Monday, May 24, 2010

டயனோசரஸ் அழிவுக்கு புதுக்காரணம்

உருவத்தில் பெரிய, ராட்சத விலங் கினம் டயனோசரஸ். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வசித்த இந்த விலங்கு இனம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. இதற்கு காரணம் `விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த விண்கற்கள்’ என்று கூறப்பட்டது

இந்த நிலையில், டயனோசரஸ் அழிவுக்கு காரணம் விண்கற்கள் அல்ல என்று தெரியவந்துள்ளது. பூமியில் ஏற்பட்ட தட்ப வெப்ப மாறுதல்கள் காரணமாகவே டயனோசரஸ்கள் அழிந்தன என்கிறார்கள்.

நார்வே நாட்டில் உள்ள ஸ்வெல்பார்டு என்ற இடத்தில் சமீபத்தில் டயனோசரஸ் புதைபடிமங்கள் கிடைத்தன. இந்த படிமங்களை டாக்டர் கிரிகோரி பிரைஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அப்போது தான் டயனோசரஸ் அழிவுக்கு தட்ப வெப்ப மாற்றம் தான் காரணம் என்பது தெரியவந்தது.

சுமார் 13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் தட்ப வெப்ப நிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டது. இந்த மாற்றம் படிப்படியாக உருவானது. பூமி சூடாவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது என்று நாம் இப்போது கூறுவது போன்ற நிலை அப்போது காணப்பட்டது. இதன்காரணமாக வடதுருவத்தில் பனிமலைகள் உருகி அதன் குளிர்ந்த தண்ணீர் கடலில் கலப்பது அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து கடலில் வெப்பம் வெகுவாக குறைந்தது. 4 டிகிரி செல்சியஸ் முதல் 13 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்ததால் கடலில் மட்டுமின்றி பூமியிலும் வெப்ப மாறுதல்கள் உருவானது. இதனால் கடல் மற்றும் பூமியில் வாழ்ந்த உயிரினங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. இப்படித்தான் டயனோசரஸ் இனமே அழிந்தது. இந்த அழிவும் ஒரேநாளில் நடக்கவில்லை. படிப்படியாக அழிவு தொடர்ந்து முற்றிலும் அந்த இனமே இல்லாமல் போய்விட்டது.

இதுஎல்லாவற்றையும்விட டாக்டர் கிரிகோரி இன்னொன்றையும் சொல்லி மிரட்டுகிறார். அது-

`டயனோசரஸ் அழிவு தொடங்கும் போது எந்த மாதிரியான தட்ப வெப்ப சூழ்நிலை இருந்ததோ, அதுபோன்ற ஒரு நிலை இப்போது தொடங்கி உள்ளது. இந்த நிலை நீடிக்கும் போது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது போன்ற ஒரு அழிவை மனித இனம் சந்திக்க வேண்டியிருக்கும்’ பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF