Saturday, April 28, 2012

இலங்கையில் ஜம்மியத்துல் உலமாவுக்குள் பிளவு: புதிய அமைப்பு நடவடிக்கை ஆரம்பம்!


தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பான விடயத்தை அடுத்து, இலங்கையில் பலமிக்க இஸ்லாமிய இயக்கமாக இருந்து வந்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு எதிராக மற்றும் ஒரு சபை நேற்று முதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை என்ற பெயரில் இந்த அமைப்பே நேற்று தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.


இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட போதும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து வந்தது.எனினும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, இலங்கையின் அரசாங்கத்துடன் இணைந்துள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஆதரவாக செயற்படுகிறது. அது தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் விடயத்தில் உரிய எதிர்ப்புகளை வெளியிடவில்லைஎனவே, தாம் இனிமேல் முஸ்லிம் மக்களுக்கான உரிமைகளுக்காக போராட்டப்போவதாக இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது.அதன் அடிப்படையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவில் இணைந்திருக்கப் போவதில்லை என்றும் இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி மிப்லால் தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF