Tuesday, June 22, 2010

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வடிவம் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது வெற்றிகரமான ஐபோனின் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் 40 சதவீத வருவாய் ஐபோன் விற்பனை மூலம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "ஐபோன்"கள் 2007ல் சந்தைக்கு வந்தன. இதுவரை 5 கோடி போன்கள் விற்பனையாகியுள்ள நிலையில், தற்போது மேலும் பல புதிய அம்சங்களுடன் அதன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" மாடல் சந்தைக்கு வந்துள்ளது.

ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சகல வசதிகளையும் கொண்டதாகத் திகழ்கிறது. OS 4 எனும் இயங்குதளத்தில் அதிவேகமாக இயங்கும் திறன் கொண்ட இந்த புதிய செல்போனில், Video Calling, Retina high-resolution display, 5 மெகா பிக்ஸல் கேமரா, லெட் ஃப்ளாஷ், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு வசதி, வை-ஃபி என ஏராளமான வசதிகளை உள்ளடக்கியது இந்த புதிய செல்போன்.

முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையதளத்தை பயன்படுத்தவும் முடியும்.

ஜூன் 24 முதல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனை செய்ய உள்ளது. ஜூன் 15 முதல் இந்த ஐபோன்-4 க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே ஐபோன் வைத்திருப்பவர்கள், புதிய சாஃப்ட்வேர்களை ஐ ட்யூன் தளத்தில் வரும் ஜூன் 21 முதல் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்..

சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா உள்பட 21 நாடுகளில் ஜூலையில் விற்பனைக்கு வருகிறது ஐபோன். இந்தியா உள்ளிட்ட 88 நாடுகளில் வரும் செப்டம்பரில்தான் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும்.. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF