ஊசி மருந்தின் மூலம் மரண தண்டனகளை விதிப்பதற்கு பயன்படுத்தப்படும் சோடியம் தையயோபொன்டல் என்ற மருந்துப் பொருளுக்கு காணப்படும் தட்டுப்பாட்டினால் தண்டனைகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
நாடு முழுவதிலும் இந்தப் மருந்துப் பொருளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் 35 மாநிலங்களில் இந்த மருந்துப் பொருள் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது மாற்று மருந்துகளை பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
2011ம் ஆண்டளவில் இந்த மருந்துப் பொருட்களை நாடு முழுவதிலும் விநியோகம் செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனவரி மாதத்திற்குள் ஒன்பது மாநிலங்களில் 17 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மருந்துப் பொருள் தட்டுப்பாடு காரணமாக சில மாநிலங்களில் மரண தண்டனை உத்தரவுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF