Saturday, April 14, 2012
காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரும்: ஆய்வாளர்கள் தகவல்!
காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்து வந்தால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 21 சதவிகிதம் அதிகம் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.அதிக வேலைப்பளு போன்ற காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்களினால் காலை உணவை சாப்பிடாமல் பலரும் தவிர்த்து வருகின்றனர்.இவ்வாறு காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்து விட்டால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பொது மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு 30 ஆயிரம் ஆண்களிடம் நடத்தப்பட்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF