Saturday, May 8, 2010

செவ்வாய் கிரகத்துக்கு 39 நாளில் செல்லும் ராக்கெட்


அமெரிக்கா மனிதனை நிலவுக்கு அனுப்பி ஏற்கனவே சோதனை நடத்திவிட்டது. அதற்காக செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டு உள்ளது. இதற்கான ஆய்வுகளை நடத்தி வருகிறது.

இப்போது உள்ள ராக்கெட் மூலம் மனிதனை அனுப்புவதாக இருந்தால் இந்த ராக்கெட் செவ்வாய் கிரகத்தை சென்றடைய 6-ல் இருந்து 9 மாத காலம் ஆகும். விஞ்ஞான ரீதியாக இது சாத்தியப்படாது.

எனவே இன்னும் அதிக வேகத்தில் செல்லும் ராக்கெட்டை கண்டுபிடித்தாக வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்கிய நாசா விஞ்ஞானிகள் புதிய ரக ராக்கெட் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

ஹைட்ரஜன் மற்றும் ஆர்கான் போன்ற எரிபொருளை கொண்டு இயங்கும் இந்த ராக்கெட்டுகள் 39-ல் இருந்து 45 நாளில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.

இதை சோதனை செய்து வருகின்றனர். இது வெற்றி பெற்றால் இந்த ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பி விடலாம்.

மற்றும் பல்வேறு கிரகங்கள், விண்கற்கள் போன்றவற்றை ஆராயவும் இந்த ராக்கெட்டை அனுப்பி வைக்கலாம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF