ஒளிபரப்புக் கோபுரமொன்றின் திருத்தப் பணிகளுக்காக அதன் மீது ஏறும் ஊழியர்கள் இருவரின் மயிர்க்கூச்செறியும் காணொளிக் காட்சியானது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இக்காணொளியானது சுமார் 6 நிமிடங்கள் வரை ஓடக்கூடியது.
ஊழியர் ஒருவரின் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருந்த கமெரா ஒன்றின் மூலமே இக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
சுமார் 1,768 அடி உயரமான இக்கோபுரமானது பிரான்ஸிலுள்ள ஈபிள் டவர் (1,063 அடி), அமெரிக்காவிலுள்ள எம்பயர் ஸ்டேட்ஸ் கட்டிடம்( 1,453 அடி ) மற்றும் அமெரிக்காவின் வில்லிஸ் டவர் (1730 அடி) ஆகியவற்றை விட உயரமானதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
தனியாக அல்ல, கூடவே சுமார் 13.6 கிலோகிராம் நிறையுடைய ஆயுதங்கள் உள்ளடங்கிய பெட்டியொன்றையும் இவர்கள் சுமந்து செல்லவேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி காணொளி குறிப்பிட்ட ஊழியர்கள் கடமைபுரியும் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திலேயே முதன்முதலில் வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் இது போன்ற 2 காணொளிகளை அந்நிறுவனம் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF