Sunday, May 2, 2010

எல்.ஜி.யின் புதிய சாக்லேட்எல்.ஜி.நிறுவனம்

2006 ஆம் ஆண்டில் தன் சாக்லேட் சிரீஸ் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது. இப்போது மேலும் இரண்டு சாக்லேட் போன்களைக் கொண்டு வந்துள்ளது. அவற்றில் அண்மைக் காலத்தில் வந்தது எல்.ஜி. சாக்லேட் பி 20.

சாக்லேட் சிரீஸ் போன்கள் அனைத்துமே ஸ்டைலான வடிவமைப்பு கொண்டவை. கண்ணாடி பளபளப்பு, பியானோ கருப்பு மற்றும் ஸ்லிம்மான வடிவம் என இந்த போனும் அசத்துகிறது. போனின் முன்புறத்தில் இரண்டாவது கேமரா உள்ளது. மற்ற இடம் எல்லாம் சரியான கருப்பில் முதல் பார்வையில் தெரிவதில்லை.

போன் செயல்படத் தொடங்குகையில் தான் ஸ்கிரீன் வெளிச்சத்தில் கீழே உள்ள பட்டன்கள் தெரிகின்றன. இடது பக்கத்தில் கம்ப்யூட்டருடன் இணைக்க, சார்ஜ் செய்திட மற்றும் ஹெட்செட் இணைக்க ஒரே ஒரு போர்ட் தரப்பட்டுள்ளது. பின்புறம் கேமரா, எல்.இ.டி. பிளாஷ் தரப்பட்டிருப்பதும் உற்று நோக்கினால் மட்டுமே தெரிகிறது.

இந்த பகுதி முழுவதும் வழுக்கிச் சென்று, பேட்டரி மற்றும் சிம் இடத்தைக் காட்டுகின்றன. மெமரி கார்ட் இடமும் இங்குதான் உள்ளது. போன் ஸ்லைட் ஆகி, கீ பேட் தட்டையாக குரோமியப் பூச்சு வரிகளுக்கிடையே காட்டப்படுகிறது.

எண்களுக்கு மேலாக அழைப்பு ஏற்க, முடிக்க மற்றும் கிளியர் செய்திட கீகள் தரப்பட்டுள்ளன. கருப்பு வண்ண பின்னணியில் சிகப்பு வண்ணக் கலவையுடன், குரோமிய வரிகள் மிகவும் அழகான, ஸ்டைலான தோற்றத்தினைத் தருகின்றன.

போனின் மெமரி 60 எம்பி. போனுடன் 2 ஜிபி மெமரி கார்ட் தரப்படுகிறது. அனைத்து கண்ட்ரோல் பட்டன்களையும் மிக எளிதாக இயக்கலாம். இந்த போனின் ஒரு சிறப்பம்சம், பல செயல்பாடுகளை(Multitasking) ஒரே நேரத்தில் மேற்கொள்வதுடன் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாறிக் கொள்வதற்கான வசதியுடன் இருப்பதுதான்.

ஆனால் அப்ளிகேஷன்களை அதிகப்படுத்துகையில், போனின் செயல்பாட்டின் வேகம் சற்று குறைகிறது. கடிகாரம், அலாரம், காலண்டர், ரிமைண்டர், நோட்ஸ்,குயிக் காண்டாக்ட்ஸ், சீதோஷ்ண நிலை அறிவித்தல் ஆகியவற்றிற்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ உள்ளன.

GPRS & EDGE ஆகிய தொழில் நுட்பம் மூலம் நெட்வொர்க் இணைப்பு அருமையாகக் கிடைக்கிறது. 900ட்அட பேட்டரி தரப்பட்டு 5 மணி நேரம் டாக் டைம் கிடைக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் பவர் தாக்குப் பிடிக்கிறது.

இரண்டு மணி நேரம் பாடல்களைக் கேட்க முடிகிறது. ஜி.பி.ஆர்.எஸ். பயன்பாடு 20 முதல் 30 நிமிடங்கள் வரை கிடைக்கிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF