Wednesday, December 8, 2010

இணையதளத்தின் எதிர்கால இதயம் சீனா : "கூகுள்' நிறுவனம் கருத்து






இந்நிலையில், "தியான்மென்' சதுக்கப் படுகொலை போன்ற, கடந்த சீன அரசின் அட்டூழியங்களை குறிக்கும் தகவல்களை தணிக்கை செய்ய வேண்டும் என, சீன அரசு உத்தரவிட்டது. அதையேற்ற "கூகுள்' சில விஷயங்களை தணிக்கை செய்தது. ஆனால் சீனா தொடர்ந்து "கூகுளுக்கு' நெருக்கடி கொடுத்து வந்தது. இதற்கிடையில் அந்நிறுவனத்தில் இ-மெயில்கள் சில இணையதள திருடர்களால் திருடப்பட்டன. சீனா இதுகுறித்து விசாரிப்பதாக கூறிவந்ததே ஒழிய, நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.


இப்பிரச்னை ஒரு நிலையில் முற்றி, கடந்த மார்ச் முதல் சீனாவில் தனது "தேடுபொறி'யை நிறுத்தி விட்டது கூகுள். அதையடுத்து கூகுளின் தேடுபொறி, ஹாங்காங்கில் இருந்தபடி செயல்படத் துவங்கியது. இதனால் அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் பெரும்பகுதியை சீன தேடுபொறி நிறுவனமான "பெய்டு'விடம் இழந்தது. அதன்பின் கடந்த ஜூலையில், ஹாங்காங்கிற்கு சேவையை திருப்பி விடுவதை "கூகுள்' நிறுத்தியது. அதன்பின் சீன அரசு, அந்நிறுவனத்துக்கான உரிமத்தை புதுப்பித்தது. இந்நிலையில் நேற்று சீன தலைநகர் பீஜிங்கில் பேசிய அந்நிறுவனத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி துறையின் துணைத் தலைவர் ஆலன் எஸ்டேஸ் கூறியதாவது:


இணையதளத்தின் எதிர்கால இதயமாக சீனா திகழ்கிறது. தேடுதல் என்பது தவிர, வரைபடம் மற்றும் விளம்பரங்களை வெளியிடுவது போன்ற எண்ணற்ற துறைகள் இணையதள உலகில் உள்ளன. அவற்றை நம்மால் கண்டுபிடிக்க முடியும். சீனாவை பொறுத்தவரை "கூகுள்' ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. ஒரு மகத்தான புரட்சிக்கு அது வழிகாட்டும் என நம்புகிறேன். "கூகுள்' மீது சீன அரசு தாக்குதல் தொடுத்தது என்ற "விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவண வெளியீடு பற்றி எங்களிடம் ஆதாரம் எதுவும் இல்லை. இவ்வாறு ஆலன் தெரிவித்தார்.
பீஜிங் : "இணையதளத்தின் எதிர்கால இதயம் சீனா. தேடுதல் தவிர வரைபடம் மற்றும் விளம்பரம் போன்ற பிற பகுதிகளும் சீனாவில் "கூகுள்' வளர்ச்சி பெறுவதற்கான இடங்களாக திகழ்கின்றன' என, "கூகுள்' நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 2006ல் "கூகுள்' நிறுவனம் தனது "தேடுபொறி'யை சீனாவில் நிறுவியது. மிகக்குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்தது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்

இது உலகத்தின் முதல் பறக்கும் ஸ்டார் ஹோட்டல் . இது சோவியத் நாட்டில் தாயாரிக்கப் பட்ட உலகின் மிகப் பெரிய ஹெலிகப்டரை மாற்றி உருவாக்கப்பட்டது.



உலகிலேயே மிக பெரிய ஹெலிகப்டரான சோவியத் தாயாரிப்பான Mil V-12 என்ற ஹெலிகப்டரை ஐந்து ஆண்டு கடின உழைப்பால் மாற்றி அமைக்கப்பட்ட ஹோட்டல் இது ஆகும்.


இது பார்ப்பதற்கு டபுல் டெக்கர் பஸ் போல தோற்றமளிக்கும் இதனுடைய நீளம் 135 அடி & 45 அடி உயரம் உடையது. 105 ஆயிரம் கிலோ வெயிட்டை இந்த ஹெலிகப்ட்டாரால் தூக்க முடியும் இது மணிக்கு 158 மைல் வேகத்தில் பறக்க கூடியது. இதில் 18 வசதியான ரூம்கள் உள்ளன. ரொம்ப சவுண்ட் ப்ருஃப் உடன் மினி பார் உள்ளடங்கிய குயின் சைஸ் பெட்டுடன் வயர்லஸ் இன்டர்நெட்டு கனக்ஷனுடன் ரூம் சர்விஸ் வசதியுடன் உள்ளது.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வானில் வெடித்துச் சிதறிய ஏர் பிரான்சுக்குச் சொந்தமான ஜெட் விமானம் உண்மை தெரிந்தது

வானில் வெடித்துச் சிதறிய ஏர் பிரான்சுக்குச் சொந்தமான ஜெட் விமானம், பயங்கரவாதத் தாக்குதலால் நடந்தது என்று பலர் நம்பியிருந்தனர்.



ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றமோ அது ஒரு விபத்து என்றும், விமானம் புறப்படும்போது ஓடுபாதையில் காணப்பட்ட இரும்புத் துண்டு ஒன்று அதன் சில்லில் அகப்பட்டு பின்னர் வேகமாகச் சென்று விமானத்தின் கீழ் பகுதியில் உள்ள பெற்றோல் தாங்கியின் மேல் பட்டதால் ஏற்பட்ட தீயால் இவ்விமானம் வெடித்துச் சிதறியது என்றும் சொன்னது.


கவனயீனமாக இருந்த காரணத்தால் ஒரு ஊழியருக்கு 15 வருடம் கடும் காவல் தண்டனையும் வழங்கப்பட்டது.


அதாவது விமானம் புறப்படும் போது தீப் பற்றியதை ஒருவர் தனது வாகனத்தில் பயணிக்கும் போது காணொளியாக எடுத்துள்ளார் , இக் காணொளி மூலமாக பல விடைகாண முடியாத விடயங்களுக்கு விடை கிடைத்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பாம்புடன் விமானத்தில் பறந்தவர் கைது


துபாய்: மலைப்பாம்பு உட்பட 4 பாம்புகளை தோள் பைக்குள் மறைத்து விமானத்தில் கொண்டு வந்தவரை தரையிறங்கியதும் அபுதாபி விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். இதை அறிந்து, விமானத்தில் பயணித்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.



இந்தோனேசியா & ஐக்கிய அரேபு எமிரேட்டுக்கு இடையே சென்ற எடிஹாடு விமானத்தில் பாம்புகளை ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். அபுதாபி விமான நிலைய அதிகாரிகள் அவர் வைத்திருந்த தோள் பையை சோதனை செய்தனர். அதில் மலைப்பாம்பு உட்பட 4 பாம்புகள் இருந்தன. மேலும் அவர் வைத்திருந்த பெட்டியில் 2 கிளிகள் மற்றும் 1 அணில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.


விமானத்தில் அவற்றில் ஏதாவது வெளியேறி இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று உடன் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். எப்படி இதை பரிசோதிக்காமல் விமானத்தில் ஏற அனுமதித்தனர் என்று வியப்பு தெரிவித்தனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

ஈரானில் தயார் நிலையில் 9000 க்கும் மேற்பட்ட வெடிமருந்து நிரப்பட்ட தற்கொலைப் படகுகள்! தப்பி வந்த ஈரான் பொறியியலாளர் திடுக் தகவல்

ஈரானின் கடற்படையினரால் பெருந்தொகையான தற்கொலைப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கர வெடிமருந்துகள் இணைக்கப்பட்ட 9000 க்கும் அதிகமான வேகப் படகுககளை ஈரானின் கடற்படை உருவாக்கியுள்ளது.



இந்தப் படகுகள் பாரசீக வளைகுடாப் பிரதேசத்தில் காவல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.


இந்தப் பிரதேசத்தில் தான் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தற்கொலைப் படகுகள் அனைத்திலும் தீவிர தற்கொலைப் போராளிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


எதிரிக் கப்பல் ஒன்றில் மூர்க்கமாகப் பாயும் ஆற்றல் கொண்ட இந்தப்படகுகள் ஒரு கப்பலில் ஏழு மீட்டர் ஆழமான குழியை ஏற்படுத்தும் அளவுக்கு வெடிமருந்துகளைக் கொண்டவை.


ஈரானியப் போர்க்கப்பல்களையும். இத்தகைய படகுகளையும் கையாளக் கூடிய 30, 000 கப்டன்களும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். ஆறு மீட்டர் நீளம் கொண்ட 15, 000 கப்பல்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இவை பெரிய கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்கக்கூடிய சி 4 ரக வெடிமருந்துகளையும் கொண்டிருக்கும். இவற்றை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிருப்தியாளர் ஒருவர் நாட்டிலிருந்து தப்பிச் சென்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.


இவர் ஒரு முன்னாள் இராணுவப் பொறியியலாளராவார். ஈரானின் இச்செயற்பாடு அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடியாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வடக்கு அமெரிக்காவில் டிசம்பர் 21 இல் சந்திர கிரகணம்


எதிர்வரும் டிசம்பர் 21 ம் திகதி அதிகாலையில் வடக்கு அமெரிக்காவில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. மேற்கு கோளார்த்தத்தில் அதிகாலை 12:29 மணிக்கு தெரியும் என நாசா கணித்துள்ளது. 72 நிமிடங்களுக்கு இது நீடிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



சந்திர கிரகணம் என்பது நிலவு பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.


இது சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும்; இது ஏற்படுவதற்கு பூமி இடையில் அமைந்திருக்க வேண்டும்.


இதனால், சந்திர கிரகணத்தின் அன்று இரவில் எப்போதும் முழு நிலவாக இருக்கும். கிரகணத்தின் வகை மற்றும் நீளம், நிலவின் இடம் அதன் சுற்றுப்பாதைகளில் எங்கிருக்கிறது என்பதைச் சார்ந்து இருக்கும்.


டிசம்பர் 21 ஆம் திகதி ஏற்படவுள்ள கிரகணத்தை வட அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் மட்டுமே முழுமையாகப் பார்க்க முடியும். தெற்கு மற்றும் கிழக்கு ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்காசியா பகுதிகளில் இதனை காண முடியாது. அடுத்த முழுமையான சந்திர கிரகணம் ஏப்ரல் 15, 2014 இல் ஏற்பட இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இறைச்சிக்கறியில் எலி - பங்களாதேஷ் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு


பங்களாதேஷில் உள்ள பிரபல பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலையொன்றில் பரிமாறப்பட்ட கோழி இறைச்சிக்கறியில் எலியொன்றின் தலை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திங்கட்கிழமை பகல் மாணவர் ஒருவர் உணவு உட்கொண்டிருந்த வேளையில் தனக்கு பரிமாறப்பட்ட கோழிக்கறியில் எலியின் தலை இருப்பதை அவதானித்துள்ளதுடன் உடனடியாக சுகயீனத்திற்கும் உள்ளாகியுள்ளார்.


இதனைத்தொடர்ந்து மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


இதனால் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


மேலும் இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் அப்பள்ளி தலமை சமையல்காரரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


தெற்கு பங்களாதேஷில் அமைந்துள்ள ரக்ஷஹி பல்கலைக்கழகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி கல்லூரி அந்நாட்டில் உள்ள 2 ஆவது பெரிய கல்லூரி மட்டுமன்றி அங்கு சுமார் 25,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.


ஏற்கனவே கல்லூரி சிற்றுண்டிச்சாலையில் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


எலிகள் பங்களாதேஷில் அதிகமாக பெருகியுள்ளமையும் அவை அங்கு சர்வசாதரணமாகும்.


அந்நாட்டு உணவுத் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையொன்றில் பங்களாதேஷில் உள்ள கல்லூரிகளின் சிற்றுண்டிச் சாலைகளில் உணவுகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Tuesday, December 7, 2010

உலகிலேயே மிகவும் காரமான மிளகாய்! உறைப்பு என்றால் அப்படி உறைப்பு

இங்கிலாந்தின் வடமேற்கு மாநிலமான கம்ப்ரியாவில் உலகிலேயே மிகவும் காரமான மிளகாய் தயாரிக்கப்பட்டுள்ளது.



ஐந்தாண்டுகளாக முழுநேர மிளகாய்ச் செய்கையாளராகப் பணியாற்றும் ஜெரால்ட் போளர் என்ற விவசாயி இந்த மிளகாய் வகையை உருவாக்கியுள்ளார்.


உலகிலேயே இதுவரை மிகவும் காரமான மிளகாய் என்ற பெயர் மெக்ஸிகோவின் ஜலபேனோ வகைக்கும், இந்தியாவின் புட்ஜொலோகியா வகைக்கும் உரியதாகவே இருந்தது. ஜெரால்ட் போளர் தனது புதிய வகை மிளகாய்க்கு நாகாவைபர் என்று பெயரிட்டுள்ளார்.


உலகில் மிகவும் காரமான மிளகாய் என்று இது கின்னஸ் புத்தகத்திலும் பதியப்படவுள்ளது. காரத்தை அல்லது உறைப்பை அளவிடுவதற்கான சர்வதேச அளவீட்டைப் பயன்படுத்தி நாகாவைபர் தான் உலகின் மிகவும் காரமான மிளகாய் என்பது வோர்விக் பல்கலைக்கழகத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
52 வயதான போளர் இப்போது சொந்தமாக மிளகாய்க் கம்பனியொன்றையும் தொடங்கியுள்ளார். இந்த மிளகாயை உண்பது மிகவும் வேதனையானது, உங்கள் நாக்கில் பட்டதும் நாக்கு எரிய ஆரம்பித்து அந்த எரிச்சல் உடல் எங்கும் பரவ ஆரம்பிக்கும்.



சுமார் ஒருமணி நேரத்துக்கு இது நீடிக்கும், அந்த நேரத்தில் யாருடனும் பேசவோ அல்லது வேறு எதுவுமே செய்யமுடியாது. இருந்தாலும் இது ஒரு வினோதமான அனுபவம் என்று தனது உற்பத்திபற்றி வித்தியாசமான அறிமுகத்தை போளர் வழங்கியுள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

நேரடி ஒளிபரப்பில் பெண் தற்கொலை


பாங்காக்: தாய்லாந்தை சேர்ந்த இளம்பெண் நிசா. வயது 25. கம்ப்ராக் நெட்வொர்க் என்ற சமூக இணைய தளம் மூலம் ஓர் இளைஞரை அவர் காதலித்ததாக தெரிகிறது. இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் மனக்கசப்பு ஏற்பட்டது. வீடு திரும்பிய நிசா, கம்ப்யூட்டரை ஆன் செய்து வெப்கேமராவை இயக்கினார். மின்விசிறியில் போர்வையை கட்டி தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி காட்சியை நேரடியாக கம்ப்ராக் நெட்வொர்க்கில் பலர் பார்த்து அதிர்ந்தனர்.



சம்பவம் பற்றி நிசா வீட்டு பணிப்பெண் கூறுகையில், ‘‘ஓர் இளைஞர் எனக்கு போன் செய்து நிசா தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதாகவும் அதை தடுக்குமாறும் கூறினார். ஆனால், நிசா அறைக் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் என்னால் சரியான நேரத்துக்கு அறைக்குள் உள்ளே செல்ல முடியவில்லை’’ என்றார். முன்னதாக, தற்கொலை முடிவை தனது காதலருக்கு நிசா தெரிவித்ததுடன், வெப்கேமராவில் நேரடி ஒளிபரப்பு செய்யப் போவதாக கூறியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

புது வசதிகளுடன் மாற்றங்களுடன் பேஸ்புக்

சமூக வலைப்பின்னல் உலகில் தினம் தினம் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்திவரும் பேஸ்புக் தற்போது புரொபைல் பேஜ் வடிவத்தினை மாற்றியமைத்துள்ளதுடன், வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.


நமது புதிய பேஸ்புக் புரோஃபைல் பேஜ் வடிவமைப்பானது படிப்படியாகவே மாற்றப்பட்டு வருகின்றது. எனினும் நீங்கள் விரும்பினால் இந்த வசதியினை உடனடியாக பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இதனை உடனடியாக பரிசோதிக்க விரும்பின்,

A ) இம் முகவரியில் சென்று உங்கள் கணக்கினுள் நுழையவும்.

B) பின்னர் வலது பக்க மேல் மூலையில் தரப்பட்டுள்ள ' You have the new profile' என்று குறிப்பிடப்பட்டுள்ள பச்சை நிற பட்டனை அழுத்தவும்.

c) இப்போது உங்கள் புரோஃபைல் மாற்றமடைந்திருக்கும்.

தற்போது புதிய வடிவில் தரப்பட்டுள்ள வசதிகள் மற்றும் மாற்றங்கள் பற்றி பார்வையிடுவோம்.

1) முதலாவதாக உங்களைப் பற்றியதொரு சிறிய அறிமுகம் தரப்படும் நீங்கள் எங்கு கல்வி கற்றீர்கள், பிறந்த திகதி, எங்கு வளர்ந்தீர்கள்? தற்போது என்ன செய்கிறீர்கள் என்பது தொடர்பிலானது இந்த அறிமுகம்.

அதற்குக் கீழ் அண்மையில் டெக் செய்யப்பட்ட புகைப்படங்கள் எனினும் இவ்விடயத்தில் உங்கள் 'பிரைவசி' தொடர்பான எல்லைகள் மீறப்படவில்லை காரணம் நீங்கள் அனுமதியளித்தவர்கள் மட்டுமே இப்புகைப்படங்களைப் பார்வையிட முடியும்.

2) மிக இலகுவாக மற்றைய வோல், இன்போ, போடோஸ் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வசதி.

3) தற்போது உங்கள் தொழில் மற்றும் கல்வி என்பன பற்றி அதிகமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியும். மேலும் உங்களுடன் இருந்த நண்பர்களை உள்ளடக்க முடிவதுடன் - உங்கள் அனுபவங்கள், திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட முடியும்.

4) உங்களுக்கு பிடித்தமான இசை, வீடியோ, விளையாட்டு, விருப்பங்கள் ஆகியவற்றை 'விஷுவல்' வடிவில் காணமுடியும்.

5) இவற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதுதான் நண்பர்களை அவர்களூடான உங்களின் தொடர்புக்கு ஏற்ப பிரித்துக் கொள்வதாகும். கீழ் காட்டியவாறு அவர்களைப் பிரித்து பட்டியலிட்டுக் கொள்ள முடியும். உறவினர்கள், சிறந்த நண்பர்கள், சக ஊழியர்கள், பாடசாலை நண்பர்கள் போன்றோர் அடிப்படையில் இதனைப் பிரித்துக் கொள்ள முடியும். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சீனாவில் கூகுள் சிதைக்கப்பட்டது ஏன்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசியம்


உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை பற்றிய ரகசியங்களையும், அந்த நாட்டு தலைவர்களை பற்றிய ரகசியங்களையும் அமெரிக்க தூதரகங்கள் திரட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தன. இந்த ரகசியங்களையும் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.



இதையடுத்து இணையதள சேவை வழங்கும் அமேசான், விக்கிலீக்ஸுடனான தனது ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டது.விக்கிலீக்ஸ் இணையதளம் முடக்கப்பட்டது.


தற்போது நன்கொடைகளைப் பெற விக்கிலீக்ஸ் பயன்படுத்திவந்த கணக்கை பேபால் ரத்து செய்துவிட்டது. இதனால் விக்கிலீக்ஸ் தனது பெரும் வருவாய் ஆதாரத்தை இழந்துள்ளது.


இணையதளத்தை தக்கவைக்க விக்கிலீக்ஸ் போராடி வருகிறது.


இந் நிலையில் பிரபல தேடுபொறி இணையதளமான கூகுள், சீனாவில் சிதைக்கப்பட்டதற்கான காரணத்தை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.விக்கிலீக்ஸை மேற்கோள் காட்டி பிரிட்டனில் இருந்து வெளிவரும் ’கார்டியன்’நாளிதழில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.


சீனாவில் தனது இணையதளம் தொடர்ந்து சில விஷமிகளால் சிதைக்கப்பட்டதாலும், இணையதள தகவலுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்ததாலும் சீனாவுக்கான தனது சேவையை கூகுள் மூடிவிட்டது. ஆனால், இந்த நடவடிக்கைகளுக்கான பின்னணி காரணத்தை விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.


சீன ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட நிர்வாக குழுவான பொலிட்பீரோவில் 5-வது முக்கியத் தலைவராக இருப்பவர் லீ சங்சன்.


கூகுள் இணையதளத்தில் அவர் தனது பெயரை டைப் செய்து தேடியபோது அவரைப் பற்றி கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட ஏராளமான இணையதளப் பக்கங்களின் தொடர்புகள் வந்துள்ளன.


இதனால், கோபமடைந்த அவர் கூகுள் இணையதளத்தை சட்டவிரோதமாக சிதைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று விக்கிலீக்ஸ் இணையதளம் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

" விரைவில் வெளியேறி விடுவோம் " - ஆப்கனில் பிரித்தானிய படைகளை திடிரென சந்தித்த கேமரூன் சூசகம்


முன்னரே அறிவிக்காமல் திடிரென இன்று ஆப்கானிஸ்தான் சென்ற கேமரூன் அங்குள்ள பிரித்தானிய படை வீரர்களை சந்தித்துள்ளார். பிரதமரின் திடீர் விஜயம் பிரித்தானிய ராணுவ வீரர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.



நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டி இருப்பதைப் பற்றி பிரித்தானிய ராணுவப் படையினரிடம் பேசிய அவர் கூடிய விரைவில் ஆப்கனை விட்டு வெளியேற பிரிட்டன் படைகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


சர்வதேச நாடுகள் தங்கள் படைகளை 2014 க்குள் திரும்பப் பெறப் போவதாக முன்னர் அறிவிப்பு வெளியாகியிருந்தது. பிரித்தானிய படைகள் 2015 க்குள் ஆப்கனை விட்டு வெளியேறும் என கேமரூனும் அறிவித்திருந்தார்.


ஆனால் நேற்று நடைபெற்ற திடீர் சந்திப்பில் 2011 ஆம் ஆண்டிற்குள்ளேயே ஆப்கனை விட்டு வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறதென தெரிவித்துள்ளார்.


பிரதமரின் இந்த அறிவிப்பு விரைவில் படைகளை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்களின் மத்தியில் மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, December 6, 2010

நீருக்கடியில் சுவாசிக்க புதிய நீச்சல் உடை : அமெரிக்காவில் கண்டுபிடிப்பு


ஆழ்கடல் செல்லும், "ஸ்கூபா டைவிங்' வீரர்களும், மீன்களைப் போல் சுவாசிக்கும் வகையில் புதிய நீச்சல் உடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் உள்ள உயிரினங்கள் மற்றும் புதைபொருட்கள் பற்றி, "ஸ்கூபா' வீரர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். நீருக்கடியில் சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் ஆய்வுப் பணிகளை முழுமனதாக நடத்த முடியாது. இதை கருத்தில் கொண்டு "ஸ்கூபா' வீரர்களும் நீருக்கடியில் சுவாசிக்கும் விதமாக புதிய நீச்சல் உடையை அமெரிக்காவைச் சேர்ந்த அர்னால்டு லான்ட் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அர்னால்டு லான்ட் கூறியதாவது:
ஆழ்கடல் செல்லும், "ஸ்கூபா' வீரர்கள் சுவாசிப்பதற்காக இந்த நீச்சல் உடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக திரவ நிலையில் உள்ள சிறப்பு கரைசல் (பெர்ப்ளூரோ கார்பன்) பயன்படுகிறது. இந்த கரைசலில் பெருமளவு ஆக்சிஜன் கலந்திருக்கும். இதனை அணிந்துள்ள ஒருவரின் காது, மூக்கு மற்றும் நுரையீரல் பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் வெளியேறாமல் கட்டுப்படுத்தப்படும். சுவாசிக்கும் போது ஆக்சிஜன் நிரம்பிய குமிழ்கள் திரவ நிலையில், மூக்கு வழியாக சென்று அவரது நுரையீரல் பகுதியை அடைகிறது. நுரையீரல் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மூக்கு வழியாக வெளியேறாமல் ரத்தத்தில் கலந்து கால்களில் உள்ள "பெமோரல்' நரம்புகளை வேகமாக இயக்க உதவும். சாதாரண காற்றை சுவாசிப்பது போன்ற உணர்வுதான் நமக்கு ஏற்படும். இவ்வாறு அர்னால்டு லான்ட் கூறினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

புற்றுநோயை தடுக்கும் ஆஸ்பிரின் மாத்திரை


புற்றுநோய், இருதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் ஆஸ்பிரின் வலிநிவாரண மாத்திரைக்கு உள்ளது என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
மனிதர்களுக்கு 40 வயதை கடந்துவிட்டால், கொடிய நோய்கள் அழையா விருந்தாளிகளாக உடலில் புகுந்து விடுகின்றன. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவிர உலகில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு இந்த இரண்டு நோய்களும் முக்கிய காரணமாக உள்ளன.
இந்த நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 75 மி.கி. ஆஸ்பிரின் வலி நிவாரண மாத்திரை எடுத்துக் கொண்டால் புற்றுநோய், இருதய நோய் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வறிக்கை "தி லான்செட்' பத்திரிகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது?


ஏன்? எதற்கு ? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் .பல அடிப்படை கேள்விகள் மனித மனங்களுக்குள் இருந்து வருவதே இல்லை. அவற்றில் ஒன்று தான் இது. ஏன் வானம் நீலம்?
சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது. இதனை வானவில்லில் அவதானிக்கலா வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது.
ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது.
கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது.
ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.)
நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது. வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை.
பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.
நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக்கொள்கிறது.
வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.
காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம் போது மட்டும் அந்தப்பகுதி சிவப்பாக தெரியக்காரணம். சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்!
பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது.வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும் சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை.
நாம் 'பார்ப்பது' என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான் காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம்.
இரவில் நிலவின் ஒளி நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Sunday, December 5, 2010

கோபம் செய்யும் கோலம்....


கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம். கோபத்திற்கு காரணம் மன அழுத்தம். இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் யார் தான் மன அழுத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்? காலமும், சூழலும் கோபத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.
எந்திரகதியில் இயங்கும் நமக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது நமக்குள் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது. சந்தோஷத்தைக் கெடுக்கிறது. எனவே கோபத்தை அடக்கி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது சந்தோஷ வாழ்க்கைக்கான முக்கியத் தேவையாகிறது!
நம்மை நாமே வெறுக்க நமக்குள் எழும் கோபமே போதுமானது. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் `சீரியசாக’ எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பரபரப்பின்றி அமைதியாக அணுகிப் பாருங்கள். மனஅழுத்தம் நெருங்காது. மொத்த வேலைகளையும் ஒரே நேரத்தில் போட்டு குழப்பிக் கொண்டிராமல் முக்கியமானதை முதலிலும், முக்கியமல்லா தவற்றை சாவகாசமாகவும் செய்யுங்கள். இதனால் மன உளைச்சலை தவிர்த்து விட முடியும். பிறகு ஏன் கோபம் வரப் போகிறது?
சில வேலைகள் நீண்டகாலம் இழுத்துக் கொண்டு போகும். அந்த தாமதம் சில நேரங்களில் எரிச்சலைக் கிளப்பும். அப்போது உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாதுதான். எனினும் கோபம் என்பது மற்ற உணர்வுகளைப் போன்று சாதாரண உணர்வுதான் என்று புரிந்து கொண்டு அந்த கோபத்தினையும் பக்குவமாக வெளிப்படுத்துவது புத்திசாலித்தனம். நீங்கள் எதையும் குறித்த நேரத்தில் செய்யாமல் சோம்பல் மிகுந்தவராக இருந்தால் வழக்கமாகச் செய்ய வேண்டிய காரியங்களை உங்களால் நிறைவேற்ற முடியாது. அது உங்களுக்கு மனஉளைச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். அதனால் முக்கியமான வேலைகளை முறையாகச் செய்யாமல் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக செய்து பிரச்சினைக்குள்ளாவீர்கள்.
“வேலைக்கு கிளம்பும்போது கடைசி பஸ், ரெயிலை தவறவிட்டுவிட்டால் மனஅழுத்தம் ஏற்படுகிறதா? அலுவலகத்தில் உயர் அதிகாரியோ, உடன் பணிபுரிபவரோ உங்களை குறை சொன்னால் உணர்ச்சிவசப்படுகிறீர்களா? உறவினர்கள், நண்பர்கள் உதாசீனப்படுத்துவதாக நினைத்து கலங்குகிறீர்களா? அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினேன் என்று உள்ளக் குமுறல் கொள்கிறீர்களா? இப்படி நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்களுக்கு எளிதாக கோபம் வந்துவிடும்.
கோபம் ஏற்படுவதற்கான உள்ளார்ந்த அடிப்படைக் காரணங்களை நீங்கள் புரிந்து கொண்டால் அவற்றிலிருந்து உங்களை எளிதாக விடுவித்துக் கொள்ள முடியும். கோபம் ஏற்படும் சூழ்நிலைகளைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருக்கச் சொல்லும் உங்கள் அறிவுதான் உங்களது கோபத்தினை அடக்குவதற்கான முதற்படியாகும்.
கோபப்படும் போது உங்கள் உடலில் ஏற்படும் அங்க அசைவுகளைக் கவனியுங்கள். நரம்புகள் முறுக்கேறுதல், அதிகப்படியான இதயத்துடிப்பு, வியர்வை வழிந்தோடல் ஆகியவற்றினை கோபப்படும் போது உணரலாம். இத்தகைய அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் போதே நீங்கள் கோபத்தினை அடக்க முயற்சி செய்வது நல்லது. கோபம் ஏற்படும் இம் மாதிரியான சூழ்நிலைகளில் இருந்து விலகி நீங்கள் வேறு இடத்திற்கு சிறிதுநேரம் கால்நடையாக உலாவச் செல்லலாம். உங்கள் நண்பர்களுள் ஒருவரைச் சந்தித்து சிறிது நேரம் அரட்டையடிக்கலாம். அல்லது நாம் இனிமேல் கோபப்படவே கூடாது என்று உங்களுக்குள்ளாகவே உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். கோபம் தான் சிறைகளை நிரப்புகிறது. கோபம் தான் நல்ல மனிதர்களையும் குற்றவாளிகளாக்குகிறது என்பதை உணருங்கள்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கோடீஸ்வர நாடுகளில் சீனாவுக்கு மூன்றாமிடம்



பீஜிங்:கோடீஸ்வரர்கள் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில், சீனா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், ஜப்பான் இரண்டாம் இடத்திலும் உள்ளன.அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், 2009ல் சீனாவில், ஆறு லட்சத்து 70 ஆயிரம் குடும்பத் தலைவர்கள் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. 2008ஐ விட இது 60 சதவீதம் அதிகம் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இதுகுறித்து கூறுகையில், "சீனாவின் நிலையான பொருளாதார வளர்ச்சி, தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, முதலீட்டு சந்தையின் வளர்ச்சி ஆகியவையே சீனாவின் இந்த வேகமான வளர்ச்சிக்கு காரணம்' என்றார்.இதுகுறித்து அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது:லட்சம் கோடி வைத்திருப்பவர்கள் (பில்லியனர்) அமெரிக்காவில் 117 பேரும், சீனாவில் 64 பேரும் உள்ளனர். இதில் சீனா இரண்டாமிடத்தில் இருக்கிறது.

சீனாவில் நிர்வாக இயக்குனர்கள், தொழில்முறை முதலீட்டாளர்கள், அதிக பணவசதி படைத்த தனிநபர்கள் போன்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் ரியல் எஸ்டேட், உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய துறைகளை தவிர, மருந்து தயாரிப்பு மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தொழில் முனைவோர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுகின்றனர்.செல்வ வளம், சீனாவின் கடற்கரைப் பகுதிகள் தவிர, சீனா முழுவதும் உள்ள இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களிலும் பரவி வருகிறது. 2009ல் குவாங்டாங், ஷீஜியாங், ஜியான்சு, ஷான்டாங் ஆகிய மாகாணங்களிலும், பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களிலும் வசிப்பவர்களில் பாதிக்கு மேல் கோடீஸ்வரர்கள் தான்.

அதேநேரம், மத்திய மற்றும் மேற்கு பகுதி சீனாவில் முதலீடு அதிகரிப்பது என்பது, சீனாவின் 12வது ஐந்தாண்டு திட்டக்காலமான 2011ல் இருந்து 2015க்குள் நடக்கும். ஆனால் சீனாவின் மொத்த மக்கள் தொகையில் இந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வெறும் 0.2 சதவீதம் மட்டும் தான்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அதிபர் கர்சாயுடன் லடாய் ஆப்கனுக்கு ஒபாமா திடீர் ரகசிய பயணம்



வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆப்கானிஸ்தானுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசியமாக வந்தார். எந்த முன்னறிவிப்பும் இன்றி வியாழன் இரவு அமெரிக் காவை விட்டு புறப்பட்ட ஒபாமா, 13 மணி நேர தொடர் பயணம் மேற்கொண்டு, ஆப்கன் வந்தார். இந்த விவரம் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பலருக்கே தெரியாது. ஆப்கா னிஸ்தானின் பக்ரம் விமானப்படை தளத்தில் நள்ளிரவில் ஏர்போர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கியது.

அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து, ஆப்கன் அதிபர் கர்சாய் சமீபத்தில் புகார் கூறினார். அவரது அரசின் ஊழல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கரு த்தை விக்கிலீக் அம்பலப்படுத்தியது. இதனால், அமெரிக்கா மீது அதிருப்தியில் உள்ளார் கர்சாய். அந்த முரண்பாடுகளை போக்கவும், அமெரிக்க ராணுவ உயரதிகாரிகளை நேரில்  சந்தித்து பேசவும், வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் ஒபாமா வந்ததாக கூறப்பட்டது. விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காபூல் சென்று, கர்சாயை சந்திக்க ஒபாமா திட்டமிட்டிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக திட்டம் கைவிடப்பட் டது.

ராணுவ முகாமில் இருந்தே போனில் கர்சாயிடம் பேசிய ஒபாமா, எல்லா பிரச்னைகளையும் தீர்ப்பதாக உறுதியளித்தார்.
ராணுவ முகாமில் அதிபர் ஒபாமாவை வீரர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களிடையே ஒபாமா பேசுகையில், இது கடுமையான சவால் என்பது நமக்கு தெரியும். தலி பான்கள் அட்டகாசத்தை ஒழிப்போம் என்று கூறினோம். அதை செய்து கொண்டிருக்கிறோம்.

தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் இனி இருக்கக் கூடாது. ஆப்கன் அர சிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் பணிகள், அடுத்த ஆண்டு தொடங்கும். 30 கோடி அமெரிக்கர்கள் சார்பாக உங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் என்றார். 
எனினும், ஒபாமாவின் ஆப்கன் பயணம் ரகசியமானது அல்ல என்றும் 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டதுதான் என்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அதிபர் கர்சாயுடன் லடாய் ஆப்கனுக்கு ஒபாமா திடீர் ரகசிய பயணம்



வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆப்கானிஸ்தானுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசியமாக வந்தார். எந்த முன்னறிவிப்பும் இன்றி வியாழன் இரவு அமெரிக் காவை விட்டு புறப்பட்ட ஒபாமா, 13 மணி நேர தொடர் பயணம் மேற்கொண்டு, ஆப்கன் வந்தார். இந்த விவரம் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பலருக்கே தெரியாது. ஆப்கா னிஸ்தானின் பக்ரம் விமானப்படை தளத்தில் நள்ளிரவில் ஏர்போர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கியது.

அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து, ஆப்கன் அதிபர் கர்சாய் சமீபத்தில் புகார் கூறினார். அவரது அரசின் ஊழல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கரு த்தை விக்கிலீக் அம்பலப்படுத்தியது. இதனால், அமெரிக்கா மீது அதிருப்தியில் உள்ளார் கர்சாய். அந்த முரண்பாடுகளை போக்கவும், அமெரிக்க ராணுவ உயரதிகாரிகளை நேரில்  சந்தித்து பேசவும், வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் ஒபாமா வந்ததாக கூறப்பட்டது. விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காபூல் சென்று, கர்சாயை சந்திக்க ஒபாமா திட்டமிட்டிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக திட்டம் கைவிடப்பட் டது.

ராணுவ முகாமில் இருந்தே போனில் கர்சாயிடம் பேசிய ஒபாமா, எல்லா பிரச்னைகளையும் தீர்ப்பதாக உறுதியளித்தார்.
ராணுவ முகாமில் அதிபர் ஒபாமாவை வீரர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களிடையே ஒபாமா பேசுகையில், இது கடுமையான சவால் என்பது நமக்கு தெரியும். தலி பான்கள் அட்டகாசத்தை ஒழிப்போம் என்று கூறினோம். அதை செய்து கொண்டிருக்கிறோம்.

தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் இனி இருக்கக் கூடாது. ஆப்கன் அர சிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் பணிகள், அடுத்த ஆண்டு தொடங்கும். 30 கோடி அமெரிக்கர்கள் சார்பாக உங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் என்றார். 
எனினும், ஒபாமாவின் ஆப்கன் பயணம் ரகசியமானது அல்ல என்றும் 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டதுதான் என்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Google Earth 6.. துல்லியமான 3D வசதியுடன்


கூகிள் நிறுவனத்தின் அற்புதத்தில் ஒன்றான Google Earth ன் புதிய பதிப்பான Google Earth 6 இன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய பதிப்பின் மூலம் உலகத்தை இன்னும் உண்மையாக காணக்கூடியதாக உள்ளது.
இந்த புதிய பதிப்பில் முப்பரிமாண மரங்கள், உடன் இணைக்கப்பட்ட ஸ்ட்ரீட் விவ் மற்றும் மெருகூட்டப்பட்ட வரலாற்றுரீதியனா படங்கள் என பல்வேறு வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக கூகிள் கூறுகிறது.
முப்பரிமாண மரங்கள்
இந்த புதிய கூகிள் ஏர்த் பதிப்பின் மூலம் மிகத்துல்லியமான முப்பரிமாண படங்களை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக பூமியில் காணப்படும் மரங்கள் கூட மூன்று பரிமாணத்தில் காட்சியளிக்கிறது. இதன் மூலம் நிஜமான சுற்றுலா அனுபவத்தை கூகிள் ஏர்த் மூலம் பெறலாம் என கூகிள் உறுதியளிக்கிறது.

உடன் இணைக்கப்பட்ட Street view 
கூகிள் வழங்கிக் கொண்டிருக்கும் Street view சேவையானது இப்போது கூகிள் ஏர்த்துடன் ஒன்றினைக்கப்பட்டு வெளி வந்துள்ளது. இனி கூகிள் ஏர்த்தில் இருந்தவாறே பிரபல நகரங்களின் தெருக்களுக்கு சென்றுவரலாம்.
வரலாற்று புகைப்படங்கள்
கூகிள் ஏர்த்தின் முன்னைய பதிப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த வரலாற்று ரீதியான படங்களின் தொகுப்பினை இன்னும் இலகுவாக இந்த புதிய பதிப்பில் காணக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு வரலாற்று புகழ்மிக்க இடத்தினை அடையும் போது அந்த இடம் தொடர்பான வரலாற்று ரீதிய படங்களினை தோற்றுவிக்கும் வசதியே இது.
இவ்வாறு பல வசதிகளை கூகிள் ஏர்த் 6 கொண்டுவந்துள்ளது. 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அமெ‌ரி‌க்கா‌வி‌ன் உ‌ண்மை முக‌த்தை வெ‌ளி‌க்கொ‌ண்டு வ‌ந்து‌ள்ளது ‌வி‌க்‌கி‌லீ‌க்‌ஸ்: ர‌ஷ்யா


வி‌க்‌கி‌லீ‌க்‌ஸ் இணையதள‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் உ‌ண்மை முக‌த்தை வெ‌ளி‌க்கொ‌ண்டு வ‌ந்து‌ள்ளதாக ர‌ஷ்ய அ‌திப‌ர் மெ‌க்ததே‌வ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
மா‌ஸ்கோ‌வி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சியபோது இதனை அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
‌வி‌க்‌கி‌லீ‌க்‌ஸ் இணையதள‌ம் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள தகவ‌ல்களா‌ல் ர‌ஷ்யா- ‌இ‌ங்‌கிலா‌ந்து இடை‌யிலான உற‌வுக‌ள் பா‌தி‌‌க்க‌ப்படாது எ‌ன்று‌ம் அவ‌ர் உறு‌தி அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.
மு‌ன்னதாக ர‌ஷ்யாவை மா‌‌பியா கு‌ம்ப‌‌‌லி‌ன் ஆ‌தி‌க்க‌ம் ‌நிறை‌ந்த நாடாக மா‌ற்‌றிய பெருமை ‌மெ‌க்தேவையே சேரு‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்க தூத‌ர் மா‌ஸ்கோ‌வி‌ல் இரு‌ந்து வா‌ஷி‌ங்டனு‌க்கு அனு‌ப்‌பிய தகவ‌ல் ‌வி‌க்‌கி‌லீ‌க்‌ஸி‌ல் வெ‌ளியானது கு‌றி‌ப்‌பி‌‌ட‌த்த‌க்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

அப்பிள் நிறுவனம் முதன்முதலில் தயாரித்த கம்பியூட்டர்களில் ஒன்று 213,000 டொலருக்கு விற்பனை!



அப்பிள் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர்களான ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் ஸ்டீவ் வொஸ்னியக் ஆகியோரால் தங்களது ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது கம்பியூட்டர்களுள் ஒன்று 213, 600 டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

 செவ்வாய்க்கிழமை லண்டனில் இடம்பெற்ற ஏல விற்பனையில் இந்த கம்பியூட்டர் விற்கப்பட்டதாக அப்பிள் நிறுவன இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மார்கோ பொக்லியோன் என்பவர் இதை வாங்கியுள்ளார். அப்பிள் - 1 என்ற இந்தக் கம்பியூட்டரின் அப்போதைய விற்பனை விலை 666.66 டொலர்கள் மட்டுமே. இந்தக் கம்பியூட்டருக்கு ஒரு தொழில்நுட்ப வரலாறு உள்ளது.
யார் வேண்டுமானாலும் இலகுவாகப் பாவிக்கலாம் என்ற ரீதியில் தயாரிக்கப்பட்ட முதலாவது இயந்திரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த வகைக் கம்பியூட்டர்களானது மக்கள் மத்தியில் கம்பியூட்டர்களைப் பிரபலமாக்கி கம்பியூட்டர் பாவனையில் புரட்சியை ஏற்படுத்தியவையாகும்.

அப்பிள் 1 கம்பியூட்டர்கள் 1976 இல் உருவாக்கப்பட்டவை. இந்த ஏல விற்பனையின் போது இதை உருவாக்கியவர்களுள் ஒருவரான வொஸ்னியக்கும் இங்கு சமுகமளித்திருந்தமை ஒரு விஷேட அம்சமாகும்.

ஒரு ஏல விற்பனையில் தனிநபர் கம்பியூட்டர் ஒன்றுக்குக் கிடைத்த ஆகக் கூடுதலான விலை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Saturday, December 4, 2010

20 மடங்கு அதிக நட்சத்திரங்கள் வான்வெளியில் கண்டுபிடிப்பு



வாஷிங்டன்: விண்வெளியில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை, விஞ்ஞானிகளால் முன்பு கணிக்கப்பட்டதைவிட 20 மடங்கு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. விண்வெளியில் 10,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக இருந்தது.

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதை தெரிவித்திருந்தனர். ஆனால், யேல் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர் பீட்டர் வான் டோக்கும் தலைமையில் ஹார்வேர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி சார்லி கான்ராய் இணைந்து நட்சத்திர கூட்டங்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்டனர். பால்வெளி பாதையில் நட்சத்திர கூட்டங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ படம் எடுத்து 2006ல் வெளியிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் பிரகாசமான நட்சத்திரங்கள் எண்ணிக்கையை வைத்து நட்சத்திர தொகுப்புகளை பீட்டர் தலைமையிலான குழு ஆராய்ந்தது. விண்வெளியில் 10,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என்ற கணக்கை அது தவிடுபொடியாக்கியது. அந்த எண்ணிக்கையைவிட 10 முதல் 20 மடங்கு அதிக நட்சத்திரங்கள் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது.

அதாவது, 3க்கு அடுத்து 23 பூஜ்யங்களை சேர்த்தால் வரக்கூடிய எண்ணிக்கையில் நட்சத்திரங்கள் விண்வெளியில் உலவிக் கொண்டிருப்பதாக பீட்டர் தெரிவித்துள்ளார். இதை ஆங்கிலத்தில் மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் என்பதைப் போல 300 செக்ஸ்டிலியன் என்று கூறுகின்றனர். அதாவது, 10,000 கோடியில் 3 லட்சம் மடங்குகள் செக்ஸ்டிலியன் என்று அழைக்கப்படுகிறது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

விக்கிலீசை முடக்கியது அமெரிக்கா : வேறு முகவரியில் மீண்டும் உயிர்த்தது விக்கிலீக்ஸ்


உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் அரசுக்கு அனுப்பிய ரகசிய தகவல்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் வெப்சைட் முடக்கப்பட்டுள்ளது.
அதன் www.wikileaks.com மற்றும் www.wikileaks.org ஆகிய இணைய தள முகவரிகளை அமெரிக்காவின் சிஐஏ நடவடிக்கை எடுத்து முடக்கிவிட்டது.
இதை முன்பே எதிர்பார்த்த விக்கிலீக்ஸ், அடுத்த சில மணி நேரங்களில்www.wikileaks.ch என்ற புதிய இணையதள முகவரியில் இயங்கத் தொடங்கிவிட்டது.
இதை டிவிட்டர் மூலம் உலகெங்கும் உள்ள தனது ரசிகர்களுக்கு வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

''எங்கள் நிலையில் நாங்கள் உறுதியாக இருந்து, உண்மைகளை மட்டுமே வெளியிட்டுள்ளோம், இதனால் யாருக்கும் பயப்படப் போவ‌தில்லை. எங்கள் சேவை மேலும் தொடரும். அதற்கு நன்கொடையாளர்கள் ‌‌‌தேவை'' என்றும் விக்கிலீ்க் தெரிவித்துள்ளது.
உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் வாஷிங்டனில் உள்ள வெளியுறவுத்துறையின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய சுமார் இரண்டரை லட்சம் ரகசிய கேபிள் தகவல்களை கடந்த ஒரு வாரமாக விக்கிலீக்ஸ் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, December 3, 2010

பற்களை வைத்து விமானம், கார் செய்யலாம்



சிட்னி: மீன் பற்களைக் கொண்டு விரைவில் கார், விமானங்கள் உருவாக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உயிரினங்களின் பற்கள், எலும்புகள் குறித்து ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லேண்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வு பற்றி அவர்கள் தெரிவித்துள்ளதாவது: மனிதர்கள், விலங்குகள் மற்றும் உயிரினங்களின் பற்கள் மிகவும் வலுவாக இருக்கின்றன.

செயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்களைவிட விலங்குகளின் பற்கள் உறுதியாக இருக்கின்றன. ஆப்ரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படும் சாலமண்டர் மீன் வகையின் பற்கள் அசாத்திய உறுதியுடன் காணப்படுகின்றன. எடையும் குறைவாக உள்ளன.

இந்த பற்கள் மற்றும் அதன் எனாமல் (மேற்புற பூச்சு) ஆகியவற்றை பயன்படுத்தி எடை குறைவான கார்கள், விமானங்கள் தயாரிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளோம். மிகவும் பழமையான உயிரினம் என்பதால் சாலமண்டர் மீனில் இருந்து இந்த ஆராய்ச்சியை தொடங்கியுள்ளோம். மற்ற மீன்கள் மற்றும் விலங்குகளின் பற்கள், எலும்புகளைக் கொண்டும் வாகனங்கள் உருவாக்கப்படும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்



பறவை போல வானில் ஜிவ்வென்று பறப்பதற்காக ‘ஜெட் பேக்’ என்ற வாகனத்தை உருவாக்கியிருக்கிறார்  நியூசிலாந்து விஞ்ஞானி க்ளென் மார்ட்டின். இது அவரது 30 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த வெற்றி.  1961 - ல் நடந்த முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்தது.
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப  அதில் பலப்பல மாற்றங்கள் செய்து சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.


இறக்கை அசைத்து பறக்கும் வாகனம் கண்டுபிடிக்கப் போகிறேன் என்று அவர் முதலில் கூறியபோது  உறவினர், நண்பர்கள், சக ஊழியர்கள் கேலி செய்துள்ளனர். அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல்  ஆராய்ச்சியில் கவனம் செலுத்தியதால் இன்று சாதனையாளனாக நிற்கிறேன் என்று பெருமையுடன்  சொல்கிறார்.  காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் வகையில் ஜெட்பேக்கில் இலைவடிவில் 2 இறக்கைகள். 200 குதிரைத்  திறன் சக்தி கொண்ட இன்ஜின் உதவியுடன் உந்து விசையை பயன்படுத்தி தடையின்றி பறக்க முடியும்.

நீண்ட தூர பயணத்துக்கு ஏற்ற வகையில் எரிபொருளை வாயு நிலையில் சேமித்துக்கொள்ள முடியும். சக்தி  வாய்ந்த இன்ஜின் என்பதால் 8 ஆயிரம் அடி உயரம் வரை பறக்க முடியுமாம். தொடர்ச்சியாக அரை மணி  நேரம் வானிலேயே பறந்து 50 கி.மீ. தொலைவு வரை செல்ல முடியும். நின்று பயணிக்கும் வகையில்  தற்போது வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

கொள்ளை யடிக்கும் கடற்கொள்ளையர்களைப் போலவே ஸ்குவாஸ்(skuas) என்ற கடற்பறவை


அடுத்தவர் உழைத்து சம்பாதித்த பொருளை கொள்ளையடிப்பது மனித குலத்திற்கு மட்டுமே உரிய குணம் என்று நினைப்பது தவறு. சில காட்டு விலங்குகளும், பறவைகளும் கூட, இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றன.
கடலில் பயணிக்கும் கப்பல்களை வழிமறித்து கொள்ளை யடிக்கும் கடற்கொள்ளையர்களைப் போலவே ஸ்குவாஸ் என்ற கடற்பறவை, மற்ற பறவைகளின் உணவை வழிமறித்து கொள்ளையடிக்கின்றன.
ஸ்குவாஸ் என்பது, கடலில் வாழும் ஒரு வகை பறவை. தாக்கும் குணம் கொண்டது. டெர்ன், பப்பின் உள்ளிட்ட மற்ற கடற் பறவைகள், தங்களின் குஞ்சுகளுக்கோ அல்லது கூட்டுக்கோ கொண்டு செல்லும் உணவை, இப்பறவை இடைமறித்து கொள்ளை அடிக்கும். வானில் பறந்து கொண்டே சண்டை போட்டு மற்ற பறவைகளை கொல்லும் இயல்புடையது இப்பறவை. சில நேரங்களில் ஸ்குவாஸ் பறவைகள் ஒன்று சேர்ந்து, மற்ற பறவைகளை துரத்திச் சென்று வேட்டையாடுவதும் உண்டு. இதனால் ஸ்குவாஸ் பறவைகளை கண்டாலே மற்ற கடற்பறவைகள் கதிகலங்குகின்றன. அமெரிக்கா மற்றும் ஆர்ட்டிக் பகுதிகளில் உள்ள ஸ்குவாஸ் பறவைகள், ஒட்டுண்ணி பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன. முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்துவது பெரும்பாலும் விலங்குகளிடம் காணப்படும் குணமாகும். மற்ற உயிரினங்களிடம் இருந்து கொள்ளையிட்டு தின்பதற்கு, “கிளிப்டோபாராசிடிசம்’ என்று பெயர். ஸ்குவாஸ் பறவைகளில் சில, கொள்ளை அடிப்பதற்காகவே தனியாக வாழ்கின்றன.
ஆர்ட்டிக் பகுதிகளில் வாழும் ஸ்குவாஸ் பறவைகள், பெரும்பாலும் கடலிலேயே வாழும். இனப்பெருக்க காலங்களில் மட்டும் கோடை காலத்தில் கரைக்கு வருகின்றன. ஸ்குவாஸ் குஞ்சுகள் வளர்ந்தாலும் கடலிலேயே இருக்கும். இவை, இனப்பெருக்கத்திற்கு தயாராக இரண்டு ஆண்டுகள் ஆகும். பொதுவாக, வேட்டையாடப்படும் உயிரினம், முட்டைகள், சிறிய பறவைகள் ஆகியவற்றையே மற்றவை உணவாக உண்ணும். ஆனால், ஸ்குவாஸ் பறவை சிறிய விலங்குகள் மற்றும் மீன்களையும் உண்ணும் இயல்புடையது. ஸ்குவாஸ் பறவைகள் நீண்ட தூரம் பறக்க வல்லவை. பெரும்பாலான நேரங்களில், கடல் பகுதிகளில் பறந்து கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ட்டிக் பகுதியில் குளிர் காலம் தொடங்கியதும், பூமியின் தென்பகுதிக்கு அவை இடம் பெயர்ந்து விடுகின்றன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சூறாவளியின் போது கிளிக் செய்யப்பட்ட மேகக் கூட்டங்கள் அரிய படங்கள்

 படத்தைப் பார்த்தால் எங்கேயோ பார்த்தது போன்ற உணர்வு அனைவருக்கும் தோன்றும். Independence Day திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டது போன்ற படங்கள் இவை. புயல் காற்று வீசும் போது எல்லோரும் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கி இருப்பது தான் வழக்கம்.

அந்த நேரத்தில் வானத்தில் ஏற்படும் மாற்றங்களை படம் பிடித்துள்ளார் பிரித்தானிய ஒளிப்படக்காரர் ஒருவர்.
இந்த மேகக் கூட்டங்கள் கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டவை. மேற்கு க்ளாஸ்கோவில் கடந்த ஜூலை மாதம் மிகப்பெரிய புயல் தாக்கிய போது ஆகாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அழகாக படம் பிடித்துள்ளார்.

மொத்தம் 400 படங்களுக்கும் மேல் கிளிக் செய்துள்ளார். இயற்கையை நம் கண் முன்னே காட்டும் படங்களில் சில உங்கள் பார்வைக்கு. நான்கு வருடங்களாக சூறாவளியை படமெடுக்க கடும் முயற்சி செய்ததில் கடந்த வருடம் தான் வெற்றி கிட்டியுள்ளதாக கூறுகிறார் ஒளிப்படக்காரர். தற்போது இந்த படங்கள் இணையத்தில் பலராலும் ரசித்துப் பார்க்கப்பட்டு வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.








பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF