Friday, May 18, 2012

ஞாபக சக்தியை அதிகரிக்கும் நடைப்பயிற்சி: ஆய்வில் தகவல்!


இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.மறதி நோய்க்கு தீர்வு காண்பது குறித்து கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள பேக்ரெஸ்ட் ரோட்மென் ஆராய்ச்சி மையம், அமெரிக்காவின் மிச்சிகன், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆய்வு நடத்தின.


இந்த ஆய்வின் முடிவு குறித்து ஆய்வுக்குழு தலைவர் மார்க் பெர்மென் கூறியதாவது, இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.போக்குவரத்து நிறைந்த சாலைகள், திறந்த வெளியில் நடைப்பயிற்சி செல்வதைவிட பூங்காக்களில் நடப்பது சிறந்தது. மன உளைச்சல், மறதியால் பாதிக்கப்பட்டவர்கள் சைக்கோதெரபி சிகிச்சை, மருந்துகளுடன் பூங்கா நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல பலனை தரும் என்று தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF