உலகிலேயே மிக அதிக பணச் செலவில் கட்டப்பட்ட ஹோட்டல் வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் ஆகும். சில தினங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டல் திறந்துவைக்கப்பட்டது. சுமார் 650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நீச்சல் குள தடாகம், ஒலிம்பிக் நீச்சல் குள தடாகத்தைவிட 3 மடங்கு பெரியது எனவும், சிறு வள்ளங்கள் அங்கு பாவிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. உலகிலேயே கட்டிடத்திற்குமேல், இவ்வாறானதொரு பாரிய நீச்சல் தடாகம் கட்டப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
55 மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் சுமார் 2,500 அறைகளைக் கொண்டதாகவும், சுமார் 350.00 ஸ்டேலிங் பவுண்களை அறை ஒன்றின் கட்டணமாக அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 650 அடி உயரத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகமே பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் சுமார் 70,000 பார்வையாளர்கள் இந்த ஹோட்டலை தினமும் பார்வையிட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சுமார் 4 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல், ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் டாலர்களை இலகுவாகச் சம்பாதிக்கும் என அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF