Saturday, May 1, 2010

மெக்ஸிகோ வளைகுடா பகுதிகளில் எண்ணெய் கசிவு

அமெரிக்கா - மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் கசிந்துவரும் எண்ணெய், லூயிசியானா மாகாணக் கடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளது.

தற்போது அடர்த்தியான எண்ணெய்த் திட்டு கரையோரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை படர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடலடியில் இருந்து எண்ணெயைத் தோண்டியெடுக்கும் இயந்திரமேடை கடந்த வாரம் வெடித்து கடலில் முழ்கியதை அடுத்து குழாய் உடைந்து கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.

குழாய் உடைந்ததை தொடர்ந்து நாள் ஒன்றிற்கு 5 ஆயிரம் பீப்பாய்கள் என்ற அளவில் தொடர்ந்து எண்ணெய் கடலில் கசிந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எண்ணெய்க் கசிவு ஏற்படும் இடத்தை அடைத்து கசிவை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதற்கு 40 தொடக்கம் 90 நாட்கள் வரை எடுக்குமென எண்ணெய் தோண்டியெடுக்கும் மேடையை குத்தகைக்கு எடுத்து நடத்தும் பிரித்தானிய நிறுவனமொன்று கூறியுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF