


முகமது நபியை இழிவுபடுத்தி திரைப்படம் எடுத்த காரணத்தினால் தான், அமெரிக்காவை சான்டி புயல் தாக்கியதாக முஸ்லிம் தலைவர்கள் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.முஸ்லிம் மதத்தையும், முகமது நபியையும் இழிவுபடுத்தி கலிபோர்னியாவை சேர்ந்த நபரொருவர் The Innocence of Muslim என்ற பெயரில் படமொன்றை எடுத்தார்.இப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன், முஸ்லிம் நாடுகளில் போராட்டங்களும் வெடித்தன.இந்நிலையில் முகமது நபியை அவமானப்படுத்தியதால் தான், அமெரிக்காவை சான்டி புயல் தாக்கியதாக முஸ்லிம் தலைவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
எகிப்து மத தலைவர்
எகிப்தை சேர்ந்த மத தலைவர் வாக்தி கொனீமின் டுவீட்: அமெரிக்காவை ஏன் புயல் தாக்கியது என்று சிலர் வியக்கின்றனர். நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதால் தான் இறைவன் பழிவாங்கினான் என்பதே எனது கருத்து.இவரது டுவீட்டுக்கு பதில் ஒருவர் தெரிவிக்கையில், பாவப்பட்ட தேசத்தை அழிக்கவும், நியூயார்க்கில் உள்ள ஐ.நா கட்டிடத்தை அழிக்கவும் இறைவன் அனுப்பியது தான் சான்டி என்னும் புனிதப் புயல் என்று கூறியுள்ளார்.அநீதி, ஊழல், கொடுங்கோன்மை ஆகியவற்றுக்கு பெயர் போன ஐ.நா சபையின் கட்டிடத்தை அழிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம்.
சவுதி அரேபியா மத தலைவர்
சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு சல்மான் அல் அவ்தா கூறுகையில், இஸ்லாத்தை தழுவ இது தான் நேரம் என்பதை அமெரிக்கர்களுக்கு நினைவுபடுத்தவே சான்டி புயல் வந்தது என்று தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அமெரிக்காவை தாக்கிய சான்டி புயலில் சிக்கி பலியானவர்களில் முஸ்லிம்களும் அடக்கம் என பல முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.அடுத்தவர்களின் கஷ்டத்தைப் பார்த்து சந்தோஷப்படக் கூடாது என்றும் பலர் தெரிவித்துள்ளனர். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF