அதிகரிக்கும் விபத்துகளால் ஏராளமானவர்கள் உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். வேறுசில பயங்கர வியாதிகளாலும் உடல் உறுப்புகள் செயலிழக்கலாம். இதுபோல திடீர் சம்பவங்களால் கை, கால்களை இழந்தவர்கள் வாழ்வே திசைமாறிவிடும்.
செயற்கை கை, கால்கள் பொருத்திக் கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனாலும் அவை இயற்கையான கை, கால்கள்போல செயல்படாது. பெயரளவில் ஒரு அங்கமாகவே இருக்கும்.
இந்தக் குறையை களைந்து விபத்தில் கைகளை இழந்தவர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் நவீன வசதிகள் நிறைந்த செயற்கை கை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை உள்ள மற்ற செயற்கை கைகளைவிட இது கொஞ்சம் நவீனமானது. குறிப்பாக `புளூடூத்’ தொழில்நுட்பம் முலமாக செயல்படக்கூடியது. இதன் உதவியால் எந்த விதமான பொருட்களையும் இயற்கை கைகளைப் போலவே பற்றிப்பிடித்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். 5 விரல்களையும் தனித்தனியாக இயல்பான விரல்கள்போல இயக்க முடியும். இதன் உதவியுடன் 90 கிலோ எடையைக் கையாள முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டச் பயோனிக்ஸ் நிறுவனம் இந்த செயற்கை கையை வடிவமைத்துள்ளது. இதற்கு `ஐ லிம்ப் ஹேண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டே வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக் கை தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. விபத்தில் கையை இழந்த தீயணைப்பு வீரர் ஐயன் ரெய்டு என்பவருக்கு இந்த செயற்கைக் கை முதல் முறையாக பொருத்தப்பட்டது. `கை துண்டிக்கப்பட்டதால் இழந்த உணர்வுகளை மீண்டும் பெற்றிருப்பதாகவும், அனைத்து வேலைகளையும் தடையின்றி செய்ய முடிவதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார்.
அங்ககீனம் அடைந்தவர்களுக்கு அளவற்ற பயன்தரக் கூடியது இந்தக் கை! பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF