இறந்த ஒருவரின் இதயத்தை, மற்றுமொரு நபருக்கு பொருத்துவது தொடர்பில் சுவிஸ் மருத்துவர்கள் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் இறந்த ஒருவரின் உடலிலிருந்து எடுக்கப்படும் இருதயத்தை நீண்ட நேரத்திற்கு பேணிப் பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இருதய மாற்று அறுவைச் சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படும் இருதயம் 20 நிமிடத்திற்குள் பொருத்தப்பட வேண்டும் என்பதே பொதுவான நியதியாகும்.
எனினும், சுவிஸ் ஆய்வாளர்களின் சோதனைகளின் மூலம் இந்த நேரம் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மூளை இறந்த நபர்களின் இருதயங்களை அதிகளவில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதயத் துடிப்பு நின்றதன் பின்னர் நாற்பது நிமிடங்கள் வரையில் இருதயத்தை பாதுகாக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பேர்ன் மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த ஆய்வினை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF