Monday, May 17, 2010

வியர்வை சுரப்பிகளுடன் செயற்கை தோல் தயாரிப்பு



உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டு தோல் பாதிக்கப்படுபவர்களுக்கு பயன்படுத்த செயற்கை தோல் தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அவற்றை வியர்வை சுரப்பிகளுடன் கூடியவைகளாக தற்போது தயாரித்துள்ளனர்.

சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியின் தலைவர் ஷியாபிங் பூ மற்றும் அவரது குழுவினர் இந்த செயற்கை தோலை கண்டு பிடித்துள்ளனர்.

இந்த தோலை எலிகளுக்கு பொருத்தி ஆய்வு நடத்தினர். எலிகளின் தோல் பகுதியில் வளர்ச்சி அடையாத கெரடினாக்கிட்ஸ் செல்களின் மேல் பகுதியில் வியர்வை சுரப்பி செல்களை பரப்பி ஏற்கனவே தயாரித்த செயற்கை தோலை பொருத்தினர்.

அவை 2 வாரத்தில் செயற்கை தோலுடன் சேர்ந்து வளர்ச்சி அடைந்தது. இதனால் வியர்வை சுரந்து உடல் குளிர்ச்சி அடைந்தது. எனவே, இந்த முறையில் வியர்வை சுரப்பியுடன் கூடிய செயற்கை தோல் தயாரிக்க முடியும் என விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF