிப்பவர் எப்பொழுதும் தனது பணிகளைப் பின்போடுவதனைவிட்டும் தவிர்த்துக்கொள்வதோடு தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக் கொள்வார்.
தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள்.
(1)வெற்றியையையும் தோல்வியையும் சமமாக பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள்.
(2)எச்சூழ்நிலையிலும் உங்களது திறமைகளைப் பிறருடன் ஒப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
(3)கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை நினைத்து சோர்வு கொள்ளாதீர்கள்.
(4)தடைகள் அனைத்தும் வெற்றியின் முதற்படி என்ற மனப்பாங்கை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள்.
(5)எதுவும் தன்னால் முடியும் என்ற என்னத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
(6)நாம் அடைய எண்னும் இலக்குத் தொடர்பாகத் தெளிவையும் நிதானத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
(7)எந்தவொரு செயலிலும் உறுதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
(8)உடற்பயிற்சி செய்வதனைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
(9)நாம் எப்போதும் எம்மை ஒரு வெற்றியாளனாக அடையாளப்படுத்திக்கொள்வதோடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை முதன்மைப் படுத்திக்கொள்ளது முக்கியமாகும். அப்போதுதான் நாம் தன் நம்பிக்கையாளராகவும் மாற முடியும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF