Monday, September 6, 2010

விண்டோஸ் எக்ஸ்பி(Windows XP)எளிதாக பார்மெட்செய்வது எப்படி

விண்டோஸ் எக்ஸ்பி(Windows XP) 
இந்த விண்டோஸ் எக்ஸ்பியை நான் என் நண்பர்கள் பலபேருக்கு பார்மெட் மற்றும் இன்ஸ்டால் செய்து கொடுத்து இருக்கிறேன். பார்மெட் செய்யும்போது ஏற்படும் சிலபிரட்ச்சனைகளையும் சந்தித்துஇருக்கிறேன். 
அதனால் முதலில் இதனை எளிதாக பார்மெட்செய்வது எப்படி என்பதை பற்றிய ஒருசிறுகுறிப்பு உங்களுக்கு தருகிறேன். 
(
விண்டோஸ் எக்ஸ்பியை பார்மெட் செய்ய அதிகம் கம்ப்யூட்டர் தெரிந்துஇருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சில முக்கிய குறிப்புகள் நீங்கள் தெரிந்து கொண்டாலே போதும்) 
உங்களுக்காக Windows XP பார்மெட் செய்வது பற்றி சிறுகுறிப்பு. 
நீங்கள் புதிதாக கம்ப்யூட்டர் வாங்கி இருக்கிறீர்கள் அல்லது ஏற்கனவே உள்ளவிண்டோஸ் எக்ஸ்பியை அழித்துவிட்டு புதிதாக எக்ஸ்பி பதியவேண்டு என்றுநினைக்கிறீகள் என்று வைத்துக்கொள்வோம். 
முதலில் உங்களிடம் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி சி.டி. யை உங்கள் கம்ப்யூட்டரின் சி.டிடிரைவில் போட்டு கம்ப்யூட்டரை ஆன் செய்யுங்கள். 
உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி சி.டியை டிடெக்ட் செய்யக் கூடிய செட்டப்சரியாக இருந்தால் கம்ப்யூட்டர் ஆன் ஆகும் நேரத்திலேயே Enter continue.... என்றஆங்கில வார்த்தைவரும். 
அப்படி வந்தால் எண்டர் அடித்துவிடுங்கள். 
(நீங்கள் ஏற்கனவே இருக்கும் விண்டோஸ் எக்ஸ்பியை பார்மெட் செய்து மறுபடி புதியஎக்ஸ்பி ஏற்றுவதாக இருந்தால் உங்களுடைய முக்கியமான பைல்களை ஒரு யூஎஸ்பிடிரைவில் எடுத்துவிடுங்கள். அதோடு உங்களுக்கு தேவையான ஆடியோ வீடியோடிரைவையும் பேக்கப் செய்து அதே யூஸ்பி டிரைவில் வைத்துக்கொள்ளுங்கள். டிரைவர்ஸ் பேக்கப் செய்வதற்க்கு உங்களுக்கு மென்பொருள் இல்லை என்றால் இந்த டிவைஸ் டிரைவர் கோப்புகளை அப்படியே பேக்கப் எடுத்துக்கொள்ள ஒரு எளிய மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Double Driver.
இந்த மென்பொருள் மூலம் ஒரு முறை அனைத்து டிவைஸ் டிரைவர்களையும் பேக்கப் எடுத்து விட்டால் போதும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இதைக்கொண்டு பழையவற்றை மீட்டுக்கொள்ளலாம்.
இலவச மென்பொருள்.


சரி இப்பொழுது அடுத்ததுக்கு வருவோம். உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி சி.டி Enter continue....... என்ற செட்டப்புக்கு செல்லாமல் Operating System Not Installed என்றவார்த்தையோடு நின்றுவிட்டால் அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவேஉள்ளவிண்டோஸ் ஓப்பன் ஆகிவிட்டால் என்னசெய்வது. 
மறுபடியும் உங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்யுங்கள்.

உங்கள் கம்ப்யூட்டர் ரீ.ஸ்டார் ஆகும்போது முதலில் உங்கள் கம்ப்யூட்டர் பிராண்ட்லோகோ வரும் அல்லது பிராண்டட் கம்ப்யூட்டராக இல்லாமல் இருந்தால் உங்கள்கம்ப்யூட்டரின் மெமரியைரீட் பன்னக்கூடிய முதல் டிஸ்பிலே வரும். அந்த நேரத்தில்நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பட்டனில் Esc அல்லது F2 அல்லது Delete என்றமூன்று பட்டன்களில் ஏதாவது ஒன்றை அழுத்துங்கள். ஏன்என்றால் இந்த மூன்றில் ஒருபட்டனில்தான் உங்கள் கணினியை சி.டி. செட்டப்புக்கு மாற்றக்கூடிய வழி கிடைக்கும்.சில கணினியில் முதல் டிஸ்பிலேயிலேயே Setup Option க்குசெல்லக்கூடிய Short cut கீஎது என்பது அதன் வலது அல்லது இடது பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும். 
கணினியில் அது குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த Short cut கீமூலம் உங்கள்கணினியின் Bios செட்டப்புக்கு உள்ளே செல்லுங்கள்.

 அங்கு சென்று Boot Option ல்உள்ளமுதலாவது Boot Option Hard disk  CD or DVD டிரைவிற்க்குமாற்றிவிட்டு F10 அழுத்தி Save & Exit செய்துவிட்டுமறுபடியும்கம்ப்யூட்டரைரீஸ்டார்செய்யுங்கள். 
சரி Enter continue......... என்ற வார்த்தையோடு உங்கள் எக்ஸ்பி சி.டி தொடந்தால்

 உடனே தாமதிக்காமல் உங்கள் கீபோர்டில் Enter பட்டனை அழுத்துங்கள். 
 உங்கள் கீபோர்டில்F2-F6 பட்டனை அழுத்துங்கள். 

சிறிது நேரம் புளூ கலர் ஸ்கிரீனில் உங்கள் எக்ஸ்பி சி.டி ரீட் ஆகும் (நீங்கள் இதுவரை கேள்விபடாத வார்த்தைகள் எல்லாம்கூடஉங்கள் ஸ்கிரீனில் கீழ் பாகத்தில் வந்து வந்து போகும் அதைப்பற்றி கவலைபடாதீர்கள்) 


இதில் To setup Windows XP now, Press ENTER 
என்ற ஒரு வார்த்தை இருப்பதை பார்ப்பீர்கள். இப்பொழுது நீங்கள் விண்டோஸ் புதிதாக இன்ஸ்டால் செய்ய இருப்பதல் Enterஎன்ற பட்டனை உங்கள் கீபோர்டில் அழுத்துங்கள். 
இதில் To continue install a fresh copy of Windows XP press ESC என்றவார்த்தை இருக்கும் உடனேநீங்கள் ESC என்ற பட்டனைஉங்கள் கீ போர்டில் அழுத்துங்கள். 
அடுத்து உங்கள் விண்டோஸ் எக்ஸ்பிக்கான Agreement பக்கம் ஓப்பன் ஆகும். 

இதில் F8  அழுத்தி நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்வதற்க்கான மைக்ரோசாப்ட் நிறுவணத்தின் கண்டிசனுக்குஒப்புக்கொண்டதாக அடுத்த பக்கத்துக்கு செல்லுங்கள். 
அடுத்ததாக நீங்கள் முக்கியமான இடத்திற்க்கு வருகிறீர்கள். 
இங்குதான் உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள ஹார்ட் டிஸ்க் பற்றிய தகவல்கள் இருக்கின்றது. 


இப்பொழுது உங்கள் கணினியில் புதிய ஹார்ட் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளதால் unpartitioned space என்ற குறிப்போடு உங்கள் ஹார்ட்டிஸ்க்கின் அளவை உங்கள் கம்ப்யூட்டர் உங்களுக்கு தெரியப்படுத்தும். 
நீங்கள் 80 GB ஹார்ட் டிஸ்க் பொருத்தி இருந்தால் இங்கு unpartioned space 80000 MB என்று இருக்கும. 
சரி. இந்த பார்டிசன் டிஸ்பிலேயில் மேலே மூன்று வரியில் குறிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. 
அவை 
-To setup windows xp on the selected item, press ENTER 
(
நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்யவேண்டும் என்றால் Enter அடிக்க வேண்டும்) 
-To create a partition in the Un partitioned space press C 
(
நீங்கள் புதிதாக பார்டிசனை உருவாக்க வேண்டும் என்றால் உங்கள் கீ போர்டில் C என்ற பட்டனை அழுத்தவேண்டும்) 
- To delete the selected partition press D 
(
நீங்கள் தவறுதலாக உருவாக்கிய இந்த பார்டிசனை அழிக்கவேண்டுமென்றால் உங்கள் கீ போர்டில் D என்ற பட்டனை அழுத்தவேண்டும்) 
சரி.. இப்பொழுது நீங்கள் பார்டிசன் இதுவரை உருவாக்கப்படாத உங்கள் ஹார்டிஸ்கில் புதிதாக பார்டிசனை உருவாக்கவேண்டும். 
அதற்க்கு என்ன செய்வது. 
இரண்டாவதாக எழுதப்பட்ட 
-To create a partition in the Un partitioned space press C 
என்ற குறிப்புதான் இப்பொழுது உங்களுக்கு தேவை. 
அப்படி என்றால் நிங்கள் இப்பொழுது உங்கள் கீ போர்டில் C என்ற எழுத்தை அழுத்துங்கள். 
உடனே உங்கள் கம்ப்யூட்டரில் 80 GB ஹார்டிஸ்க் இடம் இருப்பதால் 80000 MB என்று எழுதப்பட்டதுபோல அதில் நீங்கள் டைப் செய்து மாற்றும் விதமாக ஒரு டிஸ்பிளே ஓப்பன் ஆகும். 
இங்கு நீங்கள் முடிவு செய்யுங்கள். என்ன ? 

உங்களுக்கு ஒரே பார்டிசனில் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்யவேண்டுமா அல்லது இரண்டு பார்டிசனாக பிரித்துவிட்டு அதில் ஒரு பார்டிசனில் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்யவேண்டுமா என்று. 
ஒரே பார்டிசனில் இன்ஸ்டால் செய்யவேண்டுமென்றால் வேறு எதுவும் செய்யாமல் எண்டர் பட்டனை அழுத்துங்கள். 
இரண்டு பார்டிசன் வேண்டுமென்றால் அந்த 80000 MB என்று எழுதப்பட்ட இடத்தில் நீங்கள் 40000 என்று மாற்றி எண்டர் அழுத்துங்கள். 
பிறகு பாக்கி இருக்கும் Un partitioned space பகுதிக்கு உங்கள் கர்சரை மாற்றி அதில் செலெக்ட் ஆகி இருக்கும் நேரத்தில் மறுபடி C என்ற பட்டனை அழுத்தி பாக்கி உள்ள MB யை அப்படியே எண்டர் அழுத்துங்கள். 
ஓகே இப்பொழுது இரண்டு பார்டிசன் C & D உங்களூக்கு உருவானது உங்கள் டிஸ்பிளேயில் தெரியும். 
அடுத்து மறுபடியும் உங்கள் கீ போர்டில் உள்ள ஆரோ மூலம் C டிரைவை செலெக்ட் செய்து எண்டரை அழுத்துங்கள். இப்பொழுது
Formate the partition using NTFS file system (Quick) 
Formate the partition using FAT file system (Quick) 
Formate the partition using NTFS file system 
Formate the partition using FAT file system 
என்று குறிப்பிடப்பட்ட நான்கு வரிகள் எழுதப்பட டிஸ்பிளே உங்களுக்கு தெரியும். 


இப்பொழுது நீங்கள் புதிதாக இன்ஸ்டால் செய்வதால் முதலாவதாக உள்ள Formate NTFS Quick என்ற இடத்தை தேர்வு செய்து எண்டர் அழுத்துங்கள். 
சிறிது நேரத்தில் பார்மெட் முடிந்து விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் ஆக ஆரம்பித்துவிடும். 
விண்டோஸ் எக்ஸ்பி சிறிது நேரம் காப்பி ஆன பிறகு உங்கள் கம்ப்யூட்டர் தானாக ரீ ஸ்டார்ட் ஆகும். அப்பொழுது மறுபடியும் உங்கள் கம்ப்யூட்டரில் போடப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி சி.டியை கம்ப்யூட்டர் டிடெக்ட் செய்து Enter Continue... என்று வந்தால் எண்டரை அழுத்த வேண்டாம். அது தானாக ஓப்பன் ஆக விடுங்கள். 
உடனே விண்டோஸ் எக்ஸ்பி லோகோ வந்த பிறகு கீழ் கானும் டிஸ்பிளே வந்துவிடும். 

20 முதல் 25 நிமிடம் இன்ஸ்டால் ஆனதும் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி கியை உங்களிடம் டைப் பன்னச்சொல்லி கேட்க்கும். உங்கள் சி.டியின் கீயை அதில் டைப் செய்யுங்கள். பிறகு எண்டர் அடித்து தொடருங்கள். 

பிறகு உங்கள் கம்ப்யூட்டருக்கு பெயர் மற்றும் கம்பெணியின் பெயர் கேட்க்கும். அதனையும் டைப் செய்து தொடருங்கள்.
 அடுத்து எந்த டிஸ்பிளே வந்தாலும் எண்டர் அழுத்துங்கள். சிறிது நேரத்தில் விண்டோஸ் இன்ஸ்டால் புரோக்ராம் முடிந்துவிடும். 

இப்பொழுது நீங்களே உங்கள் கம்ப்யூட்ருக்கு விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்துவிட்டீர்கள்.
 
அடுத்து விண்டோஸ் எக்ஸ்பி சி.டியை எடுத்துவிட்டு உங்களிடம் உள்ள டிரைவர் CD யை போட்டு ஆடியோ மற்றும் வீடியோ டிரைவர்கள் அனைத்தையும் இன்ஸ்டால் செய்துவிடுங்கள். 
இதில் ஏதேனும் குழப்பம் இருந்தால் தயங்காமல் என்னை தொடர்புகொள்ளலாம். 

என் ஈமெயில் முகவரி -ZMR2597@YAHOO.COM
விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்துவிட்டீர்கள் அடுத்து விண்டோஸ் எக்ஸ்பியில் உங்களுக்கு தேவைப்படும் சின்ன சின்ன குறிப்புகள் பற்றி பார்ப்போம். 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF