Friday, September 24, 2010

ஐநா கூட்டத்தில் ஈரான் அதிபர் பேச்சு : அமெ. அதிகாரிகள் வெளிநடப்பு

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் ஈரான் அதிபரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிகாரிகள் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
2001 செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் அமெரிக்க அரசு இருப்பதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் நம்புகிறார்கள் என ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் குறிப்பிட்டார்.
பொருளாதார சரிவை மீட்கவே அமெரிக்க அரசில் உள்ள சில சக்திகள் அந்த தாக்குதலுக்கு ஏற்பாடு செய்ததாகவும், செப்டம்பர் 11 தாக்குதலில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அஹமதிநிஜாத் தெரிவித்தார்.
அவரது பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த இரு அமெரிக்க அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ் மற்றும் இதர ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவர்களும் உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
2001 செப்டம்பர் 11இல் விமானங்களைக் கடத்தி நியூயோர்க்கில் உலக வர்த்தக மையத்தின் மீது அல்-கொய்தா இயக்கத்தின் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF