Wednesday, May 23, 2012

60 ஆண்டுகளுக்குப் பின் எகிப்தில் அதிபர் தேர்தல் : 13 வேட்பாளர்கள் போட்டி!


எகிப்தில் சர்வாதிகார ஆட்சி முடிவுற்ற நிலையில் இன்று அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள்தொடங்கின. 32 ஆண்டுகாலமாக ஹொஸ்னி முபாரக் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சிக்கு மக்களின் புரட்சியால் கடந்த பிப்ரவரி மாதம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.இதனையடுத்து அங்கு இராணுவத்தின் சார்பில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருந்ததுடன், புதிய அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இத் தேர்தலில் முன்னாள் பிரதமரும் விமானப்படை முன்னாள் கமாண்டருமான அகமது ஷபீப், முன்னாள் மந்திரி அமர் மூசா, முஸ்லிம் சகோதரத்துவ சுதந்திர நீதி கட்சியை சேர்ந்த மொகமது முர்சி, உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். நாளை வரை நடைபெறவுள்ள தேர்தலில் நாடு முழுவது உள்ள 13 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்தனர்.60 ஆண்டுகளுக்கு முன்புதான் எகிப்தில் ஜனநாயக வழியில் தேர்தல் நடைபெற்றிருந்ததுடன், ராணுவப் புரட்சியின் மூலம் முபாரக் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடதக்கது. சர்வதேச அமைப்புகளும் நாடுகளும் எகிப்தில் நடைபெற்றுவரும் அதிபர் தேர்தலுக்கான வாக்குபதிவை உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF