Thursday, May 10, 2012

அதிநவீன வசதிகளுடன் அறிமுகமாகியது செம்சுங் கெலக்ஸி SIII !



செம்சுங் கெலக்ஸி SIII உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய கெலக்ஸி SIII யானது பல புதிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது.இதன் முன்னைய வெளியீடான கெலக்ஸி SII மற்றும் செம்சுங் கெலக்ஸி நோட் ஆகியனவும் சந்தையில் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்றதுடன் விற்பனையிலும் சாதனை படைத்தது.


' ஸ்மார்ட் போன்' என்றாலே செம்சுங் என்ற அளவிற்கு இது பிரபலம் பெற்றது. மேலும் இதுவே செம்சுங்கினை கையடக்கத்தொலைபேசிச் சந்தையில் மிகப்பெரும் ஜாம்பவானாக ஆக்கியது.சந்தையில் உச்சத்தில் இருக்கும் செம்சுங் தனது நிலையைத் தக்கவைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பில் தற்போது செம்சுங் கெலக்ஸி SIII இனை வெளியிட்டுள்ளது.


கூகுளின் அண்ட்ரோய்ட் 4.0 ஐஸ் கிரீம் சென்விச் இயங்குதளத்தின் மூலமே இது இயங்குகின்றது.செம்சுங் கெலக்ஸி SIII தொடர்பான ஒரு பார்வை இதோ: செம்சுங் கெலக்ஸி SIII ஆனது தோற்றத்தில் கெலக்ஸி SII வினை விட சற்று பெரியது மட்டுமன்றி வேற்பட்டது. 


Dimensions 
Samsung Galaxy SIII 136.6 x 70.6 x 8.6 mm Samsung Galaxy SII 125.3 x 66.1 x 8.5 mmவெள்ளை மற்றும் நீல நிறங்களில் இது வெளியாகியுள்ளது.'ஹைப்பர்கிளேஸ்' எனப்படும் நவீன உற்பத்திச் செயன்முறையின் மூலம் உருவாக்கப்பட்ட பளபளப்பான பிளாஸ்டிக் மூலம் கெலக்ஸி SIII உருவாக்கப்பட்டுள்ளது. 


திரை( screen) 
செம்சுங் கெலக்ஸி SIII ஆனது சுப்பர் எமோலெட் (Super AMOLED capacitive touchscreen, 16M colors) தொடுதிரையைக் கொண்டுள்ளது. இத்திரையானது 4.8 அங்குலமானது. இதன் ரெசலுயுசன் 1280x720 என்பதுடன் படவணு அடர்த்தி 306 (ppi pixel density) ஆகும். திரையின் பாதுகாப்பிற்காக Corning Gorilla Glass 2 பொருத்தப்பட்டுள்ளது. 


கெமரா (Camera) 
செம்சுங் கெலக்ஸி SIII ஆனது12மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டிருக்குமென ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.எனினும் 8 மெகாபிக்ஸல் கெமராவினையே இது கொண்டுள்ளது.இது சற்று ஏமாற்றமளிக்கும் காரணியாகக் காணப்படுகின்றது. 


இதன் கெமராவின் இதர அம்சங்கள்: 
Primary: 8 MP, 3264x2448 pixels, autofocus, LED flash 
Feature: Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization 
Video: 1080p@30fps 
Secondary: 1.9 MP, 720p@30fps 


இதன் மற்றைய தொழில்நுட்ப அம்சங்கள்: 
ஆரம்பம் முதலே எதிர்பார்க்கப்பட்டதனைப் போல 'குவாட்கோர்' புரசசர் மூலமே இயங்குகின்றது. சிறந்த கிரபிக்ஸ் அனுபவத்தினையும் வேகமான செயற்பாட்டினையும் வழங்கக்கூடிய Exynos 4212 Quad Chipset, Mali-400MP GPU, Quad-core 1.4 GHz Cortex-A9 CPU ஆகியவற்றினையும் கொண்டுள்ளது. 


அப்பிளின் ஐ போன் மற்றும் சந்தையில் உள்ள சில கையடக்த்தொலைபேசிகளைப் போல இதுவும் 'மைக்ரோ சிம் கார்ட்' (MicroSIM card) க்கு மட்டுமே இயங்கும். பொதுவாக நாம் மேலே கூறிய தொழில்நுட்ப அம்சங்கள் பல ''ஸ்மார்ட் போன்' உலகிற்கு புதிதானவை அல்ல. 


குறிப்பாக சுப்பர் எமோலெட் திரையானது செம்சுங்கின் கெலக்ஸி SIII, கெலக்ஸி நோட் உட்பட பல செம்சுங் ஸ்மார்ட் போன்களில் ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல 8 மெகபிக்ஸல் கெமராவையே கெலக்ஸி SII வும் கொண்டுள்ளது. குவாட் கோர் புரசசரினைக் கொண்ட ஸ்மார்ட் போனை எச்.டி.சி. நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. HTC One X என்ற 'ஸ்மார்ட் போனே' கெலக்ஸி SIII இனைப் போல குவாட் கோர் புரசசரினைக் கொண்டுள்ளது. எனினும் நாம் மேலே கூறியவற்றினை விட பல அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை செம்சுங் கெலக்ஸி SIII கொண்டுள்ளது.இவ்வசதியானது குரல் கட்டளைக்கு ஏற்ப சில செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடியது. 


அதாவது "Hi Galaxy!" என்றவுடனேயே உங்களது போனின் குரல் 'சென்சர்' மற்றும் போனின் திரை விழிப்படைவதுடன் செயற்பாட்டிற்குத் தயாராகிவிடும். இதன் மூலம் குரல்கட்டளையை வழங்கி கெமரா மூலம் புகைப்படம் பிடிக்கவும், வொல்யுமை (volume) ஐ கூட்டிக் குறைக்கவும் முடிவதுடன்குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றை அனுப்பவும் முடியும்.இதைப்போன்ற கட்டளைக்கு ஏற்பட செயற்படும் 'சைரி' என்ற வசதி அப்பிளின் ஐ போனிலும் காணப்படுகின்றது. 


2. Motion Detection 
நீங்கள் ஒருவருக்கு குறுந்தகவல்களை அனுப்பும் வேளையில் உங்களது செம்சுங் கெலக்ஸி SIII இனை சற்று உயர்த்தினால் தானாக அந்நபருக்கு அழைப்பினை மேற்கொள்ளும் வசதியே இது. 


3. S Beam 
செம்சுங் கெலக்ஸி SIII ஆனது NFC (Near field communication ) சிப்பினை கொண்டிருப்பதனால் S Beam மூலம் இவ்வசதியைக் கொண்டிருக்கும் இன்னொரு ஸ்மார்ட் போனை ஒட்டியவாறு வைத்திருப்பதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற தகவல்களைப் பரிமாற்றிக்கொள்ள முடியும். 


NFC மற்றும் வை-பை டிரக்ட் தொழில்நுட்பங்களின் உதவியுடன் இச்செயற்பாடு நடைபெறுகின்றது. இதைவிட செம்சுங் கெலக்ஸி SIII உடன் கிடைக்கப்பெறும் All-Share Cast டொங்கலின் உதவியுடன் DLNA (Digital Living Network Alliance) வசதியைக்கொண்டுள்ள தொலைக்காட்சிகளில் செம்சுங் கெலக்ஸி SIII இன் திரையை தோன்றவைக்க முடியும். 


4. Pop Up Play 
இவ்வசதியானது திரையின் எப்பகுதியிலும் வீடியோவை பிளே செய்வதற்கான வசதியினை வழங்குகின்றது. மேலும் உங்கள் போனில் நீங்கள் வேறு எந்த வேலையைச் செய்துகொண்டிருந்தாலும் உதாரணமாக மின்னஞ்சல்களைப் படித்துக்கொண்டிருக்கும்போதோ, குறுந்தகவல்களை அனுப்பும் போதோ வீடியோவினைக் கண்டுகளிக்க முடியும். 


5. Burst Shot 
இவ்வசதியானது நீங்கள் செம்சுங் கெலக்ஸி SIII மூலம் புகைப்படமெடுக்கும் போது செக்கனுக்கு 20 வரையான புகைப்படங்களை தன்னியக்கி முறை மூலம் எடுத்துத்தரக்கூடியது. அவற்றில் சிறப்பானதை நீங்கள் தெரிவு செய்துகொள்ள முடியும் அல்லது உங்களது 'போனே' சிறப்பானதைத் தெரிவு செய்தும் தரும். 


6. Smart Stay 
இது கண்ணின் அசைவிற்கு ஏற்ப செயற்படும் தொழில்நுட்பமாகும் ( Eye Recognition Technology). நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனைப் பார்க்கும் போது அதன் திரை தானாக ஒளிரும். நீங்கள் திரையைப் பார்க்காத போது அது செயற்படு நிலையிலிருந்து மாறிவிடும். சக்தியை சேமிக்கும் முகமாகவே இவ்வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது. 


இவையே குறிப்பிடத்தக்க வசதிகளாக உள்ளன. இவற்றைத்தவிர HD புரண்ட் கெமரா, புகைப்படங்களில் காணப்படும் நபர்களின் முகங்களை அதிநுட்பமான முகத்தினை இனங்கண்டு கொள்ளும் (face-recognition technology) தொழில்ச்நுட்பம் அதன் மூலம் அப்புகைப்படங்களை உடனே உரிய நபருக்கு அனுப்பக் கூடிய வசதி என செம்சுங் கெலக்ஸி SIII இன் அதி நவீன வசதிகளின் பட்டியல் நீள்கின்றது. செம்சுங் கெலக்ஸி SII பெற்றதினைப் போன்ற வரவேற்பினை கெலக்ஸி SIII பெறுகின்றதா என பொறுத்திருந்து பார்ப்போம்!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF