Saturday, May 26, 2012

யேசு சிலுவையில் அறையப்படவில்லை, நபி வருகையை அவர் எதிர்வு கூறினார்: - தோலாலான நூல்!


யேசு சிலுவையில் அறையப்படவில்லை எனவும் நபி வருகையை அவர் எதிர்வு கூறினார் எனவும் 5 ஆம் நூற்றாண்டுக்குரிய புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.குறித்த புத்தகமானது மிருக தோலினால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம் மீட்கப்பட்டது. 

 மேற்படி புத்தகமானது யேசுநாதரின் சீடர்களில் ஒருவராகக் கருதப்படும் பர்னபாஸின் உண்மையான நற்செய்தி என துருக்கி நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையிலேயே இப்புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணச் செய்யுமென ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது. 

 சிரியக் (Syriac) மொழியில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.இது 5 ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டுக்குரியதெனவும் இதில் முஹம்மது நபி அவர்களின் வருகை தொடர்பிலும் எதிர்வுகூறப்பட்டுள்ளதாக அவ்வூடகம் தெரிவித்துள்ளது.எனினும் கிறிஸ்தவ உலகம் இத்தகைய நற்செய்தி நூல் இருப்பதனையே மறுத்து வருவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந் நற்செய்தியின் 41 அத்தியாயத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகம் தெரிவிக்கின்றது. 
 'God has hidden himself as Archangel Michael ran them (Adam and Eve) out of heaven, (and) when Adam turned, he noticed that at top of the gateway to heaven, it was written "La elah ela Allah, Mohamad rasool Allah,"' meaning Allah is the only God and Mohammad his prophet. 
 மேலும் யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையென அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவ்வூடகம் தெரிவித்துள்ளது.துருக்கிய அதிகாரிகள் இப்புத்தகத்தினை 2000 ஆம் ஆண்டிலேயே கைப்பற்றினர். இவ்வருடம் பெப்ரவரி மாதம் வத்திக்கான் இப்புத்தகத்தினைப் பார்வையிட அனுமதி வழங்குமாறு துருக்கியிடம் கேட்டுக்கொண்டமையை அடுத்தே இது தொடர்பில் சர்ச்சை எழுந்தது.இந்நிலையில் இச்செய்தி தொடர்பில் கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இப்புத்தகத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதோடு, இது நகைப்புக்குரிய செய்தியெனவும் தெரிவித்துள்ளன. கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியில் ஈரான் பயம் கொண்டுள்ளதாகவும்,எனவே தான் இத்தகைய போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF