Monday, May 14, 2012
தாகம் ஏற்பட்ட உடன் குளிர்ந்த நீரை ஏன் அருந்துகிறோம்?
அதிகளவு தாகம் ஏற்பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை அருந்துகிறோம். இதற்கு என்ன காரணம் என்று அறிவியல் ரீதியாக ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.மூளையின் அடிப்பகுதியில் நரம்பு உயிரணுக்களால் ஆன வேட்கை மையம் எனும் ஒரு தொகுதி உள்ளது.
இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து போகும் போது, அந்த வேட்கை மையத்தால் அது உணரப்பட்டு நமக்கு தண்ணீர் தாகம் உண்டாகிறது.தொண்டை உட்பகுதியின் மென்தோல் வறண்டு போகும் போதும் வேட்கை மையத்தில் தண்ணீரின் வறட்சி உணரப் பெற்று அங்குள்ள நரம்புகளால் அவ்வறட்சி மூளைக்கும் உணர்த்தப் பெறுகிறது.வறட்சியால் கிளர்ச்சியுற்ற மேற்கூறிய நரம்புகள் குளிர்ந்த நீரை அல்லது பானங்களைப் பருகும் போது தடிமனாகி வறட்சி தணிந்து விடுகிறது.இவ்வறட்சித் தணிப்பு சூடான பானங்களை அருந்தும் போது நடைபெறுவதைவிட குளிர்ந்த பானங்களை உட்கொள்ளும் போது விரைந்தும், மிகுதியாகவும் நடைபெறுவதே இதற்கு காரணமாகும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF