கௌதமாலா நாட்டில் கடந்த வாரம் பெய்த புயலுடன் கூடிய கடும் மழையின் போது நடந்த விபரீதம் இது. இந்தக் கடும் மழையில் 179 பேர் வரை பலியானார்கள்.
இந்நிலையில் தலைநகரின் கட்டட நெரிசல் மிக்க பகுதியில் நான்கு வீதிகள் சந்திக்கும் சந்திப் பகுதி ஒன்றில் பாரிய குழி ஏற்பட்டுள்ளது.
இதன்போது மேலே அமைந்திருந்த 3 மாடிக் கட்டடம் ஒன்றும் அதில் இருந்தவர்களுடன் குழியினுள் விழுந்து காணாமல்போயுள்ளது. இந்தக் குழி 60 அடி விட்டமும் 330 அடி ஆழமும் கொண்டதாக அமைந்துள்ளது.
இது எதனால் ஏற்பட்டது என்பது குறித்து தற்போது புவியலாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்றதொரு பாரிய குழி அந்நாட்டில் 2007ம் ஆண்டு பெய்த மழையின்போதும் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF