கையடக்க தொலைபேசி பாவனையில் இலங்கை தென்கிழக்காசிய வலயத்தில் முன்னணியில் உள்ளதாக ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்திய இணையத்தளம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இலங்கையின் ஜனத்தொகையில் 81.35 சத வீதமானோர் கையடக்கத்தொலைபேசியினை உபயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், 1 கோடி 60 லட்சத்து 27 ஆயிரம் பேர் கையடக்க தொலைபேசியினை பாவனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
தெற்காசிய நாடான பாக்கிஸ்தானில் 9 கோடியே 7 லட்சத்து 58 ஆயிரம் பேர் கையடக்க தொலைபேசியினைப் பயன்படுத்துகின்றனர். இது பாக்கிஸ்தானின் சனத்தொகையில் 59.6 சத வீதம் என தெரிவிக்கப்பட்டுள்ள, இதேவேளை, 58 கோடி 4 லட்சம் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களைக் கொண்ட இந்தியாவில், சனத்தொகையில் 50 சத வீதமானவர்களே, பாவனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூட்டானில் 47.8 சத வீதமானவர்களும், மாலைதீவில் 46 சதவீதமானவர்களும், ஆப்கானிஸ்தானில் 35 சத வீதமானவர்களும் கையடக்க தொலை பேசிகளை நடத்துகின்றனர்.
இதனிடையே பங்களாதேஷில் 34 சத வீதமானவர்கள் கையடக்க தொலைபேசியினை பயன்படுத்தும் அதேவேளை, நேபாளத்தில் மிகக் குறைந்த அளவான 23 சத வீதமானவர்களே பயன்படுத்துவதாக இந்திய இணையதள ஆய்வு ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கையடக்க தொலைபேசியின் பாவனை அதிகரித்துச் செல்வது, தொலைத் தொடர்பு ரீதியான சமூக அபிவிருத்தியே காரணம் என அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF