Wednesday, June 2, 2010

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்

பொதுவாக எந்த ஒரு போரிலும் சில முக்கியமான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதில் முக்கியமானது தான் “உளவு” ஆகும்.
போருக்கு முன்னதாக எதிரியின் இயலுமை, ஆயுதவளங்கள், சாதகமான பௌதிகநிலைகள், செயல்வேகம் ஆகியவற்றை அறிந்து கொள்வதன் மூலம் போரின் முடிவை தமது தரப்பிற்கு சாதகமாக்கிக்கொள்வது என்பது “உளவு” இனுடைய அவசியம் ஆகும். ஆகவே பூமி மீதான முற்றுகைக்கான உளவு நடவடிக்கைகள் தான் இப்பொழுது அவதானிக்கப்படும் மேற்படி வேற்றுக்கிரகவாசிகளின் பிரசன்னத்திற்கான அர்த்தமாகுமா? எனும் கேள்வியும் எழத்தானே செய்கிறது.
யுத்தம் உளவு முடிந்தவுடனா? அல்லது ஆரம்பித்துவிட்டதா?
எமது கிரகத்திற்கு ஆக்கிரமிப்பு நோக்கமாக வருகை தரும் வேற்றுக்கிரகவாசிகள் அரங்கேற்றிக்கொண்டிருக்கின்ற உளவு நடவடிக்கைகள் தான் எம்மால் அவதானிக்கப்படும் சம்பவங்களுக்கான காரணம் என்று ஆய்வின் முன்னைய பகுதியில் தெளிவாக ஆராய்ந்து உறுதிப்படுத்தி இருந்தோம்.
அப்படியாயின் அவர்கள் தமது ஆக்கிரமிப்பின் ஓரங்கமாக மனிதர்கள் மீது உயிரிழப்புகளை ஏற்படுத்த்தொடங்கவில்லையா? என்று நோக்குமிடத்து இல்லை என்னும் பதிலை கூறுவதில் பல சிக்கல்கள் தோன்றுகின்றன.
இதன் ஓரம்சமாக தோன்றுவது தான் இப்போது இடம்பெறும் உயிரிழப்புகளுக்கும் அவர்களுக்கும் தொடர்புண்டா என்கிற கேள்வி.
வேற்றுக்கிரகவாசிகள் திடீர் திடீரென தோன்றுவதும் அதே வேகத்தில் மறைந்து போவதற்கும் ஆன காரணங்களாக
1. அவர்கள் எமது கண்ணுக்கு புலப்படாத வேறு பரிமாணங்கள் ஊடாக (Dimensions) இயங்கக்கூடிய ஆற்றலைக்கொள்ளுதல்.
2. அவர்கள் சூழ்நிலைக்கேற்ப உருமாறக்கூடிய ஆற்றலை கொண்டிருத்தல் ஆகியவற்றைக்குறிப்பிடலாம்.
இப்போது பூமியில் ஏற்படுகின்ற சிறு விபத்துக்கள் முதல் பல பாரிய விபத்துக்கள் வரை காரணம் கண்டறிய முடியாத நிலை காணப்படுகிறது. வேற்றுக்கிரக வாசிகள் மேற்குறிப்பிட்ட இயல்புகளை கொண்டிருக்குமிடத்து இவ்விபத்துக்களில் அலகுவாக பங்கேற்க்க்கூடியவர்களாக இருப்பது அவ்வளவு கடினமானதல்ல.
மாறாக இவ்விபத்துக்களில் அவர்கள் தொடர்பைக் கொண்டிக்காவிடின் அவர்கள் உயிரிழப்புக்களை ஏற்படுத்துவது எப்போது?
பொதுவாக ஒரு ஆக்கிரமிப்பானது சில பிரதான நோக்கங்களையே கொண்டிருக்கும்.
1. எதிரி நாட்டு வளத்தை சூறையாடுதல்.
2. தன்னை பலமானவனாக காட்ட முயற்சிப்பது. அதாவது பிராந்தியத்தில் தனது நிலையை உயர்வாக வைத்திருத்தல். ( வல்லரசு )
3. அடிமைப்படுத்தல்.
இதில் 2வது காரணத்தை வேற்றுக்கிரகவாசிகள் கொண்டிருப்பின் ஏற்கனவேயே எம்மீது தாக்குதலை ஆரம்பித்திருக்கவேண்டும். எனினும் இதுவரை அவ்வாறு இடம்பெறாமையானது 2வது காரணத்திற்கான சாத்தியப்பாடுகளை குறைக்கிறது. (Possibilities)
எனவே அவர்களின் தெரிவாக அமையக்கூடியது 1ம் 3ம் காரணங்கள் ஆகும்.
1. எமது பூமியிலுள்ள வளமே அவர்களின் முக்கிய இலக்காக மாறுமென்பதை எம்மால் ஊகிக்கமுடிகிறது. எனினும் இந்த வளங்களுக்கான வேட்டை பூமியில் தொடங்கிவிட்டதா? இல்லையா? இதுவரை நாம் அறிந்த வளங்களில் குறிப்பிடத்தக்க மறைவுகள் இடம்பெறாத்தைக்கொண்டு இன்னும் வளத்திற்கான ஆக்கிரமிப்பு தொடங்கவில்லைஎன்று கூறிவிடமுடியாது.
ஏனெனில் எம்மால் வளங்கள் என்று அடையாளம் காணப்பட்டவை தான் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் வளங்களாக இருக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. எனவே இப்பொழுது ஆரம்பித்திருக்கும் இந்த வளங்கள் சூறையாடப்படாமல் காரணமாக நாம் அடுத்த கட்ட முன்னேற்றத்தை (அவர்களுக்கு இணையாக) அடையவதற்கான அறிவைப்பெறுகின்ற சமயத்தில் கூட வளப்பற்றாக்குறையால் இப்படியே இருக்கவேண்டிய இருக்கவேண்டிய நிலை ஏற்படலாம். அதாவது எமது எதிர்கால வளர்ச்சியின் போது நாம் இனம் காணப்போகும் வளங்கள் இப்போது வேற்றுக்கிரகவாசிகளால் எமது பூமியில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு தங்களுக்குரிய வளங்களை முற்றாக இங்கிருந்து கொண்டு சென்ற பின் தம்முடன் மனிதர்கள் போட்டியிடுவதற்கான போராடுவதற்கான இடிப்படை இயலுமைகள் கூட அற்ற தன்மையையே கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவர்கள் வெளிப்படையாக பூமிமீது ஆக்கிரமிக்கும் சாத்தியம் ஏற்படும். அப்போது பாரிய போர் நடைபெறாது. பூமி அவர்களுக்கு இலகுவாக அடிபணிக்ன்ற நிலை ஏற்படும். பூமியிலுள்ள அனைவரும் வேற்றுக்கிரக வாசிகளின் அடிமைகளாகும் நிலை உருவாகுவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லாமலில்லை.
தொடரும்...............
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF