Saturday, April 14, 2012

1200 கோடி ஆண்டு பழமை வாய்ந்த சிறிய நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு!


ஒக்லகோமா பல்கலைக் கழக வானியல் ஆராய்ச்சி உதவி பேராசிரியர் கிலிக் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 1100 கோடி முதல் 1200 கோடி ஆண்டு பழமை வாய்ந்த 2 சிறிய நட்சத்திரங்களை கண்டுபிடித்தனர்.வெள்ளை நிறத்தினால் ஆன அவை பூமியில் இருந்து 100 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளன. இவற்றை மனிதர்கள் பார்க்க முடியும். இவற்றில் ஒன்று எரியும் அடுப்பு போன்று 'தக தக' வென வெப்பமாகவும், மற்றொன்று சிறிது குளிர்ச்சியாகவும் உள்ளன.


கிலிக் மற்றும் அவரது குழுவினர் 'நாசா'வின் சக்தி வாய்ந்த ஸ்பிட்சர் விண்வெளி டெலஸ்கோப் மூலம் இவற்றை கண்டுபிடித்து 3 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டனர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF