உலகின் பல ஆய்வாளர்களும் கூட கண்டுகொள்ளாத அல்லது ஒருவேளை கண்டு சொல்லாத மிகப்பெய செயல் ஒன்று தொடர்ந்து நடந்தபடி பூமியை வாட்டிவதைத்து உருக்கிக்கொண்டே இருக்கிறது.
இமயமலை, ஆர்டிக், அண்டார்டிக் உருக மிக முக்கிய காரணம் நம் பூமியின் அடிப்பகுதியிலிருந்து மேல் எழும்பி வரும், வந்து கொண்டிருக்கும் லாவா மற்றும் மேக்மாவின் அளவு கடந்த, தடுக்கப்படாத வெப்பமே. இதைத்தடுக்க பெரும் உதவிபுரியும் மாபெரும் நீரோட்டங்களிலிருந்தும், கச்சா எண்ணெய்க் கிடங்குகளிலிருந்தும், வாயுக் கிடங்குகளிலிருந்தும் இவற்றை லட்சக்கணக்கான கன சதுர மீட்டர் அளவு வெளியே எடுத்துப்பயன்படுத்தி வரும் தொடர் அக்கிரமத்தால் உள் வெப்பத்தைத் தடுக்கும் நடவடிக்கையும் நில அதிர்வின்போது எண்ணெய் மற்றும் காற்று ஷாக் அப்சர்பரைப்போல் பயன்படும் இவற்றின் உதவியும் இழக்கப்பட்டுவிட்டது.
எனவே, பூமியின் சகல மேல்பகுதிகளும் வெப்பத்தால் தகிக்கிறது. போதாததற்கு மேல்புறம் தாக்கும் வெப்பமும் கூட. எந்தப் பகுதியில் உருகும் ஐஸ் மலைகளும், கீழ்புறமாகவே நகர்கின்றன. எனவே முதலில் பூமியின் உட்புற அடிப்புறப் பகுதியே வெப்பத்தை அதிகம் சந்திக்கிறது என்பது தெளிவு. இன்றிலிருந்து நாம் பூமியின் உட்புற அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்துவதை 100 சதம் நிறுத்திவிட்டாலும் கூட பூமியைக் காக்கவே முடியாது. மேலும் அவற்றின் பயன்பாட்டை 10 சதம் கூட நம்மால் குறைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி அவற்றிற்கு அடிமையாகிவிட்டோம். ஏற்கனவே வெளியே எடுக்கப்பட்டுவிட்ட மேற்படி பொருட்களின் காரணமாக பூமியின் உட்புறத்தில் கணக்கற்ற அளவற்ற பெரிய பெரிய வெற்றிடங்கள் உருவாகிவிட்டன். எதிர்வரும் நிலநடுக்கங்களால் நாம் வாழும் பகுதி நடுங்கினால் அப்படியே சில பல கிலோ மீட்டர் ஆழத்தில் நாம் புதைந்துவிடுவது உறுதி. மாறாக கடலுக்குள் பூமி புதையாது.
காரணம் கடல் என்பதன் ஆழம் நம் பூமியின் மையம் வரையான உயரத்தில் (6400 கி.மீ) சுமார் 30 முதல் 25,000 அடிகள் வரைதான். ஒவ்வொரு முறையும் நிலநடுக்கம் என்பது பூமியின் மையத்திலிருந்து 400, 150, 15 கி.மீ. ஆழங்களிலிருந்து தாக்குவதாக அறிகிறோம். அப்படி மேல் நோக்கி வரும்போதெல்லாம் மேக்மா, லாவாவைத் தள்ளிக்கொண்டே வருகிறது. இவ்வாறு மத்திய வெப்பக்குழம்பு கட்டாய இடப்பெயர்ச்சி செய்வதால்தான் நிலநடுக்கங்கள் வருகின்றன. உதாரணமாக சுனாமியின் போதான நிலநடுக்கத்தின்போது சுமத்ராவின் அருகே அதன் 13,000 அடி ஆழப்பகுதியில் பூமியின் உட்புறமிருந்து வெடித்து வந்து நிரம்பிய லாவா மேக்மாவின் அளவோ 1400 கி.மீ. நீள, 200 கி.மீ. அகல 5000 அடி உயரத்திற்கான புது தீவாகும். இதன் தள்ளுதலாலேயே கரைப்பகுதிகளைக் கடல் நீர் தாக்கியது. இந்நிகழ்வு கடலின் அடிப்புறத்திலேயே நடந்தது.
இந்தப் புதிய தீவின் அளவோ இந்தியாவில் முக்கால் பகுதி. இவற்றாலும் கடல் மட்டம் பெரும் அளவு உயர்ந்து வருகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. பாறைகளின் மீது கட்டடங்களின் மீது படும் வெப்பமே பூமியை பாதிக்கும் எனும்போது கோடான கோடி வாகனங்கள் மீது பட்டு வரும் வெப்ப அளவு எப்படி இருக்கும்? உலகம் பொதுக்குடும்பம் என்றாகிவிட்ட நிலையில் ஒரு வீட்டுக்காரன் குடும்பத்தை நாசப்படுத்திப் பிழைப்பதும் மற்ற வீட்டார்கள் அவனால் பாதிப்படைவதும் என்பது என்ன நியாயம்? கார்பன் அளவு, வளர்ந்த நாடுகளால் ராட்சச அளவில் வெளியாக்கப்படுவதும் மிக மிக கண்டிக்கப்படவேண்டியது. மக்கள் தொகையைவிட மற்ற பல செயல்களும் நாசத்திற்கு தூபம் போடுகின்றன.
கொட்டாவி விடாதே, குண்டு பல்பு போடாதே என்று கூறும் உலக நாடுகளும் நம் அரசுகளும் அவற்றைவிட பல லட்சம் மடங்கு நாசம் செய்யும் ஓட்டை வாகனங்களின் கார்பன் வெளியீட்டிற்கு என்ன செய்கின்றன? சமீபத்திய சுனாமியில் வெளித்தள்ளப்பட்ட ராட்சத அளவிளான உள் வெப்பம் உலகையே மிக மிக மோசமாக பாதித்துக்கொண்டே வருவது மட்டுமின்றி உலகின் சுற்றுச்சூழலை அழிவின் அடுத்த கட்டத்திற்கும் கொண்டு சென்று விட்டது என்பதே நிஜம். இந்நிலையில் பொதுமக்களாகிய நாமும் சர்வதேச நாடுகளும் எந்த அளவிற்கு நம் சந்ததியினருக்கு இந்த பூமியை நலமுடன் விட்டுவைக்கப்போகிறோம் என்பதே ஆயிரம் டாலர் கேள்வி. சமீபத்திய திரைப்படமான 2012ன் உலக அழிவு என்பது இன்னும் சில வருடங்களில் உண்மையிலேயே நடப்பதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகமாக உள்ளன என்பது கசப்பான உண்மைதான்.
பாலிதீன் கழிவு, சாயக்கழிவு, தோல் கழிவு, பூச்சி மருந்துகள், உரங்கள், சுத்தப்படுத்தப்படாத ஏரிகள், கால்வாய்கள், கோடிக்கணக்கான வாகனங்கள், ஆடம்பரமான மின்சார நுகர்வுகள், மீண்டும் மீண்டும் போடப்படும் சாலைகள், உருக்கப்படும் தார், இடிக்கப்படும் கட்டடங்கள், எக்கப்படும் வாகனங்கள், தீப்பிடிக்கும் எண்ணெய் கிணறுகள், கடலைத் தூர்த்துக் கட்டப்படும் மாபெரும் நகரங்கள், ராக்கெட், செயற்கைகோள்கள் ஆதிக்கம், விண் குப்பைகள், காட்டுத்தீ, கடலில் கொட்டப்படும் அதீத கழிவுகள், அணு சோதனைகள் என்று அளவிடமுடியாத அழிவின் கோரக்கரங்கள் நம் பூமியை அரவணைத்து நெருக்குகின்றன என்பதே உண்மை. இவற்றிலிருந்து மீளுமா பூமி? நம் சந்ததிகள் உயிர் வாழக்கொஞ்சம் மூச்சுக்காற்றும், குடிநீரும் அவசியம் என்பதை காலங்கடந்தே நாம் உணரப்போகிறோம் என்பது மட்டும் மெய்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF