Thursday, September 23, 2010

டைட்டானிக் மூழ்கிய ரகசியம் தெரிந்தது

இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்கட்டியில் மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் உயிர் இழந்தனர். பலர் உயிர்காக்கும் படகு மூலம் தப்பினார்கள்.

இதில் சார்லஸ் மைட்டோலர் என்ற மூத்த கப்பல் அதிகாரியும் ஒருவர். அவருடைய பேத்தி லூயிஸ்பேட்டன் டைட்டானிக் கப்பல் மூழ்கியது தொடர்பாக ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

அதில் டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது? என்ற ரகசியத்தை வெளியிட்டு உள்ளார். தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத்து இந்த ரகசியத்தை கூறி உள்ளார்.

டைட்டானிக் கப்பலுக்கு முன்பு பனிக்கட்டி மிதப்பதை கண்டுபிடித்து கப்பலை இடது பக்கமாக திருப்ப சொன்னார்கள். ஆனால் அதை தவறுதலாக புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பிவிட்டார்கள். மேலும் திசை திருப்பும் கருவியும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால்தான் கப்பல் பனிக்கட்டியில் மூழ்கிவிட்டது என்று அவர் எழுதியுள்ளார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF