Sunday, May 13, 2012

சிலி நாட்டு கடற்கரை பகுதிகளில் 2,300 பறவைகள் திடீர் மரணம்!


சிலி நாட்டு கடற்கரை பரப்பில் கடந்த சில நாட்களில் மாத்திரம் 2,300 பறவைகளின் இறந்த உடலங்கள்மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்டாஜெனா விலிருந்து ப்ளாயா த சண்டோ டொமின்கோ வரையிலான சிலியின் கடல் பரப்பிலேயே பறவைகள் இறந்து கிடைந்துள்ளன.இவற்றில் பெரும்பாலானவை பல்வேறு பறவை இனங்களை சார்ந்தவை என்பதுடன், அவற்றின் இறக்கைகள் முறிவடைந்தும், சிறாய்ப்புண் காயங்களுடனும் இறந்து கிடந்துள்ளன.


ஒவ்வொரு வருடமும் இக்காலப்பகுதியில் பறவைகள் இறப்பு நடைபெறுகிற போதும், இம்முறை வரலாறு காணாத அளவுக்கு இத்தொகை அதிகரித்துள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக கடல்நீரும் விரைவாக வெப்பமடைந்து வருகிறது.இதனால் குளிர்மையான சூழலை தேடி கடல் மீன்கள் ஆழமான கடல் பகுதிக்கு சென்றுவிடுவதால், இப்பறவைகளால் அவற்றை வேட்டையாடுவதற்கு முடிவதில்லை. மேலும் அம்மீன்களுக்காக போடப்பட்டிருக்கும் வலைகளில் இப்பறவைகள் மோதிவிடுகின்றன.இதனாலேயே இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF