Saturday, May 29, 2010

ரிமோட் கண்ட்ரோல் முலம் இருதய ஆபரேஷன்

இருதய நோய் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த நோய்க்கு புதிய புதிய சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன.

இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் குழாயில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய `பைபாஸ் ஆபரேஷன்’ நடத்தப்படுகிறது. இதுதவிர இருதய துடிப்பு சீராக இல்லாமல் இருப்பவர்களுக்கும் சிக்கலான ஆபரேஷன்கள் செய்யப்படுகின்றன.

குறிப்பாக இருதய துடிப்பு சிலருக்கு குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும். இதை சரிசெய்யவும், இருதயத்துக்கு சீராக ரத்தம் செல்லவும் மிகச்சிறிய குழாய் போன்ற மருத்துவ உபகரணத்தை இருதயத்தில் பொருத்துவார்கள்.

ஆபரேஷன் நடக்கும் போது இந்தப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்பதை எக்ஸ்ரே படம் பிடித்து பார்ப்பார்கள். அதாவது எக்ஸ்ரே கருவி முலம் இந்த ஆபரேஷனை தொடர்ச்சியாக படம் பிடித்து கண்காணிப்பார்கள். அப்போது சுமார் 250 க்கும் மேற்பட்ட எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படும். இதனால் இந்த ஆபரேஷனை செய்யும் டாக்டர் மற்றும் நர்சுகள் கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

இதை தவிர்க்க ரிமோட் கண்ட்ரோல் முலம் இந்த ஆபரேஷனை செய்ய எந்திரக் கை ஒன்றை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வடிமைத்துள்ளனர். `ரிமோட் கேதீட்டர் மேனிபுலேசன் சிஸ்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எந்திரக் கை இங்கிலாந்தில் உள்ள ஜிலன் பீல்டு மருத்துவமனையில் உள்ளது. இங்கு இந்த எந்திரக்கையை பயன்படுத்தி உலகிலேயே முதன்முதலில் 70 வயதான கென்னத் குராக்கர் என்பவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.

நோயாளி ஆபரேஷன் தியேட்டரில் இருக்க, அவர் அருகில் எந்திரக்கை தயாராக இருந்தது. டாக்டர் ஆன்ட்ரே தலைமையிலான குழுவினர் பக்கத்து அறையில் இருந்தபடி எந்திரக்கையை ரிமோட் முலம் இயக்கி ஆபரேஷன் செய்தனர். இந்த எந்திரக்கையில் உள்ள கருவிகள் முலம் நோயாளின் உடலில் மிகச்சிறிய அளிவில் துளையிடப்பட்டு உடலுக்குள் சிறிய கேமிரா, மின்விளக்கு, அறுவை சிகிச்சை செய்யும் கத்தி மற்றும் பிற உபகரணங்கள் செலுத்தப்பட்டன. உடலுக்குள் செலுத்தப்பட்ட கேமிரா முலம் உறுப்புகளுக்குள் இருக்கும் பாதிப்பை டெலிவிஷன் திரையில் டாக்டர் பார்த்தபடியே ஆபரேஷன் செய்தார். இருதயத்தை சுற்றி இருந்த ஜவ்வுப்படலம் காரணமாக இருதயதுடிப்பு ஒழுங்கற்ற நிலையில் இருந்ததை ஆபரேஷன் முலம் சரிசெய்தனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF