தென் அமெரிக்க சிலி நாட்டின் காபியாபோவிலுள்ள சுரங்கம் ஒன்றில் சிக்கி 21 நாட்களாக 33 தொழிலாளர்கள் இன்னமும் போராடி கொண்டிருக்கின்றனர்.சுரங்கத்தின் 3 ஆயிரம் அடி ஆழத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 5ஆம் திகதி சுரங்க பாதை திடீரென இடிந்து விழுந்தது.
அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டனர்.அவர்களை மீட்கும் பணி நடந்தது. ‘ட்ரில்’ இயந்திரம் மூலம் துளை போட்டு அவர்கள் இருக்கும் இடத்தை 17 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடித்த போது அவர்கள் அனைவரும் உயிரோடு இருப்பது தெரிய வந்தது.
சிறிய அளவிலேயே இந்தத் துளை போடப்பட்டுள்ளதால், அதன் வழியாக அவர்களை மீட்க முடியவில்லை. எனினும் தகவல் தொடர்பு, வெளிச்சம் வசதிகள் அதன் மூலம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. அதன் வழியாக குளுக்கோஸ் மற்றும் மாத்திரைகள் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன.
21 நாட்களாக அவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்பதற்கு இன்னும் ஒரு மாதம் வரை ஆகலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.அதுவரை அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக மிக அத்தியாவசியமான பொருட்களை மட்டும் சுரங்க குழாய் வழியாக அனுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே அந்த பகுதியில் அடிக்கடி பூகம்பமும் ஏற்பட்டு வருகிறது. விபத்து நடந்ததற்கு பிறகு இரு தடவை பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுரங்கம் மேலும் இடிந்து அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Saturday, August 28, 2010
சிலி நாட்டின் சுரங்கத்தில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் 21 நாட்களாக 33 தொழிலாளர்கள் தவிப்பு!
செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை
கண்பார்வை பறிபோனால் வேறு ஒருவரிடம் தானமாக பெற்ற கருவிழிகள் மூலம் மீண்டும் பார்வை பெற்று வருகின்றனர். தற்போது செயற்கை கருவிழிகள் மூலம் பார்வை பெற செய்து ஒரு பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.
அவரது பெயர் மேகிரிப்த். இவர் சுவீடனில் உள்ள லிங் கோபிங் பல்கலைக்கழகத்தில் இதற்கான ஆய்வு மேற்கொண்டார்.
இவர் மனித திசுக்களை அல்லது இணைப்பு திசுவின் வெண் புரதம் (காலோஜென்) போன்றவற்றை ஆய்வகத்தில் செயற்கையாக வளரச்செய்தார். அதை கண்களில் பொருத்தும் காண்டேக்ட் லென்ஸ் போன்று வடிவமைத்தார்.
பின்னர் பார்வை இல்லாதவர்களுக்கு அதை பொருத்தி பார்வை பெற செய்தார். இது மருத்துவ உலகின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
தற்போது கருவிழி பாதிப்பினால் உலகில் சுமார் 1 கோடி மக்கள் பார்வை இழந்து இருளில் தவிக்கின்றனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம் அவர்களின் வாழ்வில் மீண்டும் ஒளிபரவும் என்பதில் சந்தேகமில்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
சீனாவின் நவீன ஸ்ட்ரட்லிங் பஸ்
போக்குவரத்து நெரிசல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும்.
வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பயணிகள் மற்றும் வாகனங்களின் வசதி கருதியும் நவீன பயணிகள் பஸ் ஒன்றினை சீனா அடுத்த வருடமளவில் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டமிடவுள்ளது.
சீனாவின் தலைநகரான சனத்தொகை நெரிசல் மிக்க பீஜிங் நகரிலேயே இது பரீட்சிக்கப்படவுள்ளது.
மேற்படி பஸ்ஸின் கீழ்ப்பாகம் அகன்று விரிந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு கீழாகவுள்ள இடைவெளியில் கார்கள் மற்றும் 1.55 முதல் 1.6 மீற்றர் வரை உயரம் கொண்ட வாகனங்கள் பயணிக்க முடியும்.
இது 'ஸ்ட்ரட்லிங் பஸ்' என அழைக்கப்படுகின்றது.
இந்நவீன பஸ், கடந்த மே மாதம் சீனாவில் இடம்பெற்ற சர்வதேச 'ஐ-டெக் எக்ஸ்போ' கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதற்கான விசேட உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மேற்பாகத்தில் சுமார் 1200 முதல் 1400 பேர் வரை பயணிக்கலாம்.
மேலும் இதனுள் சூரிய ஒளி அதிகளவில் உட்புகுவதால் பயணிகள் தங்கள் மன உளைச்சலில் இருந்தும் விடுபட முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தொன்று ஏற்படின் அதிலிருந்து தப்புவதற்காக விமானங்களில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையே இதிலும் பின்பற்றப்படவுள்ளது.
பெரிய அளவிலான வாகனங்கள் இதன் கீழ் பகுதியினுள் நுழையாமல் தடுப்பதற்காக விசேட சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இது பாவனைக்கு வருமிடத்து, வீதி நெரிசல் பெருமளவில் குறையுமென சீன போக்குவரத்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மலைப்பாம்புகளை பிடிப்பதற்காக உயிரை பணயம்வைக்கும் ஆபிரிக்க பழங்குடிகள்
ஆபிரிக்காவின் தென் பகுதியில் காணப்படும் அதிபயங்கர மலைப்பாம்புகளை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் வேட்டையாடும் மனிதர்களை பார்க்கும் பொது நமக்குள் பயம் தொற்றிகொள்ளும் என்பது உண்மையே.
இந்த பாம்புகள் தான் உலகிலே மிக நீளமான மலைபாம்புகள் ஆகும். இவற்றின் கூரிய பற்களும் சர்வ சாதாரணமாக எந்த ஒரு காட்டு விலங்கினையும் சுருட்டி கொல்லும் திறனுடைய இந்த பாம்புகளை வேட்டையாடும் முறையே வித்யாசமாக இருக்கிறது. மலைப்பாம்பு பிடிக்கும் முறை மிகவும் எளிதானது தான்.
மலைப்பாம்பு இருக்கும் வளையினை கண்டிபிடித்தவுடன் கையில் ஒரு சிறிய தோலை சுற்றிக்கொண்டு சின்ன தீ பந்தத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு மனிதன் அந்த வளையினுள் செல்லுவான் முட்டையிட்டு அடைகாக்கும் மலைப்பாம்பு எப்பொழுதும் மிக கோபமாகவே இருக்கும். திறமையான மனிதன் மிக வேகமாக வெளியே வந்துவிடுவான். தவறினால் மனிதனின் தலை பாம்பின் வாயினுள் தான்.
ஆனால் அவர்களும் புத்திசாலியே, தோல் சுற்றபட்ட கையால் மெதுவாக பாம்பின் முன் ஆட்டுவார்கள் ஒரு வேளை பாம்பு இவர்களை கவ்வி விட்டால் கையால் பாம்பின் நுரையீரல் இருக்கும் பகுதியை கெட்டியாக பிடித்து அதனை சம்மாளித்துவிடுவார்கள். கையில் இருக்கும் சிறிய தீ பந்தம் பாம்புகள் முகத்தினை நோக்கி வராதவாறு முகத்தின் முன் பிடித்து கொள்வார்கள்.
அதையும் மீறி பாம்பு கவ்விவிட்டால் வெளியே இருக்கும் நண்பன் வேகமாக காலைபிடித்து வெளியே இழுத்துவிடுவான். இவ்வாறு பிடிக்கபட்டு கொல்லப்படும் இந்த மலை பாம்புகளின் தோல்கள் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது.

Friday, August 27, 2010
ஜிபிஎஸ் எப்படி இயங்குகிறது?
Global positioning system என்பதன் சுருக்கமான பெயர்தான் GPS. இதில் 24 செயர்க்கைக்கோள்கள் பங்கு எடுத்துகொள்கின்றன இவை அமெரிக்க மிலிட்டரி அப்ளிகேசன்களுக்காக அவர்களுடைய U.S.Department of defence மூலமாக ஆகாயத்தில் விடப்பட்டன. 1980களில் இந்த ஜிபிஎஸ் சிஸ்டம் மற்ற மக்களுக்காகப் பயன்பட அளிக்கப்பட்டது.
ஜிபிஎஸ் செயர்க்கைக்கோள்கள் பூமியை ஒரு நாளில் இரண்டு முறை வலம் வருகின்றன. அவை தங்களுடைய தற்போதைய இடத்தை எல்லா வேளையிலும் சிக்னல்கள் மூலமாக அனுப்பிக்கொண்டிருக்கும். ஜிபிஎஸ் ரிசிவர்கள் இந்தத் தகவல்களை பெற்றுக்கொள்ளும். பிறகு சிக்னல்கள் எந்த நேரத்தில் trasmit செய்யப்பட்டன ,எந்த நேரத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டன ஒத்துப்பார்க்கும்.
அந்த இடைவெளி நேரத்தின் மூலம் ரிசிவருக்கு செயற்கைக்கோள் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று தெரிந்து விடும் . ஒரு ஜிபிஎஸ் ரிசிவர் 3 அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட செயர்க்கைக்கோள்கள் மூலம் சிக்னல்கள் பெறுகிறது. பிறகு Triangulation என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ரிசிவர் இருக்கும் இடத்தை துல்லியமாக கணக்கிட்டு விடும். இதை ஒரு எலெக்ட்ரானின் படமாக டிஸ்ப்ளே செய்து விடும்.
ரிசிவருக்கு குறைந்தபட்சம் 3 செயர்க்கைகொல்களிலிரிந்து சிக்னல்கள் தேவைப்படும்.இதன் மூலம் இரு பரிணாமத்தில் இடத்தை ,அதாவது latitude மற்றும் longitude கணக்க்கிட்டுவிடும். 4 அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட செயர்க்கைகொல்கள் மூலம் சிக்னல்கள் கிடைத்தால் ரிசிவர் அது எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதையும் கண்டுபிடித்து விட முடியும்.
பயனாளரின் இடத்தை தெரிந்த உடன் ரிசிவர் வேறு பல விசயங்களையும் கணக்கிட முடியும். சராசரி வேகம் எந்தத்திசையில் செல்கிறது நீங்கள் செல்ல இருக்கும் இடத்திற்கு உள்ள தூரம் போன்றவை. ஜிபிஎஸ் ஒரு நாளில் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும். வெயிலோ ,மழையோ ,மேகம் இருக்கிறதோ .இல்லையோ , ஒற்றைப்பற்றியும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.எந்த இடத்திலும் இயங்கும்.
ஒரு விஷயத்தை மனதி கொள்ள வேண்டும். ரிசிவர் சிக்னல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் என்பதால் வீட்டின் உள்ளே உட்கார்ந்து கொண்டிருந்தால் அது வேலை செய்யாது. தண்ணீரின் அடியிலும் சிக்னல்கள் கிடைக்காது. மற்றபடி நிலத்திலோ நீரிலோ ஆகயத்திலோ எங்கு வேண்டுமானாலும் பயன்படுதிக்கொள்ளலாம்.
இன்று ஜிபிஎஸ் ரிசிவர்கள் கார்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள எல்லா இடங்களுக்கும் வரைபடம் கிடைக்கின்றன. இவை இரண்டே சிடியில் வெளிவந்துள்ளது. தேவைப்பட்டும் படங்களை மட்டும் ஜிபிஎஸ் ரிசிவருக்கு டவுன்லோட் செய்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக நியுயார்க் செல்ல வேண்டும் என்றால் அந்த வரைபடத்தை மட்டும் ரிசிவரில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
பிறகு ஒரு புது நகரத்தில் வழி தெரியாமல் திண்டாடவேண்டாம். பிரயாணத்தை தொடங்கும் இடத்தையும் போய்ச்சேரவேண்டிய இடத்தையும் கொடுத்துவிட்டால் போதும். அதுவே வழியை காட்டிவிடும்."வாயில் இருக்கிறது வழி " என்பது போக இன்று "ஜிபிஎஸ் வழி காட்டும் " என்று கூரலாம்.
மேலும் தவறான பாதையில் நாம் சென்றாலும் நீங்கள் தவறான பாதையில் செல்கிரிர்கள் என்று சொல்லும் சிச்டம்களும் இன்று வந்துள்ளன. இவற்றை காரில் பொருத்திக் கொள்ளலாம். வழியில் சென்று கொண்டிருக்கும் போது எமர்சன்சியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் அப்பொழுது அந்த இடத்தையும் இது காட்டும்.
மிலிட்டரி தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஜிபிஎஸ் இன்று ஒரு சராசரி குடிமகனுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து விட்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம்.
விரைவில் வெளிவரும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த கூகுளின் சேவை இன்று முதல் நாம் அனைவரும் பயன்படுத்தலாம் அதாவது
விரைவில் வெளிவரும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த கூகுளின் சேவை இன்று முதல் நாம் அனைவரும் பயன்படுத்தலாம் அதாவது
ஜீமெயில் மூலம் இனி நாம் வெளிநாட்டில் இருப்பவருடன் குறைந்த செலவில் போனில் பேசலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது நம் ஜீமெயில் கணக்கை திறந்து வைத்துக்கொண்டு சாட் என்பதில் நுழையவும் அடுத்து Call என்பதை சொடுக்கி நாம் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் போன் செய்யலாம்.
Call Phone என்பது இல்லாவிட்டால் சாட்- என்பதில் இருக்கும் தேடலில் call என்பதை கொடுத்ததும் வரும். Call என்பதை சொடுக்கி நாம் போன் பேசலாம்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவரிடம் இலவசமாக பேசலாம் மற்ற நாடுகளில் இருப்பவருடன் குறைவான கட்டணம் நிர்ணயத்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Thursday, August 26, 2010
நாம் நினைப்பதை முடிந்திடும் கணனிகள்
இணையத்தில் தேட வேண்டுமா , உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள்.
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம்.
கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியாளர்கள்.
ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள் : விஞ்ஞானிகள் தகவல்.!!
ஆக்சிஜன் இல்லாத இடத்தில் பாக்டீரியாக்கள் எத்தனை நாட்கள் உயிர்வாழும் என விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதற்காக இங்கிலாந்தில் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு மலையின் செங்குத்தான பாறையில் இருந்து சில பாக்டீரியாக்களை சேகரித்தனர்.
அவற்றை ஆக்சிஜன் இல்லாத விண்வெளிக்கு எடுத்து சென்றனர். அங்கு வைத்து சோதனை செய்தனர். அப்போது அந்த பாக்டீரியாக்கள், 553 நாட்கள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அல்ட்ரா லைட்கள், காஸ்மிக் கதிர்கள் ஒளிவீச்சில் விண்வெளியில் உள்ள தட்ப வெப்பநிலையில் உயிர் வாழும் தன்மை உடையது என்றும் கண்டறிந்தனர்.
இந்த ஆய்வு கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் பாக்டீரியாக்கள் விண்வெளி வீரர்களின் உபயோகத்துக்கு பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Wednesday, August 25, 2010
today special தினம் ஒரு இலவச மென்பொருள்
ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் என்பது மென்பொருள் எழுதுபவர்கள் அல்லது பெரிய நிறுவனங்கள் மட்டும் பயன்படுத்தும் ஒரு கருவி ஆக இருந்தது. ஆனால், இப்போது எல்லோரும் பயன்படுத்தக் கூடிய ஒரு கருவியாக மாறிவிட்டது.
அதாவது, வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரவர்களுக்குத் தேவையான அளவில் பயன்படுத்துகிறார்கள்.
குறிப்பு எழுத, அலுவலகத்தில் விட்டுப் போன வேலைகளை வீட்டில் செய்ய, கல்வி பயில, சில நேரங்களில் பாட்டுக் கேட்க, திரைப்படம் பார்க்க, புகைப்படங்களைத் திருத்தி அமைக்க, வீடியோ பைல்களை VCD மற்றும் DVDக்கு மாற்ற, முக்கியமாக இணையத்தில் உலாவ, மின்னஞ்சல் அனுப்ப என்று பல விதங்களிலும் பயன்படுத்துகிறார்கள்.
வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சி இருப்பது போல், வீட்டிற்கு ஒரு கம்ப்யூட்டர் இருக்கப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை; அதுவும் இணைய வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர்.
கம்ப்யூட்டரின் பயன்பாடுகள் மற்றும் தேவைகள் அதிகமாக, அவற்றைப் பூர்த்தி செய்யக் கூடிய மென்பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. என்வே, அத்தகைய மென்பொருட்களைப் பற்றிய தகவல்களும், அவற்றை எவ்வாறு எதற்குப் பயன்படுத்த்லாம், எங்கு கிடைக்கும் என்பதைப் பற்றிய அறிவும் அவசியமாகிறது.
வணிக ரீதியிலான மென்பொருட்களோடு, open source மற்றும் freeware எனப்படும் வகையிலான இலவச மென்பொருள்களும் அதிக அளவில் கிடைக்கின்றன. அப்படி வணிக ரீதியிலான மென்பொருள்களைத் தயார் செய்யும் நிறுவனங்கள் கூட சிலசமயம் தங்கள் மென்பொருட்களை இலவசமாகத் தருகிறார்கள் - விளம்பர நோக்கில்.
அப்படிப்பட்ட இலவச மென்பொருட்களைத் தருகிற இணையதளம் தான் http://www.giveawayoftheday.com.
இந்த இணையதளத்தில் இருந்து நீங்கள் தினமும் ஒரு மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், அப்படி அந்த மென்பொருளை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொண்ட உடன் அல்லது அன்றைய தினத்திற்குள் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி விட வேண்டும். 24 மணி நேரம் கழித்து உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவினால், அந்த மென்பொருள் முழுமையாக வேலை செய்யாது அல்லது சில நேரம் அதை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவ முடியாமலே போகலாம்.
அவ்வாறு, பதிவிறக்கம் செய்தவுடன், கீழே உள்ள 4 வழி முறைகளில் எதாவது ஒன்றின் மூலம் நீங்கள் அந்த மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவலாம்.
1. முதலில் activation.exe பைலை இயக்குதல். பிறகு setup.exe பைலை இயக்குதல்.
2. முதலில் setup.exe பைலை இயக்குதல். பிறகு activation.exe பைலை இயக்குதல்.
3. முதலில் setup.exe பைலை இயக்குதல். பிறகு அந்தந்த இணையதளத்தின் மூலம் பதிவு செய்தல்.
4. முதலில் setup.exe பைலை இயக்குதல். பிறகு கொடுக்கப்பட்டுள்ள license key-ஐ உள்ளீடு செய்து பதிவு செய்தல்.
இவ்வாறு எந்த வழிமுறையில் நிறுவ வேண்டும் என்பதை அந்த மென்பொருள் தொகுப்போடு கொடுக்கப்பட்டுள்ள readme.txt பைலை படித்து தெரிந்து கொள்ள்லாம்.
இந்த மென்பொருட்கள் மட்டுமல்லாது, நீங்கள் எத்தகைய மென்பொருளையும் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவும் முன் அதோடு கொடுக்கப்பட்டுள்ள readme.txt பைலை படித்து விட்டு செய்வது நல்லது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று
2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலவு பூமியிலிருந்து மிகத் தொலைவில் தென்படுவதனாலேயே, நிலவு சிறியதாக காட்சியளிக்கும் என 'ஸ்பேஸ்' அமைப்பின் இயக்குநர் சி.பி. தேவ்கன் தெரிவித்துள்ளார்.
ஒகஸ்ட் மாதத்தில் தோன்றும் இந்த பௌர்ணமி நிலவு, 'தானிய நிலவு' என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் மிகப் பெரிய நிலவை விட இன்று வானில் தோன்றும் நிலவு, 15 சதவீதம் சிறியதாக காட்சியளிப்பதுடன், ஒளி அடர்த்தி 30 சதவீதத்தால் குறைந்து காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிலவுக்கும் பூமிக்கும் உள்ள சராசரி தூரம் 2 லட்சத்து 39 ஆயிரம் மைல்கள் ஆகும்.
ஆனால் இன்றைய தினம் 2 லட்சத்து 52 ஆயிரம் மைல்கள் தூரத்தில் பௌர்ணமி நிலவு உள்ளதால் பார்ப்பதற்கு சிறியதாகத் தோன்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து 2011 ஒக்டோபர் 12ஆம் திகதி இதேபோன்று மிகச் சிறிய பௌர்ணமி நிலவு தோன்றும் எனவும் 'ஸ்பேஸ்' அமைப்பின் இயக்குநர் சி.பி. தேவ்கன் கூறியுள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
வேகமாக வாகனம் செலுத்தியமைக்கு 11 கோடி ரூபா அபராதம்
சுவீடனைச் சேர்ந்த சாரதி ஒருவர் தனது காரை வீதியில் அதிவேகமாக ஓட்டிச் சென்றமைக்காக சுமார் 11 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகில் வேகமாக காரோட்டியமைக்காக விதிக்கப்பட்ட அதிகூடிய தொகை இதுவாகும்.
�
37 வயதான மேற்படி சாரதி, அண்மையில் தனது மேர்சிடிஸ் பென்ஸ் ரக ஸ்போர்ட்ஸ் காரை மணித்தியாலத்துக்கு 290 கிலோமீற்றர் வேகத்தில் ஓட்டியுள்ளார். சுவீடனில் அதிகபட்சமாக மணித்தியாலத்திற்கு 125 கிலோமீற்றர் வேகத்தில்தான் வாகனம் செலுத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் சுவிட்ஸர்லாந்து சாரதி ஒருவர் வேகமாக வாகனத்தை செலுத்தியதற்காக சுமார் 3 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. வேகமாக வாகனம் செலுத்தியமைக்கு இதுவரை அதுவே உலகிலேயே அதிக்கூடிய அபராதமாக இருந்தது.
சுவீடன் பொலிஸ் பேச்சாளர் பேனியட் டுமாஸ் இது தொடர்பாக கூறுகையில், 290 கிலோமீற்றர் வேகத்தில் சென்றதற்கு எந்த நியாயத்தையும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
குறித்த சுவீடனைச் சேர்ந்த சாரதி தனக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை தவணை அடிப்படையில் 300 நாட்களில் செலுத்தி முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, August 23, 2010
5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் உணர்வு
ஒருநாள் ஒரு பெரிய காட்டுஎருமை கூட்டத்தில் இருந்து தனது குட்டியுடன் தாய் மற்றும் தந்தை காட்டுஎருமை மேய்வதற்காக ஒரு ஆற்றின் ஓரமாக செல்கிறது. அப்பொழுது அவற்றிக்கு தெரிய வாய்ப்பு இல்லைதான் குட்டிஎருமை சிங்கங்களுக்கு இரையாகும் என்று. சற்று தொலைவில் இரையை எதிர்நோக்கி ஒரு காட்டுராஜா கூட்டம்.
அமைதியாக மேய்ந்து கொண்டிருந்த குட்டி எருமையை குறி வைத்தாகிவிட்டது. மெதுவாக குட்டியை நோக்கி நகர தாய் மற்றும் தந்தை எருமை தனது குட்டியை கேடயம் போல் பாதுகாத்து அழைத்துக்கொண்டு ஓடுகிறது. என்னதான் ஓடினாலும் சிங்ககளின் சூட்சிவலையில் இருந்து தப்பமுடியாமல் பக்கத்தில் இருந்த ஆற்றினுள் தவறிவிழ சிங்கங்கள் சூழ்ந்துகொண்ட்டு அதை இரையாக்க அதன் கழுத்தை கவ்வி கொண்டு மேல்வர முயற்சி செய்கிறது,
ஆற்றினுள் இருந்து ஒரு முதலையும் தன் பங்கிற்கு அந்த குட்டி எருமையை பிடித்து இழுக்க சிங்கங்கள் வெற்றிபெற்று கரையில் கொண்டுவந்து அதனை கடித்து குதறிக் கொண்டு இருக்கிறது.
அப்போதுதான் ஒரு அதிசயம் நிகழ்கிறது. குட்டியை பிரிந்த தாயும் தந்தை எருமையும் தனது கூட்டத்தை அழைத்துவந்து அந்த சிங்ககங்களை படுத்திய பாட்டினை இந்த காணொளியில் காணவும்.

அணு உலையில் எரிபொருள் நிரப்புவதைத் துவங்கிய ஈரான்
ஈரான் நாட்டின், தெற்குப் பகுதியில் உள்ள புஷேர் அணுமின் உற்பத்தி நிலையம் அந்த நாட்டின் முதல் அணுமின்சக்தி நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் யுரேனியம் எரிபொருளை ரஷ்ய பொறியியலாளர்கள் உதவியுடன் நிரப்பும் பணியைத் ஈரான் தொடங்கியது.
இந்த அணு மின்சக்தி நிலையத்தை ஏற்படுத்துவதில்தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பையும், தடைகளையும் செய்துவந்தன. ஏனெனில் ஈரான் அணு ஆயுத உற்பத்திக்காகத்தான் இந்த முயற்சியை மேற்கொள்கிறது என்று கருதப்பட்டது.
இந்த அணு உலையை உருவாக்கித் தந்த ரஷ்யா, அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரான் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்வதற்கு இந்த அணு மின் சக்தி ஏற்பாடு முக்கியமானது என்று கூறியுள்ளது.
80 டன்கள் யுரேனிய எரிபொருள் இந்த அணு உலையின் மையப்பகுதிக்குள் வரும் நாட்களில் கொண்டு செல்லப்படவுள்ளது.
அதன் பிறகு ஒரு மாத காலத்தில் 1,000 மெகா வாட் மின்சாரம் இதிலிருந்து உற்பத்தி செய்யப்படவுள்ளது.
எரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பிறகு எஞ்சும் எரிபொருளில் அடங்கியுள்ள புளோட்டோனியம் கொண்டு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதுதான் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கவலையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த மிஞ்சிய யுரேனிய எரிபொருளை வேறு விதங்களில் பயன்படுத்த முடியாதவாறு ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Sunday, August 22, 2010
இணையத்தில் சராசரியாக ஒருநாளை எடுத்துக்கொண்டால்
இணையத்தில் சராசரியாக ஒருநாளை எடுத்துக்கொண்டால், அந்நாளில் மட்டும் என்னென்னவெல்லாம் நடக்கின்றனவென பாருங்கள். ஒருநாள் மட்டும் அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் எண்ணிக்கை 210 பில்லியன்களாம். இது அமெரிக்க தபால்துறையானது ஒருவருடம் முழுவதும் கையாளும் தபால்களின் எண்ணிக்கை. ஃபிளிக்கரில் ஒருநாள் மட்டும் 3 மில்லியன் போட்டோக்கள் ஏற்றம் செய்யப்படுகின்றன. இது கொண்டு 375,000 பக்கங்கள் கொண்ட போட்டோ ஆல்பத்தை நிரப்பலாமாம். செல்போன்கள் தங்களுக்குள்ளே தினமும் 43,339,547 கிகாபைட்டுகள் அளவு தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன. இத்தகவல்களை சேமிக்க நாம் முனைந்தால் அதற்கு 9.2 மில்லியன் டிவிடிக்கள் தேவைப்படும். தினம் தினம் 700,000 புதிய நபர்கள் பேஸ்புக்கில் சேருகின்றார்கள். அது கயானா நாட்டின் மக்கள்தொகைக்கு சமானம். ஒருநாள் மட்டும் 900,000 பதிவுகள் வலைப்பதிவுகளில் எழுதப்படுகின்றன. இது கொண்டு 19 வருடகால நியூயார்க் டைம்ஸ் நாளிதழை நிறைக்கலாமாம். இப்படி இணையம் இவ்ளோ பெரிசாக இருக்கின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஹார்ப் என்று அமெரிக்காவில் அறியப்படும் இந்த உயர்தொழில் நுட்பம்
கேள்விப்படும் கான்ஸ்பிரசி தியரிகளில் கொஞ்சமாவது உண்மை இருக்கின்றதோ இல்லையோ ஆனால் அது கொண்டுவரும் தகவல்கள் நம்மை மயிர்கூச்செறிய செய்பனவாக உள்ளன. இப்படித்தான் ஹெய்தி பூகம்பத்தை ஒட்டி உலாவந்திருக்கும் இந்த மிகப்பெரிய கான்ஸ்பிரசி தியரியும். நிலநடுக்கங்களை மனிதன் செயற்கையாக உருவாக்க முடியுமா? அவற்றை எதிரிநாடுகளுக்கு எதிராக, அல்லது ஏதோ ஒரு லாபத்துக்காக இன்னொரு நாடு மீது ஏவிவிட முடியுமா என்றால், ஒருசாரி புள்ளிகளும்,விஞ்ஞானிகளும் இது சாத்தியமே என்கின்றார்கள்.
ஹார்ப் என்று அமெரிக்காவில் அறியப்படும் இந்த உயர்தொழில் நுட்பம் சீனா, ரஷ்யா உட்பட பிறநாடுகளிலும் உள்ளதாம். மிகப்பெரிய ஆண்டனாக்கள், டவர்களோடு கூடிய இந்த பெரிய செட்அப் மூலம் வான்வெளியில், வாயு மண்டலத்திற்கும் மேலிருக்கும் அயானோஸ்பியர் பகுதியிலுள்ள அயான்களை புகையச்செய்து வாயுவெளியில் துளைகளை உண்டாக்கி அதன் மூலம் பூமியில் நிலநடுக்கங்களை உண்டு பண்ண முடியும் என்கின்றார்கள். ஒலி அலைகள் நம் காது eardrum-ல் அதிர்வுகளாக மாற்றப்படுவதால், அதாவது மெக்கானிக்கல் ஆற்றலாக மாற்றப்படுவதால் தானே நம்மால் சத்தங்களை கேட்கமுடிகின்றது. அப்படித்தான் படித்ததாக நியாபகம். பாட்டுக்களை உச்ச சத்தத்தில் காரில் ஓட விடும் போது காரே அதிர்வதை உணர்ந்திருக்கின்றேன். இது போல சில நம் புலங்களுக்கெட்டா மாய அலைகளை உருவாக்கி அதன் மூலம் எதிரிநாடுகளில் பூமிஅதிர்ச்சியை வரவைப்பதிலிருந்து, காலநிலைகளை தம் கட்டுக்குள் கொண்டுவருவது, அல்லது அதால கோர தட்பவெப்பநிலைகளை, ஹரிகேன், புயல், வெள்ளம் போன்றவற்றை எதிரி நாட்டில் உருவாக்குவது போன்ற செயல்களையும் செய்ய முடியுமாம். பொதுவாக பார்க்க அது ஒரு இயற்கையின் சீற்றம் போல இருந்தாலும் அது உண்மையில் மனிதனின் கட்டுபாட்டால் இயக்க வைத்ததாக இருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக இந்த சர்ச்சைகள் கூறுகின்றன. அது மட்டுமல்லாமல் இந்த உருவாக்கப்பட்ட அரோரா ELFகாந்த அலைகளால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருக்கும் மக்களின் மனநிலையைக் கூட தங்கள் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்கின்றார்கள். என்னவென்று சொல்வது, போகின்ற போக்கை. ஏற்கனவே ஜார்ஜியாவில் நடந்த பூமிஅதிர்ச்சிக்கு ரஷ்யாதான் காரணமென அதன் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தார்கள். இனி நடக்க இருக்கும் இயற்கையின் பேரழிவுகளுக்கு ஒரேயடியாக கடவுளையோ, பூமிமாதாவையோ குறை சொல்லமுடியாது போலிருக்கின்றது. இந்த பாழாப்போன மனிதன் தான் பின்னால் இருப்பான் போலிருக்கின்றது. இது குறித்ததான ஒரு முழு நீள விவரணப்படம் யூடியூபில். ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும்.

Wifi தொழிநுட்பம்
ஹார்டுவேர் இன்னோவேசனின் உச்சமாக யாரோ Wifi அலைகளிலிருந்தும் மின்சாரம் தயாரிப்பதை கண்டுபிடித்திருக்கின்றார்களாம். வீட்டில் சும்மா கிடக்கும் பிளாக்பெர்ரி உங்கள் வீட்டு Wifi அலைகளிலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி எடுத்து, அது கொண்டு தன் பேட்டரியை தானே சார்ஜ்செய்ய முடியுமாம். Airnergy WiFi Harvesting Chargerஎன்கின்றார்கள். இந்த எக்ஸ்ட்ரீம் டெக்னாலஜி எந்த அளவுக்கு சாத்தியமென தெரியவில்லை. அப்படி பார்க்கபோனால், இவ்வளவு கொடுரமான மின்அலைகளின் மத்தியில் தான் நாம் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோமா? நவீன கால மன அழுத்தங்களுக்கெல்லாம் இந்த தொலைப்பேசி மற்றும் வைஃபை அலைகள் தான் காரணமா? இந்த அலைகள் நம் மூளையில் ஓடிக்கொண்டிருக்கும் மெல்லிய உயிரியல் மின்னோட்டங்களையும் கிளறிவிடுமே. இப்போது புரிகின்றது மொத்தமாய் கரண்ட் போனவுடம் நமக்கு கிடைக்கும் அந்த ஆன்ம நிசப்ததின் இரகசியம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
இறக்கைகள் இல்லாத மின்விசிறி
இப்படி எல்லா துறைகளிலும் ஒன்றைவிட்டால் இன்னொன்று என படி ஏறிக்கொண்டே தான் இருக்கின்றோம். Reinventing the wheel என்ற சொற்றொடர் நம்மிடையே பிரபலம். Nobody wants to reinvent the wheel. ஆனால் ஒருவர் மின்விசிறியை reinvent செய்திருக்கின்றார். இறக்கைகள் இல்லாத விசிறிக்களும் உண்டோ? யெஸ் இவர் இறக்கைகள் இல்லாத மின்விசிறியை கண்டு பிடித்திருக்கின்றார். யூடியூப் வீடியோவில் பார்த்தேன். அட்டகாசமாக இருந்தது. பலமுறை விளக்கியும் எப்படி காற்று வருகின்றதுவென புரியவில்லை. அது தான் டெக்னிக்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஐந்து பந்துக்களை அந்தரத்தில் வீசி ஆடும் ஆட்டம்
”ஐந்து பந்துக்களை அந்தரத்தில் வீசி ஆடும் ஆட்டத்தை போன்றது தான் நம் வாழ்க்கை என வைத்துக்கொண்டால் அதில் வேலை, குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும்
உள்ளுணர்வு இவைகள்தான் அந்த ஐந்து பந்துகளும்.
இவற்றில் வேலை எனும் பந்து ரப்பராலானது. அந்த பந்தை நீங்கள் தவறியும் கீழே விட்டால் அது துள்ளி மீண்டும் உடனே உங்களிடம் வந்துவிடும் என்பதை நீங்கள் சீக்கிரத்தில் புரிந்துகொள்வீர்கள்.
ஆனால் மற்ற நான்கு பந்துகளும் - உங்கள் குடும்பம், உங்கள் உடல்நலம், உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் உள்ளுணர்வு கண்ணாடியாலானது. கீழே தவறவிட்டால்
கீறல்விழும், உடையும், சிலசமயம் சுக்குநூறாகியும் போகும். மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது. இதை புரிந்து கொண்டு நாம் அதற்கேற்ப செயல்பட வேண்டும்.”
மேலே சொல்லப்பட்ட அர்த்தமுள்ள வரிகள் சிலர் முன்னாள் கொக்கக்கோலா தலைவர் பிரையன் டைசனின் முப்பது நொடி உரையிலிருந்து எடுக்கபட்டது என்கின்றனர் இன்னும் சிலரோ அது ஜேம்ஸ் பேட்டர்சனின் ”Suzanne's Diary for Nicholas” எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது என்கின்றனர். எது என்னவோ உங்களுக்கும் எனக்கும் மிக அவசியமான வரிகள்.
வேலை நேரத்தில் முழு ஆற்றலோடு வேலையில் ஈடுபட்டு, பின் நேரத்துக்கு வீடு திரும்ப வேண்டும். குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் தேவையான அளவு நேரத்தை ஒதுக்குவதோடு நல்ல ஓய்வும் நாம் எடுக்க வேண்டும்.
மதிப்பிற்கும் மதிப்பிருக்கும், மதிப்பு மதிக்கப்படும் போது மட்டும் தானே. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Thursday, August 19, 2010
வருகிறது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9
வரும் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 9ன் சோதனைத் தொகுப்பு வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
அதிகம் பேர் இந்த தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்கு கையில், மைக்ரோசாப்ட் தரும் பிங் தேடல் சாதனத்தினையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள். அதனால், தேடல் வகை வருமானம் அதிகமாகும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. இப்போது பெரும்பாலானவர்களால் இன்னும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இது செயல்படாது. இதனால், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கும் அளவிற்கு உயராது.
இதில் தரப்படும் சில வசதிகள், தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகச் சந்தையில் உள்ள மற்ற பிரவுசர்களில் உள்ளவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சீன நாட்டின் தளம் ஒன்றில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக “Your most popular sites” என்ற வகையில் நாம் அடிக்கடி செல்லும் இணைய தளங்களுக்கான சிறிய படங்கள் காட்டப்படும் என இந்த தளம் அறிவித்துள்ளது. இது தற்போது குரோம் பிரவுசரில் உள்ள ஓர் அம்சமாகும்.
அதே போல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை டவுண்லோட் செய்திடத் தரப்பட்டுள்ள டவுண்லோடிங் விண்டோவும், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் உள்ள சிறப்பான அம்சங்களாகும்.
இவை மற்றவர்களுக்கு, மைக்ரோசாப்ட் வழங்காமல் திருட்டுத் தனமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெளியாகி யிருக்கும் தகவல்களே. சோதனைப் பதிப்பு வரும் போதுதான், இவற்றை நாம் உறுதிப்படுத்த முடியும். எனவே இந்த புதிய பிரவுசரின் சோதனைப் பதிப்பிற்காகக் காத்திருப்போம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
கூகிளின் அடுத்த வேட்டை ஒன் லைன் கேம்
எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இணையத்தில் தனது ஆக்கிரமிப்பை மேற்கொண்டுவரும் கூகிள், தற்போது தனது பார்வையை ஆன் லைன் கேம்(Online Games) பக்கம் திருப்பியுள்ளது.
கடந்த மே மாதம் இடம் பெற்ற I/O மகாநாட்டில் வாக்குறுதியளித்ததிற்கு அமைய இந்த ஒக்டோபரில் (1up அறிக்கை) தனது Chrome web store இனை உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த சந்தையானது குறிப்பாக ஆன்லைன் கேமினை குறிவைத்து தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆன் லைன் கேமினை (Online Games) முக்கியப்படுத்துவதற்கான காரணங்களாக கூகிள் நிறுவனம் குறிப்பிடுவதாவது,
01. சிறந்த ஆன் லைன் கேமினை(Online Games) இணையத்தில் தேடிப் பிடிப்பது கடினமாக உள்ளமை.
02. இந்த Games களின் பிரபல்யத்தன்மையினை அறிந்து கொள்ள எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருப்பது.
03. இந்த Games தொடர்பான கருத்துக்களை அறிய ஒரு சிறந்த ஒரு இடம் இல்லமை.
04. Game வடிவமைப்பாளர்கள், அவர்களின் கேம்களை வைத்து பணம் பண்ணுவதற்கு ஒரு சிறந்த வழி இல்லமை.

இது போன்ற பலகாரணங்களை கூறுகின்றது. எது எவ்வாறு இருந்தாலும் ஆன்லை கேம் துறையில் இது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Subscribe to:
Posts (Atom)