Friday, May 18, 2012

பூமியை மாசடைய செய்யும் முதல் ஏழு நாடுகளில் ஆஸ்திரேலியா, டென்மார்க்!


உலக வன உயிரியல் நிதியம் (WWF) நடத்திய கணக்கெடுப்பு ஒன்றில் சுற்றுச் சூழல் மாசடைவதில் உலக நாடுகள்வகிக்கும் பங்கில் அவுஸ்திரேலியா 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கார்பன் வாயுவும், அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் வாகனப் போக்குவரத்தும் ஆகும் என WWF தெரிவித்துள்ளது.


இக்கணக்கெடுப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது :சுற்றுச் சூழல் மாசடைவதில் முக்கிய பங்கேற்கும் முதல் ஏழு உலக நாடுகளில் தரவரிசை - கட்டார், குவைத், UAE, டென்மார்க், அமெரிக்கா, பெல்ஜியம் மற்றும் அவுஸ்திரேலியா.இந்தக் கணக்கெடுப்பில் அதிர்ச்சிக்குரிய தகவலாக கருதப் படுவது என்னவென்றால் பூமி நமக்கு வழங்கக் கூடிய வளங்களை விட 50% வீதம் அதிகமாக மனிதன் பூமியிலிருந்து எடுத்துக் கொள்கிறான் என்பதாகும். மேலும் பூமியிலுள்ள அனைத்து மனிதரும் சராசரி அவுஸ்திரேலியனைப் போல் வாழ்ந்தால் இப்போது உலகில் உள்ள சனத்தொகைக்கு கட்டுப்படியாக  3.76 கோள்கள் தேவைப்படும் எனவும் இக் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF