அதன் பெயர் ஏர்க்ரூயிஸ். 30 மீட்டர் உயரம் கொண்டது. 4 டூப்ளக்ஸ் அறைகள், 5 சிறிய அறைகளுடன் முற்றிலும் கண்ணாடி தரை கொண்டது. அதிகபட்சமாக 100 பயணிகள் தங்கக் கூடிய ஏர்க்ரூயிஸ், நீரில் மிதக்கும்போது நான்கு புறமும் ஆக்டோபஸ் கரங்கள் போன்ற அடித்தளத்தில் பொருந்தியிருக்கும். பிறகு, ஹைட்ரஜன் சக்தி மூலம் வானில் உந்தித் தள்ளப்படும். சூரிய சக்தி பேட்டரிகள் மூலம் வானில் பயணத்தைத் தொடங்கும்.
அதில் கார்பன் வெளியாகாது என்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. சொகுசு ஓட்டலின் வசதிகளை அனுபவித்தபடி நீரிலும் வானிலும் பயணிகள் மகிழும் வகையில், ஏர்க்ரூயிஸ் மெதுவாகவே பறக்கும். மணிக்கு 145 கி.மீ. செல்லக்கூடிய அது, லண்டனில் இருந்து நியூயார்க் போய்ச் சேர 37 மணி நேரம் ஆகும். இதுபற்றி சுற்றுலா நிபுணர் டோனி சார்டர்ஸ் கூறுகையில், ‘‘அடுத்த தலைமுறை பயணிகளைக் கவரும் வகையில் ஏர்க்ரூயிசை நிக் தயாரித்துள்ளார். சுற்றுலாவை அதிகரிக்க இது உதவும். இதுபோன்ற புது முயற்சிகளுக்கு தூண்டுதலாக அமையும்’’ என்றார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF