Monday, April 30, 2012

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள்!


நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது.நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.


வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம். குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.


அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.


வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.


நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.


காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.


ஆரஞ்சு: வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.


காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.


பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.


கோதுமை ரொட்டி: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின்(B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இறால் மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.


தேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.


பாலாடைக்கட்டி: சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.


முட்டைக்கோஸ்: குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது.


உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சம்சுங் அறிமுகப்படு​த்தும் 7 CHRONOS 17 நோட்புக்!


இலத்திரனியற் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான சம்சுங் நிறுவனம் 7 CHRONOS 17 என்ற தனது புதிய நோட்புக்கை வெளியிடுகின்றது.1920 x 1080 pixels கொண்ட 17 அங்குல திரையுடன் கூடிய இக்கணணிகள் Core i7 quad core processors களை உள்ளடக்கியுள்ளன.


அத்துடன் இதன் ஆரம்பத் தொழிற்பாடு வேகம் அதிகமாக காணப்படுகின்றது. அதாவது கணணியை இயக்கி வெறும் இரண்டு செக்கன்களிலேயே டெக்ஸ்டொப் பகுதியை செயற்படச் செய்கின்றது.மேலும் இவற்றின் முதன்மை நினைவகமான RAM 8GB ஆகக் காணப்படுகின்றது. தவிர இதன் மின்கலமானது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்த பின் தொடர்ச்சியாக எட்டு மணித்தியாலங்கள் வரை கணணியை இயக்கவல்லது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்!

Dates fruit
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள்.இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும், கைகால் தளர்ச்சி குணமாகும்.


பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும், எலும்புகளை பலப்படுத்தும், இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும். புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.


பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள். சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது. இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நோக்கியாவை பின்னுக்கு தள்ளிய சம்சுங்!


அதிகளவு கைபேசிகளை விற்பனை செய்து சர்வதேச அளவில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது சம்சுங் நிறுவனம்.
உலகம் முழுக்க கைபேசிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் நோக்கியா, சம்சுங் போன்ற முன்னணி கைபேசி நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு பல புதுமைகளை புகுத்தி, புது ரக கைபேசிகளை விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான கைபேசி விற்பனையில் எந்த நிறுவனம் அதிக கைபேசிகளை விற்பனை செய்துள்ளதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


இதில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சம்சுங் நிறுவனம் 93.5 மில்லியன் கைபேசிகளை விற்பனை செய்துள்ளது. நோக்கியா நிறுவனம் 82.7 மில்லியன் கைபேசிகளை விற்பனை செய்து இருக்கிறது.இதன்மூலம் கடந்த 1998ம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த நோக்கியா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து இருக்கிறது சம்சுங்.சம்சுங் நிறுவனத்தின் விற்பனையை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும் போது 36 சதவீதம் அதிகமாகும்.


இதன் மொத்த நிகரலாபம் ரூ23,400 கோடி ஆகும். இதுபோல் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது சம்சுங்.சம்சுங்கின் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி கைபேசிகள் அதிகளவு விற்பனையானதே அந்த நிறுவனம் முதலிடம் வந்ததற்கான முக்கிய காரணம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உலகின் எந்தவொரு இடத்திற்கு​ம் நான்கு மணித்தியால​த்தில் பயணிக்கக் கூடிய ஓடம்!

Artist's impression of the SKYLON spaceplane taking off from a runway. Credit: Reaction Engines Ltd
நாம் வாழும் பூமியில் குறிப்பிட்ட ஒரு இடத்திலிருந்து, விரும்பிய பிறிதொரு இடத்திற்கு வெறும் நான்கே மணித்தியாலங்களில் பயணிக்கும் வாய்ப்பை வழங்கக் கூடிய இயந்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். Skylon எனப் பெயரிடப்பட்டுள்ள இவ்வியந்திரமானது சுமார் 270 அடிகள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.


இவ் இயந்திரமானது ஒக்ஸ்போர்ட்சையரிலுள்ள Reaction Engines Limited (REL) எனும் நிறுவனத்தில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.250 மில்லியன் யூரோ செலவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த இயந்திரம் நடைபெவிருக்கும் சர்வதேச விமானக் கண்காட்சியின் போது பார்வைப்படுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Artist's impression of SKYLON in orbit. Credit: Reaction Engines Ltd
Artist's impression of SKYLON after landing. Credit: Reaction Engines Ltd

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Slate 8 Tabletன் வடிவமைப்பை HP நிறுவனம் வெளியிட்டது!


கணணி உற்பத்தியில் உலகளாவிய ரீதியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான HP நிறுவனம் விரைவில் சந்தைப்படுத்தவிருக்கும் Slate 8 Tabletன் வடிவமைப்பை விளக்கும் படங்களை வெளியிட்டுள்ளது.10.1 அங்குல அளவிலான திரையைக் கொண்டுள்ள இந்த Slate 8 Tabletன் மின்கலமானது எட்டு தொடக்கம் பத்து மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக இயங்கவல்லது.


மேலும் 9.2 மில்லி மீட்டர்கள் தடிப்புடையதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த Tabletகளின் நிறை 1.5 பவுண்டஸ் ஆகும்.இவற்றிற்கான உள்ளீடுகளை லைட் பென்னைப் பயன்படுத்தியும் வழங்கக் கூடியதாகக் காணப்படுவதுடன் அதிகளவு பாதுகாப்பு வசதியையும் கொண்டுள்ளது.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உணவில் உப்பை குறைத்தால் மாரடைப்பு ஏற்படும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!


அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள்.உணவுப் பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறுத்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.திடீரென மாரடைப்பு வருவதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்களை சேர்ப்பதும் தான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.


அதேசமயம் மாரடைப்பு வராமல் தடுப்பதற்காக உப்பைக் குறைத்துக் கொள்வதே, மாரடைப்பு முதலான இதய நோய்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வுத் தகவல் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.இது குறித்து டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையில் 40,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.


இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தோரின் சிறுநீரகத்தில் ரெனின் என்ற புரதமும், அல்டோஸ்டிரோன் என்ற ஹோர்மோனும் அதிகளவில் சுரந்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.உப்பைக் குறைத்தால் அது இருதய நோயை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக உடல் எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் நீல்ஸ் கிரெடல் தெரிவித்துள்ளார்.நாளொன்றுக்கு உணவில் சராசரியாக 6 கிராம் அளவு உப்பைச் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, April 29, 2012

தேள்கள் பற்றிய தகவல்கள் !


தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.


தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறிக்கை


தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.


ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.

தேள் கடிக்கு முதலுதவி


கொடிய வகை தேள்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.


இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி
நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.


முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு
கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.
தேள் விஷம் - சிறந்த வலி நிவாரணி.தேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.


இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடியசாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.

பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels ) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ்.


இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கணிதத்துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய சாதனைகள்!


கணிதத்துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய சாதனைகள் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இன்றைய நவீன கணினிக்கு அவை தான் அடிப்படையாகும்.எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பகுதியில் ஆட்சிப் புரிந்த அப்பாசியக் கலிபா அல்-மாமுனூடைய காலத்தில் தான் முறையான கணித விஞ்ஞான ஆய்வு தொடங்கிற்று. இந்தக் காலக்கட்டத்தில் கணித துறை ஆக்கங்கள் அனைத்தும் முஸ்லிம்களால் மட்டுமே இயற்றப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டு வரை கணிதத்துறையில் முஸ்லிம்களின் அடிப்படையான ஆக்கங்களே காணப்பட்டன.


12 ஆம் நூற்றாண்டில் இவர்களுடைய கணிதவியல் ஆக்கங்களை யூதர்களும்,கிறித்தவர்களும் அரபி மொழியிலிருந்து லத்தின் மற்றும் ஹீப்ரு மொழிகளில் மொழிபெயர்த்தனர். 13 ஆம் நூற்றாண்டு வரை யூத கிறித்துவர்களால் கூட இவர்களுடைய ஆக்கங்களுக்கு நிகரானவற்றை இயற்ற முடியவில்லை.நாம் இன்று எழுதக்கூடிய 1,2,3 என்ற எங்கள் ஆங்கில எண்கள் என்றே பலர் தவறாக எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் அவை அரபி எண்கள் என்று தான் அழைக்கபடுகின்றன. இன்னும் பூஜ்யம் அல்லது ஸைபர் என்ற எண் வடிவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் எண் முறை கணிதத்தை (Arithmetic) முஸ்லிம்கள் மிகவும் எளிமைப் படுத்திவிட்டனர். Zero என்ற ஆங்கில சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் Ciphra எனப்படும். இது Sifr என்ற அரபி சொல்லிலிருந்து தோன்றியதாகும். என்றால் பூஜ்யம் என்று பொருள்படும்.


ஒன்பதாம் நூற்றாண்டில் கலிபா அல் மாமூனுடைய காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் கணித மேதை அபு அப்துல்லா முஹம்மது இப்னு மூசா அல்குவாரிஸ்மி என்பவராவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி ஆகும். 1,2,3 என்ற எண்முறை கணிதம் இவரது பெயராலேயே ஐரோப்பாவிலிருந்து அறிமுகமானது. அதனை ஆங்கிலத்தில் Algorithm என அழைப்பர். அல்குவாரிஸ்மி என்ற பெயரே Algorithm என மருவி வந்துள்ளது Algebra என்ற குரிக்கணிதவியலின் தந்தையும் இவர்தான். இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். அல்ஜபர் என்ற அரபி சொல்லிருந்து தான் Algebra என்ற சொல் பிறந்தது.வடிவக்கணிதம் (Geometry ), முக்கோணக்கணிதம் (Trigonometry ) என்ற கணித முறைகள் ஏற்படுத்தியவர்களும் முஸ்லிம்களே.


அரபியர்களின் நடமாடும் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படும் அல்-கிந்தி என்பவர் 270 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில கணித நூல்களும் அடங்கும். இவரது முழுப்பெயர் அபுயூசுப் யாகூப் இப்னு இசாக். இவர் வாழ்ந்தக் காலம் கி.பி 801 - 873 ஆகும்.அல் குவாரிஸ்மி மற்றும் அல் கிந்தினுடைய எழுத்துகளின் வழியாக தான் எண்முறை கணிதம் மேற்குலகிற்கு நன்கு அறிமுகமானது. இவர்களுக்கு பின் எண்ணற்ற பல முஸ்லிம் கணித மேதைகள் தோன்றி கணிதவியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு தொண்டாற்றியுள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, April 28, 2012

சிரியா இராணுவத்தினரால் உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞன்!


சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் ஆதரவாளர்கள் இளைஞன் ஒருவனை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள ஷின் அல் அபிடின் நகரில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்த பின், அனைவரும் போராட்டத்தில் ஈடுபட சென்றனர்.


அப்போது மக்கள் கூட்டத்துக்குள் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 11 பேர் உடல் சிதறி பலியாகினர், 28 பேர் காயம் அடைந்தனர். இதேபோன்று டமாஸ்கஸ், பனியாஸ் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டக்காரர்கள் கூடிய இடங்களில் குண்டுகள் வெடித்தன.இந்த சம்பவங்களுக்கு மத்தியில் இளைஞர் ஒருவன் நடுத்தெருவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டான்.இந்நேரத்தில் ஐ.நாவின் பிரதிநிதிகள் சிலரும் அங்கு கூடியிருந்தனர், இளைஞனை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுத்தும், தோல்வியில் முடிந்தது.


இந்த தாக்குதலுக்கு ஐ.நா பொது செயலாளர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் இதுபோன்ற செயல்கள் சமாதான நடவடிக்கைக்கு ஊறு விளைவிக்கும் எனவும் கூறியுள்ளார். ஆனால் இதனை சிரியா அரசு மறுத்துள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இலங்கையில் ஜம்மியத்துல் உலமாவுக்குள் பிளவு: புதிய அமைப்பு நடவடிக்கை ஆரம்பம்!


தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பான விடயத்தை அடுத்து, இலங்கையில் பலமிக்க இஸ்லாமிய இயக்கமாக இருந்து வந்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு எதிராக மற்றும் ஒரு சபை நேற்று முதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை என்ற பெயரில் இந்த அமைப்பே நேற்று தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.


இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட போதும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து வந்தது.எனினும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, இலங்கையின் அரசாங்கத்துடன் இணைந்துள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஆதரவாக செயற்படுகிறது. அது தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் விடயத்தில் உரிய எதிர்ப்புகளை வெளியிடவில்லைஎனவே, தாம் இனிமேல் முஸ்லிம் மக்களுக்கான உரிமைகளுக்காக போராட்டப்போவதாக இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது.அதன் அடிப்படையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவில் இணைந்திருக்கப் போவதில்லை என்றும் இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி மிப்லால் தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, April 27, 2012

அமெரிக்காவில் மரண பீதியை ஏற்படுத்தும் மயான அமைதி அறை!


உலகிலேயே மிகமிக அமைதியான அறை அமெரிக்காவில் உள்ளது. இந்த அறையில் உட்கார்ந்தால் இதயம், நுரையீரல், இரைப்பை இயங்கும் சத்தம் கூட கேட்கும்.இந்த அறையில் முக்கால் மணி நேரத்துக்கு மேல் யாரும் உட்கார்ந்தது இல்லை. தியேட்டர்கள், பெரிய அரங்கங்கள், இசை நிகழ்ச்சிக் கூடங்கள் ஆகியவற்றில் இரைச்சல், எதிரொலி ஆகியவற்றை தடுக்கும் வகையில் பிரத்யேக வசதிகள் செய்யப்படும்.


அரங்கத்தின் சுவர், தரை, கூரை ஆகியவற்றில் ஒலியை உள்வாங்கக்கூடிய பொருட்கள் பொருத்தப்படும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகர் மின்னபாலிஸ் நகரில் உள்ள ஆர்பீல்டு ஆய்வுக்கூடத்தில் ‘மயான அமைதி’ அறை உருவாக்கப்பட்டுள்ளது.‘அன்எக்கோயிக் சேம்பர்’ என்பது இதன் பெயர். ஸ்டீல், கான்கிரீட் என இரண்டு அடுக்கு சுவர்களை கொண்டு இந்த சவுண்ட் புரூப் அறை அமைக்கப்பட்டுள்ளது.


99.99 சதவீதம் எதிரொலி தடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட உலகின் மிகமிக அமைதியான இடம் என்று கடந்த 2004ம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது இந்த அறை.பசங்க சத்தம் தாங்க முடியல. கொஞ்ச நேரம் போய் உக்கார்ந்து விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் இந்த அறையில் அமர முடியாது. காரணம், அங்கு நிலவும் மயான அமைதி மரண பீதியை ஏற்படுத்தும் என்கிறார் ஆர்பீல்டு ஆய்வுக்கூட நிறுவனர் ஸ்டீவன்.இதுபற்றி அவர் கூறுகையில், விண்வெளிக்கு செல்பவர்கள் துளிக்கூட சத்தம் இல்லாத இடத்தில் வெகு நேரம் இருந்து தங்களை தயார்படுத்திக் கொண்டால் தான் பயமின்றி விண்வெளிக்கு செல்ல முடியும். அதற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் இந்த அறை அமைக்கப்பட்டது.மேலும், உலகப்புகழ் பெற்ற ஹர்லி டேவிட்சன் நிறுவனம் குறைந்த சத்தம் கொண்ட பைக்குகள் தயாரிக்கவும் இந்த அறையை பயன்படுத்திக் கொள்கிறது. சிறிதுகூட சத்தம், எதிரொலி கேட்காது என்பதால் அமைதியாக இருக்கும் என்று நினைக்கலாம்.


ஆனால், அந்த அமைதி மிகவும் பீதி தருவதாக இருக்கும். அன்எக்கோயிக் சேம்பர் மயான அமைதியுடன் இருப்பதால் இதயத்தின் லப்டப் சத்தம், நுரையீரலின் சுவாச சத்தம், இரைப்பையின் செரித்தல் சத்தம் கூட தெள்ளத் தெளிவாக நமக்கு கேட்கும்.நேரம் ஆகஆக ரத்த ஓட்டம் கூட பெரும் இரைச்சல் போல கேட்கும். மனதில் குழப்பங்கள் ஏற்படும். நடக்காதது எல்லாம் நடப்பது போல தோன்றும். அன்எக்கோயிக் சேம்பரில் ஒருவர் அதிகபட்சம் முக்கால் மணி நேரம் உட்கார்ந்தது தான் சாதனையாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆபத்து என்று ஸ்டீவன் கூறினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Boeing 777 ஜெட் விமானம் கட்டப்படும் முறை!

நாடு கடந்த பயணங்களுக்கு பெரும் உதவியாக ஆகாய விமானங்கள் காணப்படுகின்றன. அவற்றிலும் தொழில் நுட்பங்கள், பிற வசதிகளைக் கொண்டு வெவ்வேறு வகைகள் காணப்படுகின்றன.அதன்படி Boeing 777 ஆனாது சுமார் 300 பயணிகளைக் காவிச்செல்லக்கூடிய பிரமாண்டமான விமானம் ஆகும். இவ்விமானம் இரட்டை என்ஜின்களில் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரையிறக்கத்திற்கு பயன்படும் வகையில் ஆறு சில்லுகளைக் கொண்டுள்ளன.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஜிம்பாப்வேயில் மூன்று முட்டையின் விலை 100 பில்லியன் டொலர்!


ஆப்ரிக்காவில் உள்ள ஜிம்பாப்வேயில் பண வீக்கத்தை தொடர்ந்து சில்லரை தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.அப்போது அந்நாட்டின் டொலர் மதிப்பு அமெரிக்க டொலருக்கு நிகராக இருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது அந்த நாட்டின் பணவீக்கம் 231 மில்லியன் சதவீதமாக உள்ளது.

ஜிம்பாப்வேயின் ஒரு 500 மில்லியன் டொலர், இரண்டு அமெரிக்க டொலருக்கு சமமானது. பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அந்நாடு 100 மில்லியன், 250 மில்லியன் மற்றும் 500 மில்லியன் டொலர்களை அறிமுகப்படுத்தியது.ஜிம்பாப்வேயில் ஒரு பனியன் விலை, மூன்று பில்லியன் டொலர்கள். விமான நிலையத்தில் காரை நிறுத்துவதற்கு 400 பில்லியன் டொலர் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இதன் சர்வதேச மதிப்பு, ஒரு அமெரிக்க டொலர் தான்.மூன்று முட்டைகள் வாங்க 100 பில்லியன் டொலர் கொடுக்க வேண்டும். அந்நாட்டில் பணத்தின் மதிப்பு சரிந்து கொண்டே போனதால், பெரும்பாலான இடங்களில் ஜிம்பாப்வே நாணயங்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படுகின்றன.பெரும்பாலான இடங்களில் அமெரிக்க டொலர் புழக்கத்தில் இருந்தாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. தற்போது இந்த டொலருக்கு சில்லரை கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. உலகில் ஐந்துக்கும் அதிகமான நாடுகள் அமெரிக்க டொலர்களை பயன்படுத்துகின்றன.


ஆனால் இந்த நாடுகள் உள்ளூர் நாணயங்களை பயன்படுத்துகின்றன. ஈக்வடார் நாட்டிலும் இதே போன்ற பிரச்னை தான். அங்கும் அமெரிக்க டொலரைத் தான் பயன்படுத்துகின்றனர்.எனினும் அவர்கள் உள்நாட்டு நாணயத்தை தாராளமாக அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளதால் சில்லரைக்கு பிரச்னையில்லை. ஆனால் ஜிம்பாப்வேயில் உள்ளூர் நாணயம் கிடையாது. தென் ஆப்ரிக்க நாணயங்களைத் தான் பயன்படுத்துகின்றனர்.அதுவும் மிகவும் குறைந்த அளவில் தான் கிடைக்கிறது.எந்த கடைக்குச் சென்றாலும் சில்லரை இல்லை என்ற புராணம் தான் ஒலிக்கிறது. சில்லரை தட்டுப்பாட்டை சமாளிக்க, கடைகளில் சாக்லெட், பேனா, சிகரெட், காய்கறி கடைகளில் கூடுதலாக தக்காளி, வெங்காயம் போன்றவை கொடுக்கப்படுகின்றன.மளிகை கடையில் பொருட்கள் வாங்கினால், ஸ்டீல் டம்ளரை சில்லரைக்கு பதில் தருகின்றனர். பெரிய வணிக வளாகங்களில் சில்லரைக்கு பதில் கடன் சீட்டு தருகின்றனர். இந்த பிரச்னையைத் தீர்க்க புதுப் புது வழிகளை கையாண்டும் ஜிம்பாப்வே அரசால் இதற்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, April 25, 2012

உலகில் தீவிரவாதம் அதிகரிக்க யார் காரணம்?

இன்றய கால கடத்தில் ஒவொறு நாடும் தங்களது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மின் தேவைக்காக யுரோனியத்தை செறிவூட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இதில் எந்த நாட்டையும் நாம் குறை கூற முடியாது. 


இப்பொழுது ஈரான் யுரோனியத்தை செறிவூட்டுவதை அமேரிக்கா எதிர்கின்றது. ஈரான் அனு ஆயுத சோதனை நடத்துவது அந்த நாட்டின் உரிமை அதை சோதனை நடத்த கூடாதென்று சொல்ல அமெரிகாவுக்கு என்ன உரிமை இருகின்றது. ஈரான் அனு சோதனை நடதியது அனு ஆயுதம் தயாரிப்பதற்காக அல்ல மின்சாரம் தயாரிக்கதான் என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. அந்த நாடு மின்சாரம் தயாரிதால் என்ன அனு ஆயுதம் தயாரித்தால் என்ன அது அந்த நாட்டின் உரிமை. அனு ஆயுதத்தை குவித்து வைத்திருக்கும் அமேரிக்கா அனுவை செரிவூட்டுவதை கண்டிக்க என்ன அருகதை இருக்கின்றது. ஈரான் அனுவை செரிவூட்டுகின்றதென்றால் அதன் அண்டை நாடான இஸ்ரேல் அனு ஆயுதம் வைத்துள்ளது.


ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் பிரச்சினை இருந்து வருவது உலகரிந்த விசயம் அப்படி இருக்கும் பொழுது தனது எதிரி நாடு பலமான ஆயுதம் வைத்திருக்கும் பொழுது ஈரானும் தனுது ரானுவத்தை பலபடுத்த வேண்டியது இன்றியமையாதது. அப்படி இருக்கும் பொழுது அமெரிக்கா எப்படி ஒரு நாட்டை அனு ஆயுதம் தயாரிக்க கூடாது என்று கூறிக்கொண்டு மற்றொரு நாட்டை அனு ஆயுதம் தயாரிக்க அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்.


இப்படிதான் ஈராக்கும் பயங்கரமான ஆயுதம் வைத்திருகின்றது என்று கூறி அதன் மீது போர் தொடுத்தது. ஈராக் அயுதம் வைத்திருப்பது பெரிய குற்றமா அப்படி பார்த்தால் உலகில் உள்ள ஆயுதத்தில் எழுபது சதவிகிதம் வைத்திருக்கும் அமெரிக்கவுக்கு என்ன தண்டனை கொடுப்பது. சரி ஈராக் ஆயுதம் வைத்தைருந்தது என்ற காரனத்தை கூறித்தானே போர் தொடுத்தது. அப்படி என்ன ஆயுதத்தை ஈராக்கில் கண்டு பிடித்தது. லட்ச்சக் கனக்கான மக்களை கொன்று குவித்ததை தவிர அங்கு என்ன ஆயுத்ததை கண்டு பிடித்தது. எத்தைனை மக்கள் கை கால்களை இழந்து ஊனமானார்கள் இதற்கு அமெரிக்கா என்ன பதில் சொல்லப் போகின்றது. இபொழுத்து என்னவென்றால் ஈரான் அனு ஆயுதம் வைத்திப்பதாக கூறிக்கொண்டு அந்த நாட்டின் அருகாமையில் தனது அனு ஆயுத போர்கப்பலை நிறுத்தியுள்ளது. 


ஈரான் மீது போர்தொடுத்தால் அதனால் பாதிக்க போவது அப்பாவி மக்கள்தான். இப்படி ஒரு நாட்டின் மீது அனியாயமாக போர் தொடுத்தால் அதனால் பாதிக்கபட்ட மக்கள் சொந்த பந்தங்களை இழந்த மக்கள் தங்களின் எதிரிப்பை காட்ட ஆயுதத்தை தான் கையிலெடுப்பார்கள். பலம் வாய்ந்த அமெரிக்காவை நேரடியாயக தாகமுடியாதென்பதால் பொது இடத்தில் குண்டு வைக்கதான் செய்வார்கள் போரால் பாதிக்க பட்ட மக்களின் உனர்வுகளை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் போரின் பாதிப்பை அனுபவித்தால் தான் புரிந்து கொள்ள முடியும். அது தான் ஈராக்கில் நடந்து கொண்டு இருக்கின்றது. தீவிரவாதிகள் தானாக முலைப்பதிலை. ஒரு நாட்டின் மீதோ அல்லது ஒரு இனத்தின் மீதோ அனியாயமாக தாக்குதல் நடத்துவதன் மூலம் தீவிரவாதத்தை விதைக்கின்றனர். (அதற்காக ஆயுதத்தை கையிலெடுத்து அப்பாவி மக்களை கொல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இங்கு நான் சொல்ல வருவது அமெரிக்கா போன்ற நாடுகள் விதைத்த திவிரவாதம் என்னும் உயிர் கொல்லி இன்று நம் கலுத்திற்கு மேல் கத்தியாக தொங்கிகொண்டு இருக்கின்றது.) 


தீவிரவாதத்தை உருவாக்குவதில் அமெரிகாவிற்குதான் முதல் இடம். இந்த லட்ச்சனதில் தீவிரவாததை ஒடுக்குவத்துதான் அமெரிக்க அரசின் குறிக்கோளாம் ஒபாமா கூறிக்கொண்டு இருக்கின்றான். இங்கு இன்னொரு விசயத்தை கவனிக்க வேண்டி இருக்கின்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் அனு ஆயுத சோதனை நடத்தும் பொழுது அமெரிக்கா இப்படி போர் தொடுக்கவில்லை.ஆனால் ஈரான் மீது மட்டும் போர் தொடுக்க வரிந்து கட்டிக்கொண்டு தயாராவது அனு ஆயுதம் தயாரிப்பதை எதிர்பதற்க்காக அல்ல. அந்த நாட்டின் என்னை வளத்தை கைபற்ற தான் என்பது தெளிவாக தெரிகின்றது. இப்படி அனியாயம் செய்யும் இந்த அமெரிக்க புனைக்கு மனி கட்டுபவர் யார்? 


இந்த நேரத்தில் நாம் மற்றொரு விசையத்தையும் உற்று நோக்க வேண்டி உள்ளது. ஈரான் அணு சோதனை நடத்திய இந்த நேரத்தில் அனைத்து நாடுகளின் பார்வையும் ஈரான் பக்கம் திரும்பி உள்ளது என்பதை அனைவருக்கும் தெரியும் அது ஈரானுக்கும் தெரியாமல் இல்லை. இந்த சூழலில் இருக்கும் எந்த ஒரு நாடும் மற்ற நாட்டை பகைத்து கொள்ள விரும்பாது. அப்படி இருக்கு பொழுது ஈரான் எப்படி இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மேல் இந்தியாவிலும் தாய்லாந்திலும் தாக்குதல் நடத்துவார்கள். இந்தியா அரசு ஈரான் மீது போர்தொடுக்க ஆதரவு தரமாட்டார்கள் என்பதை அறிந்த அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவுத்துறையின் வேலைதான் இந்த இஸ்ரேல் அதிகாரிகள் மேல் தாக்குதலுக்கு காரணமாக இருக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.


ஆனால் வழக்கம் போல இந்திய ஊடகங்கள் "இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மேல் ஈரான் தீவிர வாதிகள் தாக்குதல்" என்று செய்தி வெளியிடுகின்றன. உலக அலவில் இன்று நடத்த படும் பெரும்பாலான தாக்குதலுக்கு பின்னால் இப்படிப்பட்ட உளவுத்துறையின் பங்கு இல்லாமல் இல்லை, ஆனால் ஒவொரு சம்பவத்திற்கும் ஏதாவது ஒரு அப்பாவி மேல் வழக்கை போட்டு அவர்களின் வாழ்கையை வீணாக்கும் நடவடிக் கைகளில் அனைத்து நாட்டு காவல் துறை ஈடுபடுவதையும் மறுக்க முடியாது. இப்பொழுது சொல்லுங்க யார் தீவிரவாதி அப்பாவி மக்களை அனியாயமாக கொன்று குவிக்கும் அமெரிக்காவா அல்லது இழந்த உரிமயை மீட்க்க போராடும் அப்பாவி மக்களா? 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கடல் பசு பற்றிய தகவல் !


கடல் பசு பற்றிய தகவல்கள் தமிழ் நாட்டில் பெரும்பாலும் கடல் சார்ந்த ஊர்களுக்கு மட்டும் தான் தெரியும் மற்ற நகர்புற மக்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு குறைவு தான் . ஒரு காலத்தில் இந்த கடல் பசுவை மீன் பிடிப்பவர்கள் பிடித்து விற்பனை செய்வது வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது கடல் பசுவை வேட்டியாடுவதர்க்கு தடை உத்தரவு பிறபிக்க பட்டு உள்ளது அதனால் கடல் பசுவை யாரும் இப்போது வேட்டை யாடுவது இல்லை . அப்படி மீறி வேட்டை யடுபவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்கள் கடுமையாக தண்டிக்க படுகின்றன . 

பிரம்மாண்டமான ஸ்டெல்லர் கடல் பசுக்கள் (Steller's sea cow) ஒரு காலத்தில் வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ஏராளமாக இருந்தன ஆனால் இன்று இந்த உரினம் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது . ஜார்ஜ் வில்ஹெம் ஸ்டெல்லர் (Georg Wilhelm Steller) என்பவர்தான் முதன்முதலில் 1741ஆம் ஆண்டு கமாண்டர் தீவுகள் பகுதியில் இப்படிஒரு மெகா பசு கடலில் மிதந்து கொண்டிருப்பது பற்றி உலகிற்கு தெரியப்படுத்தினார். அதனால் இந்த வகை கடல் பசுக்களுக்கு அவருடைய பெயரையே வைத்துவிட்டார்கள்.


இப்படி ஒரு உயிரினம் இருப்பது தெரியவந்த 27 ஆண்டுகளில் ஐரோப்பியர்கள் இதன் கதையை முடித்துவிட்டார்கள். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. கடல் பயணம் மேற்கொண்டவர்கள் இதன் கறியை சாப்பிட்டுவிட்டு, தோலைப் படகு செய்யப் பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பு, வெண்ணைக்கு மாற்றாக இருந்ததுடன், விளக்கு எரிக்கவும் பயன்பட்டது. புகையும், வாசனையும் இல்லாமல் நீண்ட நேரம் நின்று எரிந்ததால், இதன் கொழுப்பு எண்ணெய்க்கு அந்த காலத்தில் பயங்கர கிராக்கி இருந்தது.

இப்படி மனிதர்களுக்கு பலவிதங்களில் பயன்பட்டதால் ஸ்டெல்லர் கடல் பசுக்கள் மின்னல் வேகத்தில் வேட்டையாடப்பட்டன. 10 மெட்ரிக் டன் எடை கொண்ட இந்த பசுக்களால் 5 நிமிடங்களுக்கு மேல் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது. அதனால் எளிதாக வேட்டைக்காரர்களின் கண்களில் சிக்கிக் கொள்ளும். சுமார் 30 அடி நீளம் உள்ள உடலை தூக்கிக் கொண்டு இவற்றால் வேகமாக நீந்தவும் முடியாது என்பதால், மிகவும் எளிதாகவே வேட்டையாடப்பட்டன.

இவற்றிற்கு பற்கள் கிடையாது. அதற்கு பதிலாக மேல் வரிசையிலும், கீழ் வரிசையிலும் இரண்டு தட்டையான வெள்ளை நிற எலும்புகள் இருக்கும். பொதுவாக இவை கடலில் இருக்கும் பாசி, புற்கள் போன்றவற்றையே உட்கொண்டதால், பல் என்னும் கிரைண்டர் இவற்றிற்கு தேவைப்படவில்லை. இவை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட இன்றைய கடல் பசுக்கள் போலவே இருக்கும். இதனைப் பற்றிய ஸ்டெல்லரின் விவரிப்புகளைப் படிக்கும்போது, இது மிகவும் அமைதியான உயிரினம் என்றே தோன்றுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ் பழம்!


செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன.நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது, அப்படியே இருக்கும்.


திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.


அடங்கியுள்ள சத்துக்கள்: உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.


ரத்தசோகையை கட்டுப்படுத்தும்: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.


காமாலை நோய் குணமடையும்: மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.


உடல்புஷ்டிக்கு: இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும் முன் 20 பழங்களை சுத்தம் செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும்.மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நீரிழிவு நோயால் ஏற்படும் பார்வை இழப்பை சரிசெய்வதற்கு!


நீரிழிவு நோயால் கண்பார்வை அதிகளவு பாதிக்கப்படும், இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை குணமாக்குவது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கின்றனர் விழித்திரை நிபுணர்கள்.முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவு நோய் மிக வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப் படி உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.


நீரிழிவு நோயை டைப்-1, டைப்-2 என்று 2 வகையான பிரித்துள்ளனர். 30 வயதுக்குள் நீரிழிவு நோய் வருவதை டைப்-1 என்றும், 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் வருவதை டைப்-2 என்றும் பிரித்துள்ளனர்.


டைப்-1ன் வகையை சேர்ந்த நோயாளிகளுக்கு 15 ஆண்டுகளாக நீரிழிவு இருந்தால் அவர்களது கண்பார்வை 100 சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.டைப்-2 வகையினருக்கு நீரிழிவு நோய் 15 ஆண்டுகள் நீடித்தால் 30 சதவீதம் பேரின் கண்பார்வை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தால், இந்நோயாளிகள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.


அதிலும் விழித்திரை நிபுணரிடம்(ரெட்டினா ஸ்பெஷலிஸ்ட்) சென்று `செக்-அப்' செய் வது மிகவும் நல்லது. சிலருக்கு விழித்திரையில் வலி அதிகமாக இருக்கும். அப்போதே அவர்கள் விழித்திரை நிபுணரிடம் பரிசோதனை செய்து கொண்டால் கண் பார்வை இழப்பில் இருந்து தப்பி விடலாம்.நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல 40 வயதை கடந்த அனைவரும் கண் மருத்துவரிடம் சென்று கண் பிரஷ்ஷரை பரிசோதித்து கொள்ள வேண்டும். இந்த கண் பிரஷ்ஷர் அதிகமானால் கண்பார்வை குறைபாடு ஏற்படும். பரிசோதனை எப்.எப்.ஏ. என்ற கண் பரிசோதனை மூலம் நீரிழிவால் ஏற்படும் ரத்த நாள கோளாறுகளை கண்டறிய முடியும்.


இப் பரிசோதனைக்கு பிறகு கண்ணுக்குள் இன்ட்ரா விட்ரியாஸ் என்ற ஊசி மருந்தை ஊசி மூலம் செலுத்துவோம். கண்ணுக்குள் வி.இ.ஜி.எப். ரசாயனம் உண்டு. இந்த ரசாயனத்துக்கு எதிராக வி.இ.ஜி.எப். மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் ரத்தநாள கோளாறு குணமாகும்.விழித்திரையில் ஏற்படும் கோளாறை தடுக்க சிலிகான் ஆயில் ஊசி மூலம் செலுத்தப்படும். இந்த ஆயிலானது விழித்திரையை பலப்படுத்தும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கணணி நடவடிக்கைக​ளைக் கண்காணிக்க உதவும் StatWin Pro 8.7!


தனிப்பட்ட, வியாபாரத் துறைகளில் கணணிகளைப் பயன்படுத்தும் போது அவற்றின் பாவனை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள பல மென்பொருட்கள் பயன்படுகின்றன.இவ்வாறு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் StatWin Pro 8.7 மென்பொருளானது மிக எளிமையாகக் கையாளக் கூடிய பயனர் இடைமுகத்தையும், பல அம்சங்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.

இதன் மூலம் குறித்த நேர இடைவெளி, நாள், வாரம், மாதம், வருடம் என பல்வேறுபட்ட முறைகளில் கணணியின் தொழில்பாட்டை கண்காணிக்க முடியும்.மேலும் உள்நுளைந்த பயனர் பெயர், நேரம், நிறுவப்பட்ட மென்பொருடகள், ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்பனவற்றை அறிந்து கொள்ள முடியும்.இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டுமே செயற்படக்கூடியது.

தரவிறக்க சுட்டி.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Ashampoo Office 2010 மென்பொருளை லைசன்ஸ் கீயுடன் இலவசமாக தரவிறக்கம் செய்ய!


தற்போது அலுவலக தேவைகளுக்கு அதிகளவானோரால் பயன்படுத்தப்படும் மென்பொருள் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட MS Office ஆகும்.எனினும் இதனது முழுமையான பதிப்பின் பயனைப் பெறுவதற்கு 120 டொலர்கள் என்ற தொகையை செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டும்.


ஆனால் தற்போது இதற்கு பல்வேறுபட்ட மாற்று மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றுள் MS Office ற்கு சிறந்த மாற்றீட்டு மென்பொருளாகக் காணப்படுவது Ashampoo Office ஆகும். எனினும் இதனையும் 60 டொலர்கள் செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டும்.எனினும் தற்போது இலவசமாக லைசன்ஸ் கீயுடன் தரவிறக்கக்கூடிய தற்காலிக வசதி ஒன்றை Ashampoo நிறுவனம் வழங்கியுள்ளது. பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தரவிறக்கம் செய்ய முடியும்.


1. தரப்பட்டுள்ள இணைப்பிற்கு சென்று கேட்கப்பட்டுள்ளவற்றை பூர்த்தி செய்து Submit Registration என்பதை அழுத்தவும். http://www.softmaker.de/reg/ash10_en.htm


2. தற்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குள் உள்நுளையவும். அதனுள் SoftMaker எனும் பெயரில் இருக்கும் மின்னஞ்சலில் உங்களுக்கான லைசன்ஸ் கீ அனுப்பப்பட்டிருக்கும்.


3. அடுத்ததாக பின்வரும் இணைப்பிற்கு சென்று Ashampoo Office 2010 இனை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.


http://www.ashampoo.com/dl/0338/ashampoo_office2010_fm.exe பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

மரப் பாலத்தில் சிக்குண்ட பார ஊர்தி!

மரத்தினால் செய்யப்பட்ட பாலத்தில் வரும் பார ஊர்தி முடியும் தறுவாயில் சிக்குண்ட காட்சி!


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வீடியோ கேம் வாங்கித் தராத தந்தையைச் சுட்டுக் கொன்ற 4 வயது சிறுவன்!


சவுதி அரேபியாவில் தனது தந்தையை 4 வயது மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சவுதி அரேபியாவின் தெற்கு ஜிசான் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அந்நாட்டு அஸ்ராக் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.தந்தையிடம் பல நாட்களாக வீடியோ கேம் வாங்கித் தருமாறு நச்சரித்து கொண்டிருந்த அச்சிறுவன் அலுவலகம் சென்ற தந்தை வெறும் கையுடன் வந்ததை பார்த்து கோபமடைந்துள்ளான்.தந்தை உடை மாற்றும் போது கீழே வைத்த அவரது துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுள்ளான். இதில் தலையில் குண்டு பாய்ந்ததை அடுத்து சிறுவனின் தந்தை சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஆறறிவு என்பதற்காக இப்படியெல்லாம் சிந்திப்பார்களா?

மனிதர்களின் சிந்தனையும் ஆளுக்காள் வேறுபட்டுக் காணப்படுகின்றது என்பது என்வோ உண்மைதான். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, April 23, 2012

நைல் நதி உற்பத்தியாகும் ஏறி எது என்று உங்களுக்கு தெரியுமா?



எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அழகிய பாகிர் தார் நகரில் உள்ளது அந்த பிரம்மாண்ட ஏரி. ‘தானா ஏரி’ என்று அழைக்கப்படும் அந்த ராட்சத ஏரியின் பரப்பளவு சுமார் 3,600 சதுர கிலோ மீட்டர்கள். இந்த ஏரிக்குள் 37 தீவுகள் உள்ளன. இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம், இந்த பிரம்மாண்ட ஏரியில் இருந்துதான் உலகின் நீளமான நைல் நதி உற்பத்தியாகிறது.


தானா ஏரியில் உள்ள தீவுகளில் சரித்திர மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தேவாலயங்களும், மடாலயங்களும் உள்ளன. பல்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த தேவாலயங்களில் உலகின் பல அரிய ஓவியங்கள் உள்ளன. அந்த காலத்தில் புற உலகத் தொடர்பே இல்லாமல் தனித்திருந்ததால் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற நாட்டின் அரிய கலைப் பொக்கிஷங்களையும், மதச் சின்னங்களையும் இங்கு பாதுகாத்து வைத்தனர். அக்காலத்தில் எத்தியோப்பியாவை ஆண்ட ஐந்து சக்கரவர்த்திகளின் உடல்களின் மிச்சங்களும் இங்குள்ள டாகா இஸ்டஃபேனஸ் என்ற தீவில் வைக்கப்பட்டுள்ளது.

பறவை நேசர்களுக்கும் தானா ஏரி ஒரு சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. காரணம், இந்த ஏரியின் கரைப் பகுதிகளில் பல்வேறு இனப் பறவைகள் காணப்படுகின்றன. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இங்கு ஏராளமான பறவைகள் வருகின்றன. எனவே ஏரி முழுவதும் ஆங்காங்கே காணப்படும் இந்த பல வண்ணப் பறவைகளைப் பார்த்துக் கொண்டே படகில் பயணம் செய்யும் அற்புதமான அனுபவத்திற்காக ஆண்டுதோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.


உலகின் நீளமான நைல் நதி இந்த தானா ஏரியில் இருந்துதான் தனது பயணத்தைத் தொடங்குகிறது. இங்கு தொடங்கி சூடானின் பாலைவனங்கள் வழியாகப் பயணித்து எகிப்து வரை செல்கிறது. தானா ஏரியில் இருந்து பிரிந்த இடத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் நைல் நதி வேகம் பிடிக்கத் தொடங்குகிறது. அப்பகுதியில் 40 மீட்டர் அகலத்தில் 45 அடி உயரத்தில் இருந்து பெரும் ஓசையுடன் விழும் நைல் நதி.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

குரல் மூலம் கடவுச்சொல்​லை ஏற்படுத்தக்​கூடிய USB driveகள் அறிமுகம்!


கணணித் துறையில் தகவல்களை இடமாற்றாம் செய்வதற்கும், சேமிப்பதற்கும் USB driveகள் மிகுந்த பயனுள்ளதாகக் காணப்படுகின்றன.
எனினும் தனிப்பட்ட கோப்புக்களை சேமித்து வைத்திருக்கும் போது பாதுகாப்பற்ற நிலை காரணமாக கடவுச்சொற்களை கொடுப்பது வழமை.


இக்கடவுச்சொற்கள் இதுவரை காலமும் எழுத்துக்கள், விசேட குறியீடுகள், இலக்கங்கள் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்தவையாகக் காணப்பட்டன.எனினும் தற்போது குரல் பதிவு மூலம் கடவுச்சொற்களை உருவாக்கி பாதுகாக்கும் தொழில்நுட்பத்துடன்கூடிய USB driveகள் அறிமுகமாகின்றன.தற்போது 8GB அளவுடைய கோப்புக்களை சேமிக்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள USB driveகள் விண்டோஸ், அப்பிளின் மக் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன.இவை 50 அமெரிக்க டொலர்கள் பெறுமதி உடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இதயத்தை பாதுகாக்கும் காலிப்ளவர்!


காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம்.முட்டைக்கோஸும், காலிப்ளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும்.காலிப்ளவர் ஒரு குளிர்பிரதேச காய்கறி. இது குளிர்காலங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது. இத்தாலியில் அதிக அளவில் விளைவிக்கப்பட்ட காலிப்ளவரானது முதன் முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது.அக்காலத்தில் தென்னிந்திய மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாததால் இதற்கு தமிழில் பெயர் இல்லை. ஆங்கிலப் பெயரான காலிப்ளவர் என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது.


காலிப்ளவரில் பொட்டாசியம், விட்டமின் B6 ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கியுள்ளன. மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும்.இந்த காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும். இதில் ஒரு வித தாவர அமிலம் உள்ளது. வேகும் போது கந்தகக் கலவையாக மாறி வாசனை வருகிறது.


அதிக நேரம் வேக வைத்தால் வாசனை அதிகமாகும். சத்தும் வீணாகும். அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிவிடும். இரும்பு இதை பிரவுன் கலராக்கிவிடும்.இதை தண்ணீரில் வேகவைப்பதை விட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். வைட்டமின் சி சத்து அதிகரிக்கும்.மேலும் காலிப்ளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது.பூ வேகும் போது Isothiocyantes என்னும் ரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது.இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, April 22, 2012

உலக அதிசியம் பிரமிடு பற்றிய தகவல் !!!


நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசியங்களில் மிக முக்கியமான ஒன்று பிரமிடு உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தை கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடைக்கிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான 'கிஸா' பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.


தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை . உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத விடையங்களை உள்ளடக்கியதுஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .


இவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். சுண்ணாம்பு கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செயப்பட்டு க்ரநைட் சுண்ணாம்பு கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டன .இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்பு கற்கள் எவ்வாறு அவளவு உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கபட்டன என்பதும், அத்தகைய பாலைவன பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று.புற கற்களில் வித்தியாசமான எழுத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன இவை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வராலாற்று ஆய்வலர்கள் கருத்து .


கிசவில் உள்ள மூன்று பிரமிடுகளும் .பைதகராஸ் என்கிற கணித விதிகளிபடியும் ,பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின் நட்சத்திரங்களை குறிக்கின்ற துல்லிய கோட்பாட்டில் அமைக்கபட்டுல்லதை ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர்.மற்றுமொரு அதிசய விடயம் என்னவென்றால் .உள்ளே வைக்கப்பட்ட உடல்கள் கெட்டு போகாமல் இருப்பதின் விந்தை தான். உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெடாமல் மாறாக முற்றிலும் உலர்ந்த நிலையில்உள்ளது. 


ஆராய்ச்சியாளர்களின்ஆய்வுக்கு பெரும்சவாலாக உள்ளது !இன்னும் முற்றிலுமாக பயன் பாடுகளை கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள் ,குருக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுர துளைகளின் பயன் பாடுகள் மர்மங்கலகவே உள்ளன.இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இத்தகைய சதுர துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ளரோபோட்களை உள் செலுத்தி உலகம்முழுவதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக கண்டபோது.உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கபட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது .இவற்றை திறக்கவும் அதற்குபின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வு குழுக்கள் மும்முரமாக மனிதனின் அதிசய தக்க ஆற்றல் அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும்..இன்னும் பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும் பிரமிடுகளை எண்ணி நாம் ஆச்சரியபடுவதில் தவறு ஒன்றும் இல்லை.


பிரமிக்கத் தக்க முறையில் கட்டப் பட்டுள்ள பிரமிட் கூம்பகம் பண்டைக்கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது! பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப் பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ ஞானத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன. எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரமிக்கத்தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஓர் புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப் பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச்சிலரே. அவற்றில் நழுவிச் சென்ற சில கணித துணுக்குகளைத்தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க ஞானிகள் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய வருகின்றது. பிரமிட்களும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் [Stonehenge, Ireland] போலக் கற்தூண் காலங் காட்டியாக [Megalithic Calendars] கருதப் படுகின்றன.


இந்த பிரமிடுகளில் ஏராளமான மம்மிகள் கண்டு பிடிக்க பட்டு உள்ளது 
மம்மிப்படுத்துதல் பற்றி ...


1. இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்திப் பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் அவரை அலம்புவார்கள்.


2. உடலில் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள்.


3. நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டுக் கல் உப்பில் பதப்படுத்தப்படும்.


4. இருதயம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.


5. ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள்.


6. உடல் கல் உப்பால் மூடப்படும்.


7. நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணைகளைத் தடவுவார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும்.


8. உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.


9. உடலை பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.


10. மம்மி இப்போது அடக்கத்திற்குத் தயார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பூமி சுற்ற 24 மணி நேரம் ஆனால் பூமியைச் சுற்ற 6 மணி நேரம்!

வெறும் ஆறே மணித்தியாலங்களில் பூமியைச் சுற்றிவரக்கூடிய குழாய் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர்.குழிகை வடிவில் உருவாக்கப்படவிருக்கும் ஒவ்வொரு கொள்கலனிலும் ஆறுபேர் உட்கார்ந்து பயணம் செய்யக் கூடியதாகவும், மணித்தியாலத்திற்கு சுமார் 6,500 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகவும் இது அமைந்திருக்குமாம். சாதாரணமாக நியூயோர்க்கிலிருந்து பீஜிங்கிற்கு பயணிக்க இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே எடுக்கும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Wednesday, April 18, 2012

பெண்கள் படிப்பதற்கு தடை விதித்து குடிநீரில் விஷம் கலந்த கொடூரம்!


ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீரில் விஷம் கலந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.விஷம் கலந்த நீரை குடித்த சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கவர்னர் முகம்மது ஹூசைன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கும், அலுவலகங்களில் பணி புரிவதற்கும் தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இந்த தடையை மீறி பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட்டதற்கு எதிர்பாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, April 16, 2012

புதிதாக உயிர்ப்பெடு​த்த ஒட்டகத்தின் நடப்பதற்கா​ன முதல் முயற்சி!

பறவைகளின் பிறப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டனவாகவே மிருகங்களின் பிறப்புக்கள் காணப்படுகின்றன. இவ்வாறு பிறப்பெடுத்த மிருகங்கள் ஆரம்பத்தில் எழுந்து நடப்பதற்கு மிகவும் சிரமப்படும்.எனினும் இதனைப் பொருட்படுத்தாத தாய் தனது பிள்ளை விரைவாக எழுந்து நடப்பதற்கு போராடும். அதனை உணர்ந்த குட்டியும் தனது விடா முயற்சியினால் வெற்றியடையும். அவ்வாறு கடின முயற்சியின் பயனாக எழுந்து நடந்து தனது தாயின் இதயத்தை நெகிழ்விக்கும் ஒட்டகத்தின் காணொளியில் காணலாம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஆசியாவில் ஆச்சரியம்! காரகோரம் மலை பனி இறுகி, திண்மமாகிறது!


புவி வெப்பமடைவதால் பனி மலைகள் உருகும் போக்குக்கு மாறாக ஆசியாவின் காரகோரம் மலையில் பனி இறுகி, திண்மமாகிவருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.இமாலய பிராந்தியத்தின் மேற்காக உள்ள காரகோரம் மலைத்தொடரில் பனியின் அளவு அதிகரித்து வருவதை செய்மதி தகவல்கள் மூலமாக ஒரு பிரஞ்சு விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.புவி வெப்பமடையும் போக்குக்கு ஏற்ப, இமாலயத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகிவரும் நிலையில், இந்த மலை மாத்திரம் திண்மமாகி வருவதன் காரணம் இன்னமும் அறியப்படவில்லை.


இந்த பிராந்தியத்தில் உள்ள பனிமலைகள் 100 கோடி மக்களுக்கு நீர் வழங்கும் மூலமாக இருக்கின்ற போதிலும், அவை குறித்த ஆய்வுகள் பெரிதாக எதுவும் நடக்கவில்லை.இமாலய பிராந்தியத்தில் உள்ள மொத்த பனியும் 2035 ஆம் ஆண்டளவில் உருகிப் போய்விடும் என்று 2007 ஆம் ஆண்டு வெளியான ´´காலநிலை மாற்றத்துக்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் அறிக்கை´´ கூறியதை அடுத்து, இமாலய பனி மலைகளின் விவகாரம் ஒரு முக்கிய அம்சமாக பலராலும் பேசப்படுகிறது.


இமாலயத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற போதிலும், காரகோரம் மலை ஒரு வேறுபட்ட தொடராகவே காணப்படுகிறது.இந்த மலைச்சிகரங்கள் பொதுவில் சென்றுவருவதற்கு மிகவும் கடினமான பகுதியாகவே இருக்கிறது. இருந்த போதிலும் அங்கு ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, April 15, 2012

அண்டார்டிகா பகுதியில் இரட்டிப்பாகியுள்ள பென்குயின்கள்!


அண்டார்டிகா பகுதிகளில் வாழும் பென்குயின் இனத்தின் எண்ணிக்கை தற்பேது இரட்டிப்பாகியுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.அன்டார்டிகா பகுதியில் செயற்கைகோள் மூலமாக பென்குயின்களின் எண்ணிக்கை நடத்தும் பிரிட்டிஷ்அண்டார்டிக் ஆய்வில், கடந்த ஆண்டு 2,70,000 பென்குயின்கள் இருந்ததாகவும், தற்போது 5,95,000 பென்குயின்கள் உள்ளதாகவும் தெரிவிக்கிறது.














பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF