Wednesday, September 22, 2010

சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம் அமெரிக்கா தயாரிக்கிறது

பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க ராணுவம் பல புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வானில் பறந்தபடியே உளவு பார்ப்பதற்காக அதிநவீன விமானத்தை தயாரித்து வருகிறது.
அது “போயிங்” ரக விமானத்தை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.440 கோடி செலவில் இந்த விமானம் தயார் செய்யப்படுகிறது.
இது ஆளில்லாமல் சூரிய சக்தி மூலம் தானாக இயங்க கூடியது. இதற்கு “சோலார் ஈகிள்” (சூரிய கழுகு) என பெயரிடப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் இது சூரிய ஒளியை உறிஞ்சி சேமித்து வைத்து கொள்ளும்.

அதன் மூலம் இரவு நேரத்திலும் கூட தொடர்ந்து பறக்கும். விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கருவிகள் போட்டோ எடுத்து அதன் மூலம் தகவல்களை அமெரிக்க ராணுவத்துக்கு அனுப்பும்.

விமானத்தில் சக்தி வாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் “புரோபல் லர்கள்” (உந்து விசை கருவிகள்) பொருத்தப்பட உள்ளன. இதை ஆளில்லா விமானம் ஆகவும், போர்க்காலங்களில் இதை பயன்படுத்தவும் முடிவும். அடுத்த ஆண்டு (2011) இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF