Saturday, September 25, 2010

15 கொம்புகள் கொண்ட அதிசய டயனோசரஸ் எழும்பு கூடு அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய உயிரினம் டயனோசரஸ். இயற்கை பேரழிவு மற்றும் பருவ நிலை மாற்றம் போன்றவற்றின் காரணமாக அந்த இனம் உலகில் அழிந்து விட்டது. ஆனால் அவை வாழ்ந்த அடையாளங்கள் காலச்சுவட்டில் இருந்து மறைந்து விடவில்லை.
உலகில் வாழ்ந்து மடிந்த டயனோசரஸ்சின் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது அரியவகை டயனோசரஸ்கள்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் அமெரிக்காவில் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உதா பகுதியில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் பூமியை தோன்டி ஆய்வு மேற் கொண்டனர். அப்போது வினோதமான அறிய வகை விலங்குகளின் 2 ராட்சத எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர்.
அதில் முகதாடையின் முன் புறத்தில் காண்டா மிருகத்தை போன்ற ஒரு கொம்பு இருந்தது. மேலும் அதன் கழுத்து பகுதியில் 3 கொம்புகளும், முதுகெலும்பில் மற்ற 11 கொம்புகளும் ஆக மொத்தம் 15 கொம்புகள் இருந்தன. எனவே, அந்த அறிய விலங்கின் எலும்பு கூடுகள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன.
அவையும் டயனோசரஸ் வகையை சார்ந்தது என கண்டறிந்தனர். அது வாழ்ந்த போது 5 மீட்டர் நீளமும், 2500 கிலோ எடையுடனும் இருந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும் உதா மியூசியத்தின் ஆய்வகத்தில் இதுகுறித்து தொடர்ந்து பரிசோதனை நடந்து வருகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF