Tuesday, May 15, 2012
ஒபாமா அமெரிக்காவின் முதல் கேய்(ஓரினச்சேர்க்கையாளர்)அதிபர்!
உலகின் மிக அதிக விற்பனையாகும் வாராந்த பத்திரிகைகளில் ஒன்றான 'டைம்ஸ்' இதழில்.அன்னையர் தினத்தன்று மூன்று வயதுடைய பாலகன் ஒருவன் தாய்ப் பால் குடிப்பது போன்ற படம் வெளியாகி பரபரப்பானது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னமே சமீபத்தில் (மே12) வெளியான இன்னொரு மாதாந்த பத்திரிகையான நியூஸ்வீக்கில் ஒபாமா பற்றிய சர்ச்சைக்குரிய குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இது விளம்பர உத்திக்காகவா எனத் தெரியவில்லை. ஆனால் விடயம் இதுதான். நியூஸ்வீக் மே21 பதிப்பின் அட்டைப் படத்தில் ஒபாமாவும் கீழே 'The first gay president' எனும் வாசகமும் இடப்பட்டிருப்பது தான் சர்ச்சைக்கான காரணம். அதாவது நியூஸ்வீக் பத்திரிகை தனது இந்தப் பதிப்பின் கீழ் சொல்ல வருவது என்னவென்றால்ம் ஒபாமா அமெரிக்காவின் முதல் கேய் (ஓரினச்சேர்க்கையாளர்) அதிபர் என்பதாகும்.இந்தப் படத்துடன் சம்பந்தப் பட்ட முகப்புக் கட்டுரை அன்ட்ரூ சுல்லிவான் எனும் செய்தியாளரால் எழுதப்பட்டுள்ளது. இவர் ஓரினச் சேர்க்கை பற்றியும் இதில் விருப்புடையவர்கள் மற்றும் ஒரு பாலின திருமணம் செய்து கொள்பவர்கள் பற்றியும் மிக சுதந்திரமாக அரசியல் கருத்துக்களை தனது ப்ளாக்கின் மூலம் பரப்பி வருவபர் ஆவார்.
இவர் ஒபாமா பற்றி எழுதியுள்ள சர்ச்சைக்குரிய கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது தனது கறுப்பின அடையாளத்தை அறிந்து கொண்டு எவ்வாறு வெள்ளையர்களுடனும் தனது குடும்பத்தினருடனும் ஒபாமா ஒத்துப் போகிறாரோ அவ்வாறு தான் ஓரினச் சேர்க்கையாளர்களும் தங்கள் விருப்பத்தை அறிந்து கொண்டு தனது காதலர்கள் குடும்பம் மற்றும் சமூகத்தினுடனும் ஒத்துப் போகின்றனர்.இவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ஒபாமா ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்த விடயம் தன் கண்களில் கண்ணீரை வருவித்தது என்றும் கூறியுள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF