Sunday, May 27, 2012
சீனாவில் காணப்படும் இராட்சத சலமண்டர்கள்!
பல்லியின் தோற்றத்தைக் கொண்ட சலமண்டர்கள் எனப்படுவது பொதுவாக நீர் நிலைகளில் வாழும் ஊர்வன இனத்தைச் சார்ந்த விலங்கு ஆகும்.சிறிய இனத்தைச் சேர்ந்த சலமண்டர்கள் வாலின் நீளம் உள்ளடங்கலாக 2.7 சென்டிமீட்டர்கள் வரை வளரக்கூடியன. ஆனால் சீனாவில் காணப்படும் சலமண்டர்கள் சுமார் 1.8 மீட்டர்கள் நீளமானதாக வளரக்கூடியவை.அதாவது இவை ஒரு நாயின் தோற்றத்தை விடவும் அளவில் பெரியவையாகும். இவற்றின் நிறையானது 65 கிலோகிராம்களாக காணப்படுகின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
அர்ஜெண்டினாவில் டைனசோரின் தலை, முதுகெலும்பு கண்டுபிடிப்பு!
தென் அமெரிக்கா நாடான அர்ஜெண்டினாவில் அழிந்து போன ராட்சத மிருகமான டைனசோரின் தலை, முதுகெலும்பு பாகங்களை அந்நாட்டு புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.சுபுட் நகரில் எடிஜியோ பெருஜிலோவில் உள்ள புதை பொருள் அருங்காட்சியகத்தை சேர்ந்த டைஜியோ பால் தலைமையிலான 25 பேர் கொண்ட குழுவினர் தலைநகர் பியூனஸ் ஏர்சில் இருந்து 1800 கி.மீட்டர் தூரத்தில் சுபுட் மாகாணத்தில் உள்ள கான்டர் மலை பகுதியில் ஆராய்ச்சி செய்தனர்.அப்போது டைனசோரின் மூளைப் பகுதியை மூடியிருக்கும் தலை எலும்பு, முதுகெலும்பு பாகங்கள் புதைந்து கிடந்தன.
இது அபெலிசரஸ் குடும்பத்தை சேர்ந்த டைனசோர் என்பது தெரிய வந்துள்ளது. இது மாமிசம் சாப்பிடும் வகையை சேர்ந்தது.இவை 70 லட்சம் முதல் 1 கோடி ஆண்டுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போது இவற்றின் சில பாகங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விரைவில் முழு உடல் பாகங்களின் புதை படிவங்கள் கிடைக்கும் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
சூரிய ஒளி சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து ஜேர்மன் உலக சாதனை!
சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜேர்மன் உலக சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு சமம் ஆகும்.ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின் ஜேர்மன் தனது அணு மின் திட்டத்தை கைவிட்டு, வேறொரு எரிசக்திக்கு மாறி உள்ளது.இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜேர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த துங்கியுள்ளது.இந்தாண்டு ஜேர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது.
இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என கணக்கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்)இதன் மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் பூர்த்தி செய்து ஜேர்மன் சாதனை படைத்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
நெயில் பாலிஷ் பூசிய நகங்களுடன் வந்ததால் பெண்ணுடன் சவுதி பொலிஸ் மோதல்!
சவுதி அரேபியாவில் நெயில் பாலிஷ்(Nail Polish) பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மத மாண்புகளை காக்க நியமிக்கப்பட்ட பொலிசார் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சவுதியில் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். இதில் பெண்களுக்குத்தான் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிமுறைகள். வாகனம் ஓட்டக் கூட அங்குள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது.இந்த நிலையில் கை விரல்களில் நெயில் பாலிஷ் பூச்சுடன் வந்த பெண்ணை தடுத்து நிறுத்தி மத மாண்புகளைக் காக்கும் பொலிஸார் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சியை அந்தப் பெண் யூடியூபில் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
அந்தப் பெண்ணின் பெயர் விவரம் தெரியவில்லை. அவர் ஒரு ஷாப்பிங் மாலுக்கு வருகிறார். அவரை மாலின் நடுப்பகுதியில் வைத்து பொலிஸார் தடுக்கின்றனர். கையில் நெயில் பாலிஷ் போட்டுள்ளதன் மூலம் மத மாண்புகளுக்குப் புறம்பாக நடந்துள்ளீர்கள். எனவே உள்ளே வரக் கூடாது என்று உத்தரவிடுகின்றனர்.இதைக் கேட்டு கோபமடைந்த அப்பெண், என் கையில் என்ன இருக்கிறது என்பதை பார்க்க வேண்டிய வேலை உங்களுக்கு இல்லை. அது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது. என்னைப் பின் தொடர்ந்து வர நீங்கள் யார் என்று ஆவேசமாக கூறுகிறார்.ஆனால் அவரை உள்ளே விட அனுமதிக்க முடியாது என்று பொலிஸார் கோபத்துடன் கூறுகின்றனர். அவர்களுக்கு அதே கோபத்துடன் பதிலடி கொடுத்து வாக்குவாதம் புரிகிறார் அப்பெண்.மாலின் நடு ஹாலில் நின்றபடி நடந்த இந்த வாக்குவாதம் சவுதியில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனராம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
அந்தப் பெண்ணின் பெயர் விவரம் தெரியவில்லை. அவர் ஒரு ஷாப்பிங் மாலுக்கு வருகிறார். அவரை மாலின் நடுப்பகுதியில் வைத்து பொலிஸார் தடுக்கின்றனர். கையில் நெயில் பாலிஷ் போட்டுள்ளதன் மூலம் மத மாண்புகளுக்குப் புறம்பாக நடந்துள்ளீர்கள். எனவே உள்ளே வரக் கூடாது என்று உத்தரவிடுகின்றனர்.இதைக் கேட்டு கோபமடைந்த அப்பெண், என் கையில் என்ன இருக்கிறது என்பதை பார்க்க வேண்டிய வேலை உங்களுக்கு இல்லை. அது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது. என்னைப் பின் தொடர்ந்து வர நீங்கள் யார் என்று ஆவேசமாக கூறுகிறார்.ஆனால் அவரை உள்ளே விட அனுமதிக்க முடியாது என்று பொலிஸார் கோபத்துடன் கூறுகின்றனர். அவர்களுக்கு அதே கோபத்துடன் பதிலடி கொடுத்து வாக்குவாதம் புரிகிறார் அப்பெண்.மாலின் நடு ஹாலில் நின்றபடி நடந்த இந்த வாக்குவாதம் சவுதியில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனராம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Saturday, May 26, 2012
யேசு சிலுவையில் அறையப்படவில்லை, நபி வருகையை அவர் எதிர்வு கூறினார்: - தோலாலான நூல்!
யேசு சிலுவையில் அறையப்படவில்லை எனவும் நபி வருகையை அவர் எதிர்வு கூறினார் எனவும் 5 ஆம் நூற்றாண்டுக்குரிய புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.குறித்த புத்தகமானது மிருக தோலினால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம் மீட்கப்பட்டது.
மேற்படி புத்தகமானது யேசுநாதரின் சீடர்களில் ஒருவராகக் கருதப்படும் பர்னபாஸின் உண்மையான நற்செய்தி என துருக்கி நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையிலேயே இப்புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணச் செய்யுமென ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
சிரியக் (Syriac) மொழியில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.இது 5 ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டுக்குரியதெனவும் இதில் முஹம்மது நபி அவர்களின் வருகை தொடர்பிலும் எதிர்வுகூறப்பட்டுள்ளதாக அவ்வூடகம் தெரிவித்துள்ளது.எனினும் கிறிஸ்தவ உலகம் இத்தகைய நற்செய்தி நூல் இருப்பதனையே மறுத்து வருவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நற்செய்தியின் 41 அத்தியாயத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகம் தெரிவிக்கின்றது.
'God has hidden himself as Archangel Michael ran them (Adam and Eve) out of heaven, (and) when Adam turned, he noticed that at top of the gateway to heaven, it was written "La elah ela Allah, Mohamad rasool Allah,"' meaning Allah is the only God and Mohammad his prophet.
மேலும் யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையென அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவ்வூடகம் தெரிவித்துள்ளது.துருக்கிய அதிகாரிகள் இப்புத்தகத்தினை 2000 ஆம் ஆண்டிலேயே கைப்பற்றினர். இவ்வருடம் பெப்ரவரி மாதம் வத்திக்கான் இப்புத்தகத்தினைப் பார்வையிட அனுமதி வழங்குமாறு துருக்கியிடம் கேட்டுக்கொண்டமையை அடுத்தே இது தொடர்பில் சர்ச்சை எழுந்தது.இந்நிலையில் இச்செய்தி தொடர்பில் கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இப்புத்தகத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதோடு, இது நகைப்புக்குரிய செய்தியெனவும் தெரிவித்துள்ளன. கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியில் ஈரான் பயம் கொண்டுள்ளதாகவும்,எனவே தான் இத்தகைய போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
நாம் முன்னர் கண்டிராத எமது பூமியின் படங்கள்!
உலகில் எவரும் இதற்கு முன் கண்டிராத வகையில் எமது பூமியை ரஷ்ய நாட்டு செய்மதியொன்று மிக அழகாகப் படம்பிடித்துள்ளது.இரவு, பகல் மாற்றம், சூரிய ஒளி ,சமுத்திரங்களின் மீதுபட்டுத்தெறிக்கும் காட்சியென்பன இதில் பதிவாகியுள்ளன.ரஷ்யா கடைசியாக அனுப்பிய இலக்ட்ரோ எல் என்ற வானிலை, காலநிலை செய்மதியினாலேயே இக்காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது 121 மில்லியன் மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டுள்ளது. பூமிக்கு சுமார் 40,000 கிலோமீற்றர் தொலைவில் இச் செய்மதி பயணித்து வருகின்றது.
இது 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை பூமியைப் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கின்றது. காலநிலை மாற்றங்கள் தொடர்பில் அவதானிக்கும் இச்செய்மதி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் பூமியின் புகைப்படங்களைப் எடுக்கிறது. தற்போது இணையத்தில் வெளியாகிய இக்காணொளி பெரும் வரவேற்பினைப்பெற்றுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சூரியனின் அரிய புகைப்படங்களை வெளியிட்டது நாசா!
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளி நிலையம் அண்மையில் எடுக்கப்பட்ட சூரியனின் புதிய அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.600,000 கெல்வின் வெப்பநிலையில் கொதித்துக் கொண்டிருக்கும் சூரியன் வித்தியாசமான வர்ணங்களின் கலவையாகத் தோற்றமளிப்பதுடன் பார்ப்பதற்கு மிக அழகாகவும் காணப்படுகின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Wednesday, May 23, 2012
மவுஸ், கீபோட் வேண்டாம் கைவிரல்களே போதும் வருகின்றது புதிய Leep தொழில்நுட்பம்!
Leep எனும் புதிய தொழில்நுட்பம் கணினி பயன்பாட்டில் கீபோட் மற்றும் மவுஸை இல்லாமல் செய்துவிடும் என கருதப்படுகின்றது.மேலும் மவுஸ் மற்றும் கீபோட் கொண்டு கணனியை இயக்குவதை விட விரல்கள் மூலம் துல்லியமாக இயக்க முடியுமாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஒசாமாவை காட்டிக்கொடுத்த டாக்டருக்கு 33 வருட சிறைத்தண்டனை!
அல் கைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனை காட்டிக்கொடுத்ததாக நம்பப்படும் டாக்டர் ஷகீல் அஃப்ரிடிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதல் சூத்திரதாரியான ஒசாமா பின்லேடன், அமெரிக்க அதிரடிப்படையினால் (CIA) இனால் கடந்த வருடம் மே 02ம் திகதி பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் மறைந்திருக்கும் போது அவருக்கு வைத்தியம் பார்த்த டாக்டரான ஷகீல் அப்ரிடி என்பவர் அமெரிக்க உளவுத்துறையான CIA இற்கு அளித்த தகவலின் பிரகாரமே ஒசாமா பின்லேடன் கண்டு பிடிக்கப் பட்டதாக உத்தியோக பூர்வமான செய்திகள் வெளிவந்திருந்தன. மேலும் இறந்தவர் பின்லேடன் தானா என்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த டாக்டரே CIA இற்கு பின்லேடனின் DNA மாதிரியை கொடுத்து உதவினார் என அமெரிக்க பாதுகாப்பு பிரிவின் செயலாளர் லியோன் பனேட்டா ஜனவரியில் கூறியிருந்தார்.பின்லேடனைக் காட்டிக் கொடுத்த டாக்டர் ஷகீல் அப்ரிடி தற்போது பாகிஸ்தான் சிறையில் வாடுகின்றார். இவர் மீது போலி தடுப்பூசி நிகழ்ச்சி நடத்தியமைக்காக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதி இவருக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்ததாக பாகிஸ்தான் அரச அதிகார்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
60 ஆண்டுகளுக்குப் பின் எகிப்தில் அதிபர் தேர்தல் : 13 வேட்பாளர்கள் போட்டி!
எகிப்தில் சர்வாதிகார ஆட்சி முடிவுற்ற நிலையில் இன்று அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள்தொடங்கின. 32 ஆண்டுகாலமாக ஹொஸ்னி முபாரக் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சிக்கு மக்களின் புரட்சியால் கடந்த பிப்ரவரி மாதம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.இதனையடுத்து அங்கு இராணுவத்தின் சார்பில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருந்ததுடன், புதிய அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இத் தேர்தலில் முன்னாள் பிரதமரும் விமானப்படை முன்னாள் கமாண்டருமான அகமது ஷபீப், முன்னாள் மந்திரி அமர் மூசா, முஸ்லிம் சகோதரத்துவ சுதந்திர நீதி கட்சியை சேர்ந்த மொகமது முர்சி, உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். நாளை வரை நடைபெறவுள்ள தேர்தலில் நாடு முழுவது உள்ள 13 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்தனர்.60 ஆண்டுகளுக்கு முன்புதான் எகிப்தில் ஜனநாயக வழியில் தேர்தல் நடைபெற்றிருந்ததுடன், ராணுவப் புரட்சியின் மூலம் முபாரக் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடதக்கது. சர்வதேச அமைப்புகளும் நாடுகளும் எகிப்தில் நடைபெற்றுவரும் அதிபர் தேர்தலுக்கான வாக்குபதிவை உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
வலியை தடுப்பதற்கான வழிமுறைகள்!
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற விஷயம் வலி. குறிப்பாக பெண்களும் வயதானவர்களும் பல்வேறு வலிகளால் அவதிப்படுகிறார்கள்.எங்கேயாவது அடிபட்டுக் கொள்வது, திசுக்கள் தேய்வது, நீரிழிவு, தைராய்டு மாதிரி ஏதேனும் நோய் தாக்குவது, சூழ்நிலை போன்றவை தான் வலிக்கான காரணங்கள்.வலி என்பது நாள்பட்ட வலியாக மாறினால், வாழ்க்கை முழுவதும் அதன் அவதியை அனுபவிக்க வேண்டி வரும். உலகம் முழுக்க ஒன்றரை கோடி மக்கள் தீராத வலியால் அவதிப்படுகிறார்கள்.அவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு நடைமுறை வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. 75 சதவிகிதத்தினருக்கு மன உளைச்சலும் கவனக்குறைவும் சேர்ந்து கொள்கிறது. 85 சதவிகிதம் பேர் தூக்கமின்றித் தவிக்கிறார்கள்.
இத்தகைய வலியை எப்படித் தவிர்ப்பது?
சாதாரண வலியாக இருக்கும் போதே அதை சரியாகக் கவனிக்காமல், சிகிச்சையளிக்காமல் விட்டால், அது நிரந்தர வலியாக உடம்பிலேயே தங்குவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம்.சாதாரண வலியை உடனடியாகக் கவனிக்காததே, அது நாள்பட்ட வலியாக மாறுவதற்கான பிரதான காரணம். வலி வந்ததும் 48 மணி நேரத்துக்குள் சிகிச்சையளிக்காவிட்டால், அது உடலில் தங்கும் அபாயம் உண்டு.
நாள்பட்ட வலி என்பதே ஒரு நோய் தான். இந்த வலிக்கு சாதாரண வலி நிவாரண சிகிச்சைகள் பலன் தராது. வலி நிவாரண மாத்திரைகளோ, சுய மருத்துவமோ உதவாது.மாறாக வியாதியின் தீவிரம் தான் அதிகரிக்கும். நாள்பட்ட வலிகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் தான் தீர்வு. வலிக்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கேற்ற உடற்பயிற்சி, மனப்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது முதல் கட்டம்.சதை வலி, மூட்டு வலி, முதுகு வலி, தலைவலி, நரம்பு வலி, புற்றுநோய் வலி என எல்லா வலிகளுக்கும் இன்றைய நவீன மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் உள்ளன.
அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். எந்தக் காரணத்தினால் வலி உண்டானதோ, அதைத் தவிர்க்க வேண்டும்.உதாரணத்துக்கு நடந்தால் வலிக்கிறது என்றால் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சியால் வலி என்றால் அதைத் தவிர்க்க வேண்டும்.ஒருபோதும் சுய மருத்துவம் வேண்டாம். ஓய்வெடுத்தால் வலி சரியாகி விடும் என்கிற அலட்சியமும் வேண்டாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
கெட்ட கொழுப்பினால் ஏற்படும் விளைவுகள்!
நமது உடலில் தீமை விளைவிக்கும் கொழுப்பு, நன்மை தரும் கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளது. இரண்டுமே சம அளவில் இருந்தால் மட்டுமே உடல் நிலை சமநிலைப்படும்.தீமை பயக்கும் கொழுப்பின் அளவு அதிகரித்தால் உடல் பருமன், இதய பாதிப்புகள் ஏற்படும். அது மட்டுமின்றி மூளை செயல்பாடு, நினைவாற்றலும் பாதிக்கப்படும் என்பது தற்போதைய ஆய்வில் தெரியவந்தது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ப்ரிகாம் அண்ட் உமன்ஸ் மருத்துவமனை இதுதொடர்பாக 4 ஆண்டுகால தொடர் ஆய்வு நடத்தியது. முதல்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட 40 ஆயிரம் பெண்களின் மருத்துவ குறிப்புகள் அலசி ஆராயப்பட்டன.அடுத்த கட்டமாக இதில் இருந்து 65 வயதுள்ள 6 ஆயிரம் பெண்கள் தெரிவு செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டனர். தீமை பயக்கும் கொழுப்பு சத்து உணவுகளை அதிகம் சாப்பிட்டவர்களின் மூளை செயல்பாடுகள், நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருந்தது.உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு இருந்தால் இந்த பாதிப்புகளை தவிர்க்கலாம். அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு, தேவைப்பட்டால் சிகிச்சை பெற வேண்டியதும் அவசியம். ரெட்மீட், வெண்ணெய் ஆகியவற்றில் தீமை பயக்கும் கொழுப்புசத்து அதிகம் என்பதால் இதனை தவிர்ப்பது நல்லது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
அச்சிட்ட காகிதத்தின் மையை அழிக்கும் தொழில் நுட்பம் அறிமுகம்!
காகிதத்தில் அச்சிட்ட மையை அகற்றி விட்டு, அதே காகிதத்தை மீண்டும் பயன்படுத்தவல்ல, புதிய லேசர் தொழில்நுட்பத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக விஞ்ஞானிகள் புதிய லேசர் தொழில்நுட்பத்தை கண்டறிந்து உள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம், காகிதத்தில் அச்சிட்ட மையை விரைவாக அழித்து விட்டு, அதே காகிதத்தை மீண்டும் பயன்படுத்த முடியும்.இதன் மூலம் காகித உற்பத்திக்கு தேவையான காட்டு மரங்களை அழிப்பதை பெருமளவு குறைப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை அதிகரிக்க முடியும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Friday, May 18, 2012
புதிதாக அறிமுகப்படுத்தபடவுள்ள இலத்திரனியல் நெடுஞ்சாலை!
மனிதனுக்கு பயனுள்ள வகையில் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பல்லூடகப் போக்குவரத்துத் துறையில் மற்றுமொரு பரிமாணமாக எதிர்காலத்தில் இலத்திரனியல் நெடுஞ்சாலைகள் அமையவுள்ளது.இத்தொழில்நுட்பத்தின் மூலம் குறித்த நெடுஞ்சாலையினூடு பயணிக்கும் அனைத்து வாகனங்களும் மின்சாரத்திலேயே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக வாகனங்கள் பயணிக்கும் வேகம் அதிகமாக காணப்படக்கூடியதாக இருப்பதுடன் ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனியான ஓடு பாதை காணப்படுவதனால் விபத்துக்கள் பெரிதளவில் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஞாபக சக்தியை அதிகரிக்கும் நடைப்பயிற்சி: ஆய்வில் தகவல்!
இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.மறதி நோய்க்கு தீர்வு காண்பது குறித்து கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள பேக்ரெஸ்ட் ரோட்மென் ஆராய்ச்சி மையம், அமெரிக்காவின் மிச்சிகன், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆய்வு நடத்தின.
இந்த ஆய்வின் முடிவு குறித்து ஆய்வுக்குழு தலைவர் மார்க் பெர்மென் கூறியதாவது, இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.போக்குவரத்து நிறைந்த சாலைகள், திறந்த வெளியில் நடைப்பயிற்சி செல்வதைவிட பூங்காக்களில் நடப்பது சிறந்தது. மன உளைச்சல், மறதியால் பாதிக்கப்பட்டவர்கள் சைக்கோதெரபி சிகிச்சை, மருந்துகளுடன் பூங்கா நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல பலனை தரும் என்று தெரிவித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பூமியை மாசடைய செய்யும் முதல் ஏழு நாடுகளில் ஆஸ்திரேலியா, டென்மார்க்!
உலக வன உயிரியல் நிதியம் (WWF) நடத்திய கணக்கெடுப்பு ஒன்றில் சுற்றுச் சூழல் மாசடைவதில் உலக நாடுகள்வகிக்கும் பங்கில் அவுஸ்திரேலியா 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கார்பன் வாயுவும், அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் வாகனப் போக்குவரத்தும் ஆகும் என WWF தெரிவித்துள்ளது.
இக்கணக்கெடுப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது :சுற்றுச் சூழல் மாசடைவதில் முக்கிய பங்கேற்கும் முதல் ஏழு உலக நாடுகளில் தரவரிசை - கட்டார், குவைத், UAE, டென்மார்க், அமெரிக்கா, பெல்ஜியம் மற்றும் அவுஸ்திரேலியா.இந்தக் கணக்கெடுப்பில் அதிர்ச்சிக்குரிய தகவலாக கருதப் படுவது என்னவென்றால் பூமி நமக்கு வழங்கக் கூடிய வளங்களை விட 50% வீதம் அதிகமாக மனிதன் பூமியிலிருந்து எடுத்துக் கொள்கிறான் என்பதாகும். மேலும் பூமியிலுள்ள அனைத்து மனிதரும் சராசரி அவுஸ்திரேலியனைப் போல் வாழ்ந்தால் இப்போது உலகில் உள்ள சனத்தொகைக்கு கட்டுப்படியாக 3.76 கோள்கள் தேவைப்படும் எனவும் இக் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Wednesday, May 16, 2012
ஆக்சிஜன் இன்றி விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்!
ஆக்சிஜன் இல்லாத இடத்தில் பாக்டீரியாக்கள் எத்தனை நாட்கள் உயிர்வாழும் என விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்காக இங்கிலாந்தில் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு மலையின் செங்குத்தான பாறையில் இருந்து சில பாக்டீரியாக்களை சேகரித்தனர்.
அவற்றை ஆக்சிஜன் இல்லாத விண்வெளிக்கு எடுத்து சென்றனர். அங்கு வைத்து சோதனை செய்தனர். அப்போது அந்த பாக்டீரியாக்கள், 553 நாட்கள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அல்ட்ரா லைட்கள், காஸ்மிக் கதிர்கள் ஒளிவீச்சில் விண்வெளியில் உள்ள தட்ப வெப்பநிலையில் உயிர் வாழும் தன்மை உடையது என்றும் கண்டறிந்தனர்.இந்த ஆய்வு கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் பாக்டீரியாக்கள் விண்வெளி வீரர்களின் உபயோகத்துக்கு பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
வானத்தில் இருக்கும் சந்திரன் வளர்ந்து தேய்கிறது: நாசா தகவல்!
தொடக்கத்தில் சந்திரன் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகின. இது வானில் ஒரே இடத்தில் நிலையாக இருக்கும் ஒரு கிரகம்.அதனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது அசையக் கூடியது என்று கடந்த 2010-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நாசா விண்வெளிமையத்தின் எல்.ஆர்.ஓ. காமிரா துல்லியமாக படம் பிடித்து இது ஒரு இயற்கையான செயற்கைகோள் என அடையாளம் காட்டியது.அதற்கு முன்னதாக அப்பல்லோ-15, 16 மற்றும் 17 விண்வெளி பயணங்கள் மூலம் சந்திரனில் செங்குத்தான பாறைகள் மற்றம் நிலப்பரப்பு உள்ளது தெரிய வந்தது.அவை 10 மீட்டர் உயரமும், பல கிலோ மீட்டர் நீளமும் கொண்டவையாக உள்ளன.சந்திரன் மிகவும் குளிர்ச்சியானது. அவற்றின் பாறைகள் சுருங்கி விரிவடையும் தன்மை உடையது இதுபோன்ற பல தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் சந்திரன் வளர்ந்து மீண்டும் தேயக்கூடிய தன்மை வாய்ந்தது.எனவே, இது ஒரு செயல்படக்கூடிய கிரகம் தான் என நாசா விண்வெளி மையத்தின் சந்திரன் ஆய்வு குழு தெரிவித்தது.சந்திரன் பல அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
அப்பிளின் அதிரடி வியூகம்!
சந்தையில் அதிகமாக விற்பனையாகும் அண்ட்ரோய்ட் டெப்லட்களின் ஆதிக்கத்தை முறியடிக்கும் பொருட்டு புதிய வியூகமொன்றை அப்பிள் வகுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.அதாவது குறைந்த விலையில் ஐ பேட் டெப்லட்டினை அப்பிள் தயாரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
'ஐபேட் மினி' என இது பெயரிடப்படலாம் எனவும் இதன் விலை சுமார் 250 அமெரிக்கடொலர்களாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.ஐ பேட் கொண்டுள்ள 'ரெடினா' வகை திரையே ' ஐபேட் மினி' யும் கொண்டிருக்குமெனவும் அதன் அளவு 7.8 அங்குலமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.குறைந்த விலையில் 'ஐபேட் மினி' டெப்லட்களை தயாரிப்பதனால் அப்பிள் நட்டத்தினை சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் அப்பிளிடம் தற்போது சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் காசுக் கையிருப்பு உள்ளது.எனவே அக்கையிருப்பில் ஒரு தொகை இதில் முதலிடப்படலாம் எனத்தெரிகின்றது.அப்பிள் தான் நட்டமடைந்தாலும் அதனைக்கூட பொருட்படுத்தாமல் அண்ட்ரோய்டின் ஆதிக்கத்தினை முறியடிக்கும் முயற்சியில் இறங்கவுள்ளதாகத் தெரிகின்றது.
'ஐபேட் மினி' எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஏற்கனவே இதனை அப்பிள் தயாரித்து வைத்துள்ளதாகவும்,சந்தைக்கு அறிமுகப்படுத்துவது மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் குறைந்த விலையில் சிறிய ரக ' ஐபேட்' இனைத்தயாரிக்கும் யோசனையை அப்பிள் நிறுவனத்தின் மறைந்த ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் கடுமையாக எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Tuesday, May 15, 2012
நிம்மதியாக உறங்க வேண்டுமா?
சிலர் எப்போது பார்த்தாலும் போனும், கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு சிறிது நேரம் கைபேசி இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள்.உறங்கும் போது கூட கைபேசியில் பாட்டு கேட்டுக் கொண்டோ, தலையணைக்கு அடியில் கைபேசியை வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக உறக்கம் வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு. இந்த செயல் தவறானது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.அதாவது, கைபேசியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளுக்கும் மனிதர்களின் உறக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த கதிர்வீச்சுக்கள் மனிதர்களின் உறக்கத்தை பாதிப்பதோடு, மன அழுத்தத்திற்கும் உள்ளாவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாள் முழுவதும் உழைத்து களைத்த உடல் ஓய்வெடுப்பது உறக்கத்தின் போதுதான். ஆழ்ந்த அமைதியான உறக்கம்தான் மனிதர்களை இளமையாக வைத்திருக்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நிம்மதியான உறக்கத்திற்கு அவசியமானவை என்ன என்பது குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்.மனதில் சலனமின்றி இருந்தால் பஞ்சு மெத்தைதான் வேண்டும் என்றில்லை கட்டாந்தரையே போதும் நிம்மதியான உறக்கம் வரும் என்பார்கள்.நாம் உபயோகிக்கும் படுக்கையும் நமது உறக்கத்தை தீர்மானிக்கிறது. எனவே அழகைப் பார்த்து வாங்குவதை விட அது நமது உடலுக்கு சவுகரியமானதா என்று பார்த்து வாங்க வேண்டும். அதேபோல படுக்கை வாங்கும்போது விலையைவிட அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
படுக்கையானது மேடு, பள்ளம் இல்லாத அளவுக்கு சமமாக, கெட்டியாக இருக்கவேண்டும். படுக்கை பழையதாகிவிட்டால் மேடு-பள்ளமாகி விடும். அதில் தூங்கினால் உடம்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி தோன்றும். அதனால் பழையதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும்.தலையையும், கழுத்தையும் தலையணை பாலம் போல் தாங்கவேண்டும். அப்படி தாங்கினால்தான் முதுகெலும்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறும். அப்போது தூக்கம் நன்றாக வரும்.படுக்கை அறையில் இரும்பு பொருட்கள் இடம் பெறுவது நல்லதல்ல. மரம், களிமண் போன்றவைகளில் உருவான பொருட்கள் இருப்பது நல்லது. இரும்புகட்டில்கள் தூக்கத்திற்கு ஏற்றதல்ல.
படுக்கை அறையில் பூசக் கூடிய பெயிண்டுகளும் தூக்கத்திற்கு துணைபுரியும். இளம் பச்சை, இளம் நீலம், வெள்ளை, கிரீம் ஆகிய இளநிற பெயிண்டுகளை பயன்படுத்தினால் அது தூக்கத்திற்கு ஒத்துழைக்கும்.படுக்கை அறையில் அதிக வெளிச்சம் இருக்கக்கூடாது. திடீர் வெளிச்சம்பட்டால் தூக்கம் கலையும். சாலை ஓரத்தில் வீடு இருப்பவர்கள் ஜன்னல் ஓரத்தில் திரைச்சீலைகளை கட்டி வாகன வெளிச்சத்தை தடுத்து, தூக்கத்திற்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.சீதோஷ்ண நிலைக்கும், தூக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது. லேசான குளிர்ச்சியுடன் சீதோஷ்ண நிலை இருந்தால் நல்ல தூக்கம் வரும். வீட்டில் ஏ.சி. இருந்தால் இரவில் 22 டிகிரி அளவில் வைத்திருங்கள்.
படுக்கை அறையில் தொலைக்காட்சி, கணணி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைக்கக் கூடாது. உறங்கப் போகும்போது அவற்றின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.ஆப்-செய்ய மறந்து தூங்கிவிட்டால் கணணி, மடிக்கணணி, தொலைக்காட்சி போன்றவைகளில் இருந்து வெளியேறும் காந்த அலைகள் தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.கைபேசியை தலையணை அருகில் வைத்து தூங்கக்கூடாது. 3, 4 அடி துரத்துக்கு தள்ளி வைக்கவேண்டும். அருகில் வைத்தோம் என்றால் போனில் இருந்து வரும் கதிர்கள் தூக்கத்தை பாதிக்கும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
விண்கல் ஒன்றின் மீது நாசாவின் வீரர்கள் இறங்குவர் : ஒபாமா!
சமீபத்தில் உலாவும் விஞ்ஞான ஹாட் செய்தி என்னவெனில்.ஒரு சில ஹாலிவுட் திரைப் படங்களில் காட்டியுள்ளது போல நிஜமாகவே விண்ணில் மிதக்கும் கல் ஒன்றின் மீது விண் வெளி வீரர்கள் இறங்கி ஆய்வுகள் செய்யவுள்ளனர். நாசாவின் இந்த செயற்திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். இது இன்றிலிருந்து இன்னும் சுமார் 15 வருடங்களுக்குள் சாத்தியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் விண் வெளியின் குறித்த ஒரு பாகத்தில் வீரர்கள் இறங்கி நடமாடி ஆய்வு செய்தது சந்திரனிலும் விண்ணிலுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலுமே ஆகும். பூமிக்கு வெளியே சந்திரனை விட மிக அதிக தூரத்தில் சூரியனை 80 000 Km/h வேகத்தில் சுற்றி வரும் இவ் விண்கல்லில் பத்திரமாக தரையிறங்குவதும் விண் வண்டிகளை இயக்குவதும் மிகப் பெரிய சவாலாகும். ஆயினும் சந்திரனில் தரையிறங்குவதை விட இவ் விண்கல்லுக்குச் செல்வது எரிபொருள் செலவு குறைவு.
சுமார் 4.6 பில்லியன் வயதுடைய இந்த விண்கல்லை ஆய்வு செய்வதன் மூலம் சூரியனும் கோள்களும் எவ்வாறு தோன்றின எனும் கேள்விக்கு பதிலைப் பெற முடியும் என்று கூறப்படுகின்றது. எனினும் வானியல் அறிஞர்களின் கூற்றுப் படி ஒபாமாவின் இந்த திட்டம் சந்திரனுக்கு செல்வதை விட கடினமான பயணம் என்றே கருதப் படுகின்றது.
ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்ன நடைபெறுகின்றது?
ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை விளக்குகின்றது இன்டல் நிறுவனம்வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சி.
அவற்றில் சில -
ஒரு நிமிடத்தில் 30 மணித்தியாலங்கள் ஓடக்கூடிய வீடியோக்கள் யூடியூப்பில் ஏற்றப்படுகின்றது, அதே ஒரு நிமிடத்தில் 100000 டுவிட்டுக்கள் வெளியாகின்றது. 47000 அப்ளிகேஷன்கள் தரவிறக்கம் செய்யப்படுகின்றது.230,000 டிவிடி டேட்டா ட்ரான்ஸ்பர் அளவு, உலக இணைய பயன்பாடு நடக்கின்றது.இவ்வாறு விளக்கும் வீடியோவின் இணைப்பு: பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஒபாமா அமெரிக்காவின் முதல் கேய்(ஓரினச்சேர்க்கையாளர்)அதிபர்!
உலகின் மிக அதிக விற்பனையாகும் வாராந்த பத்திரிகைகளில் ஒன்றான 'டைம்ஸ்' இதழில்.அன்னையர் தினத்தன்று மூன்று வயதுடைய பாலகன் ஒருவன் தாய்ப் பால் குடிப்பது போன்ற படம் வெளியாகி பரபரப்பானது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னமே சமீபத்தில் (மே12) வெளியான இன்னொரு மாதாந்த பத்திரிகையான நியூஸ்வீக்கில் ஒபாமா பற்றிய சர்ச்சைக்குரிய குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இது விளம்பர உத்திக்காகவா எனத் தெரியவில்லை. ஆனால் விடயம் இதுதான். நியூஸ்வீக் மே21 பதிப்பின் அட்டைப் படத்தில் ஒபாமாவும் கீழே 'The first gay president' எனும் வாசகமும் இடப்பட்டிருப்பது தான் சர்ச்சைக்கான காரணம். அதாவது நியூஸ்வீக் பத்திரிகை தனது இந்தப் பதிப்பின் கீழ் சொல்ல வருவது என்னவென்றால்ம் ஒபாமா அமெரிக்காவின் முதல் கேய் (ஓரினச்சேர்க்கையாளர்) அதிபர் என்பதாகும்.இந்தப் படத்துடன் சம்பந்தப் பட்ட முகப்புக் கட்டுரை அன்ட்ரூ சுல்லிவான் எனும் செய்தியாளரால் எழுதப்பட்டுள்ளது. இவர் ஓரினச் சேர்க்கை பற்றியும் இதில் விருப்புடையவர்கள் மற்றும் ஒரு பாலின திருமணம் செய்து கொள்பவர்கள் பற்றியும் மிக சுதந்திரமாக அரசியல் கருத்துக்களை தனது ப்ளாக்கின் மூலம் பரப்பி வருவபர் ஆவார்.
இவர் ஒபாமா பற்றி எழுதியுள்ள சர்ச்சைக்குரிய கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது தனது கறுப்பின அடையாளத்தை அறிந்து கொண்டு எவ்வாறு வெள்ளையர்களுடனும் தனது குடும்பத்தினருடனும் ஒபாமா ஒத்துப் போகிறாரோ அவ்வாறு தான் ஓரினச் சேர்க்கையாளர்களும் தங்கள் விருப்பத்தை அறிந்து கொண்டு தனது காதலர்கள் குடும்பம் மற்றும் சமூகத்தினுடனும் ஒத்துப் போகின்றனர்.இவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ஒபாமா ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்த விடயம் தன் கண்களில் கண்ணீரை வருவித்தது என்றும் கூறியுள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Monday, May 14, 2012
ஒன்றரை மணிநேரத்தில் உங்களின் உயிரைக் குடிக்கும் கொக்கா கோலா!
அனைவரும் விரும்பிப் பருகும் குளிர்பானங்களில் முதலிடத்தில் காணப்படுவதில் கொக்கா கோலாவும் ஒன்றாகும். எனவே இப்பானம் உலகளவில் பிரபல்யமாகக் காணப்படுகின்றது
ஆனால் இப்பானத்தில் காணப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் ஒரு உயிரைக் குடிக்கக் கூடிய அளவிற்கு ஆபாத்தானவை என்பதை விளக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையை காணொளிகளில் இருந்து அறியலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
தாகம் ஏற்பட்ட உடன் குளிர்ந்த நீரை ஏன் அருந்துகிறோம்?
அதிகளவு தாகம் ஏற்பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை அருந்துகிறோம். இதற்கு என்ன காரணம் என்று அறிவியல் ரீதியாக ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.மூளையின் அடிப்பகுதியில் நரம்பு உயிரணுக்களால் ஆன வேட்கை மையம் எனும் ஒரு தொகுதி உள்ளது.
இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து போகும் போது, அந்த வேட்கை மையத்தால் அது உணரப்பட்டு நமக்கு தண்ணீர் தாகம் உண்டாகிறது.தொண்டை உட்பகுதியின் மென்தோல் வறண்டு போகும் போதும் வேட்கை மையத்தில் தண்ணீரின் வறட்சி உணரப் பெற்று அங்குள்ள நரம்புகளால் அவ்வறட்சி மூளைக்கும் உணர்த்தப் பெறுகிறது.வறட்சியால் கிளர்ச்சியுற்ற மேற்கூறிய நரம்புகள் குளிர்ந்த நீரை அல்லது பானங்களைப் பருகும் போது தடிமனாகி வறட்சி தணிந்து விடுகிறது.இவ்வறட்சித் தணிப்பு சூடான பானங்களை அருந்தும் போது நடைபெறுவதைவிட குளிர்ந்த பானங்களை உட்கொள்ளும் போது விரைந்தும், மிகுதியாகவும் நடைபெறுவதே இதற்கு காரணமாகும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
கை தட்டுவதன் இரகசியம்!
கை தட்டி ரசித்து சிரிப்பதன் மூலம் எந்த நோயும் அண்டாமல் நம்மை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதய நோய் உள்பட எல்லா நோய்களுக்கும் காரணமாக இருப்பது நம் மனம் தான். அதனால் தான் எண்ணம் போல் வாழ்வு அமையும் என்று கூறியுள்ளனர்.
எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கிற நிலை வந்தால் உடம்பை எந்த நோயும் நெருங்காது என்கின்றனர் மருத்துவர்கள்.வெற்றி தான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட மகிழ்ச்சியாக இருப்பது தான் வெற்றி என்று எண்ண வேண்டும். இதற்கு நன்றாக மனது விட்டு சிரிப்பதும், கை தட்டி ரசிப்பதும் அவசியம் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள்.
கை தட்டுவதே ஒரு சிகிச்சை தான். கை தட்டும் போது அக்குபிரஷர் ட்ரீட்மென்ட் நடக்கிறது. மூளையும் பிற உறுப்புகளும் உற்சாகமா இயங்குகிறது என்கிறனர் மருத்துவர்கள்.மனிதர்களின் கைகளில் உள்ள நரம்புகள், இதயம், சிறுநீரகம், லிவர், நுரையீரல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. இரண்டு கைகளையும் இணைத்து தட்டுவதன் மூலம் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் பல வித நோய்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.நம் உடம்பில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டவை. டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமா சுரந்து அந்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்திடும். இந்த சுரப்பை கட்டுப்படுத்தும் சக்தி இயல்பாவே நம் உடலில் இருக்கிறது.
சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, கெட்ட பழக்கங்கள் இல்லாத நல்ல வாழ்க்கை முறை தேவை. மனசு மகிழ்ச்சியா இருந்தா, என்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும், ஹெச்.டி.எல்ங்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும்.99 சதவீதம் அடைப்பு இருந்தாக்கூட தானா கரைஞ்சிடும். இது கற்பனையில்லை. மருத்துவ உண்மை என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.தினசரி காலையில் 20 நிமிடங்களுக்கு கை தட்டுங்கள் உங்களுக்கு எந்த நோய் இருந்தாலும் குணமாகும் என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
மச்சத்தின் மகத்துவங்கள்!
மச்சம் உடம்பில் இருந்தால் அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள், ஆனால் மச்சம் இருந்தால் பல மகத்துவங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள்கூறுகிறார்கள்.மச்சம் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும் போது தோலில் கருப்பு நிறப் புள்ளி ஏற்படுவதே மச்சம் ஆகும்.
இத்தகைய மச்சம் சிலருக்கு நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும். மச்சம் குறித்த ஆய்வை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டது.அது மச்சம் இல்லாதவர்களை விட மச்சம் இருப்பவர்களுக்கு வலுவான எலும்புகள் இருக்கிறது என்றும், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் எலும்புகளைத் தாக்கும் அபாயம் மிகவும் குறைவு என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் மச்சக்காரர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும், மேலும் தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களுடன் பார்க்கும் போது ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் பிரிஸ்பேன், அவுஸ்திரேலியாவிலும் இதே போன்று ஆய்வு ஒன்று நடந்தது, இதிலும் அதே முடிவு தெரிய வந்துள்ளது என்று மரபியல் துறை நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
மூன்று அச்சுக்களில் இயங்கும் கமெரா Joystick!
Keio பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து iOS, Android சாதனங்களின் கமெராக்களை இயக்கக் கூடியதும், மூன்று அச்சுக்களில் செயற்படக் கூடியதுமான Joystick இனை உருவாக்கியுள்ளனர்.மேலும் இவை தொடுதிரை கொண்ட iPhone, iPad, iPod Touch, Android சாதனங்களில் மட்டுமே செயல்படக் கூடியது.இதன் மூலம் நிலைக்குத்தான, கிடையான முறைகளில் புகைப்படங்களினை அசைக்க முடிவதுடன் மூன்றாவது அச்சு மூலம் படத்தை கீழ்நோக்கி தள்ளுவதற்கும் பயன்படுகின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
மீள்தன்மை கொண்ட USB கேபிள்கள்!
கைப்பேசிகள் போன்ற இலத்திரனியற் சாதனங்களை கணணியுடன் இணைத்துப் பயன்படுத்துவதற்கு USB கேபிள்கள் பயன்படுகின்றன.இதுவரை காலமும் சாதாரண வயர்களாகக் காணப்பட்டு, இந்த USB கேபிள்கள் தற்போது மீள்தன்மை உடைய பதார்த்தங்களின் கலவையால் அமைக்கப்பட்டுள்ளன.
Une Bobine என்று அழைக்கப்படும் இக்கேபிள்கள் தற்போது அப்பிளின் iPhone, iPod Touch ஆகிய சாதனங்களிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Une Bobine என்று அழைக்கப்படும் இக்கேபிள்கள் தற்போது அப்பிளின் iPhone, iPod Touch ஆகிய சாதனங்களிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
ஜூனில் இணையத்தின் அடுத்த பரிணாமமான IPV6 அறிமுகம்!
எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி, இணையத்தின் புதிய தொழிநுட்பமான IPV6(Internet Protocol Version 6) அறிமுகம் செய்யப்படுகிறது.ஒவ்வொரு வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் எப்படி ஒரு விலாசம் இருக்குமோ, அது போன்று தான் ஒவ்வொரு இணையத்திற்கும் ஒரு விலாசம் உண்டு. இதனை IP Address என்று அழைப்பர்.இதன் மூலம் நீங்கள் டைப் செய்யும் இணைய முகவரி சரியான சர்வருக்கு அழைத்துச் செல்லப்படும்.
உதாரணத்திற்கு நீங்கள் www.facebook.com என்று உங்கள் கணணியில் டைப் செய்தால், உடனே இந்த இணைய முகவரி சரியான சர்வருக்கு அழைத்து செல்லப்படும். இதற்கு உதவுவது தான் இந்த இன்டர்நெட் புரோட்டோகால்.இதுவரையிலும் இதற்கு நாம் IPV4-ஐ தான் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இது 4-32 Bit Techonology, 430 Unique Address மட்டுமே இருக்க முடியும்.
Sample IPV4 address - 70.33.247.68.
எனவே IPV4 முடிவடையும் தருவாயில் உள்ளதால், இதனை கருத்தில் கொண்டு IETF(Internet Engineering Task Force), புதுவித அம்சங்களுடன் கூடிய IPV6-ஐ அறிமுகம் செய்ய உள்ளது.இது 128 Bit Techonology, பல லட்சக் கணக்கில் Unique Address களை பெற முடியும். மேலும் IPV4-ல் இருந்த முக்கிய பிரச்னையான NAT(Network Address Translation) இதில் இருக்காது. இதனால் பல நபர்கள் ஒரே IP Address-ஐ பயன்படுத்த முடியும்.
Sample IPV6 address - 2001:db8:ffff:1:201:02ff:fe03:0405
மேலும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால் உங்களது நெட்வொர்க் IPV6 தயாரா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
http://test-ipv6.com/
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
உதாரணத்திற்கு நீங்கள் www.facebook.com என்று உங்கள் கணணியில் டைப் செய்தால், உடனே இந்த இணைய முகவரி சரியான சர்வருக்கு அழைத்து செல்லப்படும். இதற்கு உதவுவது தான் இந்த இன்டர்நெட் புரோட்டோகால்.இதுவரையிலும் இதற்கு நாம் IPV4-ஐ தான் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இது 4-32 Bit Techonology, 430 Unique Address மட்டுமே இருக்க முடியும்.
Sample IPV4 address - 70.33.247.68.
எனவே IPV4 முடிவடையும் தருவாயில் உள்ளதால், இதனை கருத்தில் கொண்டு IETF(Internet Engineering Task Force), புதுவித அம்சங்களுடன் கூடிய IPV6-ஐ அறிமுகம் செய்ய உள்ளது.இது 128 Bit Techonology, பல லட்சக் கணக்கில் Unique Address களை பெற முடியும். மேலும் IPV4-ல் இருந்த முக்கிய பிரச்னையான NAT(Network Address Translation) இதில் இருக்காது. இதனால் பல நபர்கள் ஒரே IP Address-ஐ பயன்படுத்த முடியும்.
Sample IPV6 address - 2001:db8:ffff:1:201:02ff:fe03:0405
மேலும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால் உங்களது நெட்வொர்க் IPV6 தயாரா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
http://test-ipv6.com/
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
புற்று நோய்க்கான அறிகுறிகள்!
செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது.புகைப்பழக்கம், சில உணவு பழக்க வழக்கங்கள், சூரியனிலிருந்து வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பித்தளங்கள் போன்றவற்றிற்கு உட்படும் போது மரபணுக்களில் மாற்றம் ஏற்படுகிறது.இதனால் செல்கள் அதீத வளர்ச்சி அடைந்து புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.
புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்:
1. புகையிலை பயன்படுத்தக்கூடாது.
2. கொழுப்பான உணவை குறைத்து அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகள் உட்கொள்ளலாம்.
3. முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை:
1. புற்று நோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்.
2. புதிய மச்சம் அல்லது ஏற்கனவே உள்ளமச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
3. கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
4. தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
5. விவரிக்க முடியாத விதத்தில் உடல் எடையில் மாற்றம்.
6. பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்து வலி.
புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பது எப்படி:
அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை(ரேடியேஷன்தெரபி), வேதி மருத்துவம்(கீமோதெரபி), ஹோர்மோன் மருத்துவம் போன்றவை புற்று நோய் சிகிச்சைகளில் அடங்கும்.புற்று நோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளை பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
இதய நோய்களை தடுக்கும் சொக்லேட்!
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொக்லேட்டை விரும்பாதவர்கள் இல்லை. அந்த சொக்லேட் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
தினசரி சிறிதளவு சொக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக கடந்த சில ஆண்டுகளாக நடந்த 7 ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது.சொக்லேட்டுகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. சொக்லேட் சாப்பிடுவதன் மூலம் உயர்ரத்த அழுத்தம் குறைகிறது. இன்சுலின் சுரப்பு சரியாகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றை ஒருங்கிணைத்து 8வது ஆய்வை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர்.இதயநோய் பாதித்த, பாதிக்காத ஒரு லட்சம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் ஒரு பிரிவினருக்கு சொக்லேட் அளிக்கப்படவில்லை. மற்றொரு பிரிவுக்கு அதிகளவில் சொக்லேட் அளிக்கப்பட்டு வந்தது.
தினசரி ஒன்று என்ற அளவில் சொக்லேட் பார் சாப்பிட்டு வந்தவர்களுக்கு மற்றவர்களைவிட இதய நோய் ஆபத்து 37 சதவீதம் குறைவாக இருந்தது சோதனையில் தெரிய வந்தது. 29 சதவீதம் பக்கவாத அபாயம் நீங்கியது. எனினும், மாரடைப்பை தடுப்பதில் சொக்லேட்டுக்கு பங்கில்லை என்று தெரிந்தது.முதல்கட்ட 6 ஆய்வுகளில் சொக்லேட்டுக்கும் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் தொடர்பு இருப்பது நிரூபணமானது. பார், சொக்லேட் டிரிங்க், பிஸ்கெட், டெசர்ட் என பால் அதிகமுள்ள சொக்லேட், சாக்கோ அதிமுள்ள சொக்லேட்(டார்க் சாக்லேட்) என எதுவாக இருந்தாலும் பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை.
எனினும் சொக்லேட் சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் கடைகளில் விற்கப்படும் சொக்லேட்களில் 100 கிராமுக்கு 500 கலோரிகள் உள்ளன.அதை அதிகளவு சாப்பிடுவதால் உடல் எடை கூடவும், டயபடீஸ் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே கலோரி குறைந்த தரமான சொக்லேட்களில் இருக்கும் பொருட்களே ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி இதய நோயை தடுக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
இனிமேல் வழுக்கை தலையிலும் முடி முளைக்கும்: ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை!
வழுக்கை தலையில் முடி முளைக்க வைப்பது தொடர்பாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஸ்டெம்செல் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளது.உலகம் முழுவதும் சராசரியாக 25 சதவிகித ஆண்கள் 30 வயதுக்குள் வழுக்கை ஆகின்றனர், மற்றவர்கள் 60 வயதுக்குள் ஆகின்றனர்.
வயது மட்டுமின்றி பரம்பரை, அதிக வேலைச்சுமை, டென்ஷன், மன அழுத்தம், சுற்றுச்சூழல் என பல காரணங்கள் இருக்கின்றன.இந்நிலையில் ஸ்டெம்செல் உதவியுடன் வழுக்கை தலையில் முடி முளைக்க வைப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஜப்பானின் டோக்கியோ பல்கலைகழகத்தில் உள்ள சுஜி அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.எலிகளை வைத்து இந்த ஆராய்ச்சி நடந்தது. ஸ்டெம்செல்லில் இருந்து முடி வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக்கிள் எனப்படும் பகுதிப் பொருள் மட்டும் எடுக்கப்பட்டு, வழுக்கை எலியின் தலையில் பொருத்தப்பட்டது.இந்த ஆராய்ச்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. எலியின் தலையில் வழக்கம்போல முடி முளைப்பதாக ஆராய்ச்சி டீம் தலைவர் டகாஷி சுஜி கூறியுள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
மீள்தன்மை கொண்ட நவீன தொடுதிரைகள் அறிமுகம்!
கணணிகள், கைப்பேசிகளின் திரைகளின் தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றது.அதன் அடிப்படையில் தற்போது XSense எனும் மீள்தன்மை கொண்ட அல்லது நெகிழும் தன்மை கொண்ட தொடுதிரைகள் அறிமுகமாகியுள்ளன.இத்திரைகள் ஸ்மார்ட் கைப்பேசிகள், மடிக்கணணிகள் என்பனவற்றிற்கும் ஏனைய சாதனங்களிலும் இணைக்கப்படவுள்ளன.இத்தொழில்நுட்பமானது வாடிக்கையாளர்களை பல வழிகளிலும் கவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Sunday, May 13, 2012
எகிப்தின் கிசா பிரமிட்டுக்கள் 3D தொழிழ்நுட்பத்தில்!
புகழ்பெற்ற எகிப்திய கிசா பிரமிட்டுக்களை நம் கண்முன்னே 3Dவடிவில் காணும் வாய்ப்பு வந்துள்ளது. DassaultSystems கிசா பீரமீடுகளின் 3Dவடிவைப்பில் கணனியில் காணும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இது அனைத்து இணைய பயனர்களுக்கும் கிடைக்கும் இலவச பயன்பாடாகும்.
பண்டைய காலத்து அரும் பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்படும் எகிப்தின் கிசா பிரமிட்டுக்களை நேரில் சென்று காண எத்தனைபேருக்கு வாய்ப்புக்கிட்டும்? அதன் சிறப்புக்களை அறிவதற்கு இணையம் ஒன்றே ஒரே வழியாக உள்ளது. அவ்வகையில் உருவாக்கப்பட்ட தொழிழ்நுட்பம்தான் இவை.இதன் மூலம் கிசா பிரமிட்டுக்களின் கலை, பண்டைய கோவில்கள், கல்லறைகள் போன்ற பல இடங்களை உற்கார்ந்த இடத்திலிருந்தே கண்டுகளிக்கலாம். ஒவ்வொரு இடத்திற்கான உரைவிளக்கங்களுடன் வரைபடங்கள் போன்ற அம்சங்களும் அடங்கியுள்ளது.
வயர்லெஸ் செயற்கை இருதயம் ஜப்பான் மருத்துவர்களால் கண்டுபிடிப்பு!
ஜப்பானின் தொஹோக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு வயர்லெஸ் தொழிநுட்பம் மூலம் கட்டுப்படுத்தப் படக் கூடிய செயற்கை இருதயத்தை கண்டு பிடித்துள்ளது.இந்த வயர்லெஸ் இருதயக் கண்டுபிடிப்பை அடுத்து, ஜப்பான் விஞ்ஞானிகளால் விரைவில்எந்த வித பேட்டரியும் இல்லாமல் உண்மையான இதயம் போல் செயற்படத்தக்க பொறிமுறையுடைய செயற்கை இருதயத்தைக் கண்டு பிடிக்கக் கூடிய சாத்தியக் கூறும் ஏற்படவுள்ளது என ஜப்பானின் அரச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.வெறும் C பேட்டரியின் அளவேயுடைய இந்த செயற்கை இருதய பம்ப் உருளை வடிவான காந்தம் ஒன்றை இயக்குவதன் மூலம் மனிதனின் இயற்கையான இருதயத்துக்கு ஒப்பாக ஒரு நிமிடத்துக்கு 5 லீட்டர் வரை இரத்தத்தை பம்ப் பண்ணக் கூடியது. இந்த உபகரணத்தின் பம்ப் உடம்பின் தோலுக்கு மேலே பொருத்தப் படக்கூடிய இன்னொரு சிறிய உபகரணம் மூலம் உருவாக்கப் படும் காந்த சக்தியினால் இயக்கப் படுகின்றது.
இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட செயற்கை இருதய உபகரணங்கள் மனித உடலில் இணைப்பதற்கு அளவில் மிகப் பெரியதாகவும் தோலுக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி போன்ற உபகரணத்துடன் மெல்லிய கம்பி அல்லது வயரினால் இணைக்கப் பட வேண்டிய தேவையும் இருந்தது.தற்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் வயர்லெஸ் செயற்கை இருதயம் மருத்துவ உலகில் மிக முக்கியமான ஒரு உபகரணமாகும். மிகச்சிறிய அளவுடையதும் சாதாரண கட்டமைப்பை கொண்டிருப்பதும் வினைத் திறன் மிக்கதுமான இந்த பம்ப் சந்தையில் மிகக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடியதுமாகும் என இப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும் இந்த ஆய்வுக்குழுவின் தலைவருமான கஷூஸி இஷியாமா கூறியுள்ளார்.
சிலி நாட்டு கடற்கரை பகுதிகளில் 2,300 பறவைகள் திடீர் மரணம்!
சிலி நாட்டு கடற்கரை பரப்பில் கடந்த சில நாட்களில் மாத்திரம் 2,300 பறவைகளின் இறந்த உடலங்கள்மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்டாஜெனா விலிருந்து ப்ளாயா த சண்டோ டொமின்கோ வரையிலான சிலியின் கடல் பரப்பிலேயே பறவைகள் இறந்து கிடைந்துள்ளன.இவற்றில் பெரும்பாலானவை பல்வேறு பறவை இனங்களை சார்ந்தவை என்பதுடன், அவற்றின் இறக்கைகள் முறிவடைந்தும், சிறாய்ப்புண் காயங்களுடனும் இறந்து கிடந்துள்ளன.
ஒவ்வொரு வருடமும் இக்காலப்பகுதியில் பறவைகள் இறப்பு நடைபெறுகிற போதும், இம்முறை வரலாறு காணாத அளவுக்கு இத்தொகை அதிகரித்துள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக கடல்நீரும் விரைவாக வெப்பமடைந்து வருகிறது.இதனால் குளிர்மையான சூழலை தேடி கடல் மீன்கள் ஆழமான கடல் பகுதிக்கு சென்றுவிடுவதால், இப்பறவைகளால் அவற்றை வேட்டையாடுவதற்கு முடிவதில்லை. மேலும் அம்மீன்களுக்காக போடப்பட்டிருக்கும் வலைகளில் இப்பறவைகள் மோதிவிடுகின்றன.இதனாலேயே இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
மனித மாமிசத்தினால் தயாரிக்கப்படும் மாத்திரைகள்!
கலப்படம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வது என்பது உலகெங்கிலும் நடைபெற்று வருகிறது.இதில் அதிர்ச்சி தரும் ஒரு தகவல் சமீபத்தில் தென்கொரியா சுங்கவரி அதிகாரிகள் நடத்திய வேட்டையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான மருத்துவ மாத்திரைகளை கைப்பற்றினார்கள்.
இவை மனித மாமிசத்தில் இருந்து தயாரிக்கப்பட்டவையாகும். இறந்த குழந்தைகளின் உடல் பகுதியை கண்டதுண்டமாக வெட்டி அதை ஒருவகை மரப்பசையுடன் சேர்ந்து சூடேற்றி பின்னர் பொடியாக்கி இந்த மாத்திரைகளை தாயரிக்கிறார்கள்.இது போன்ற மாத்திரைகள் தயாரிப்பதைத் தடுக்க சீன அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரையில் கடத்த முயன்ற 17,450 மாத்திரைகளை கைப்பற்றினர்.அவ்வாறு கைப்பற்றினாலும் இவை உடல் வலிமைக்கு ஏற்றது என்றும் அனைத்துவித நோய்களுக்கும் சிறந்த நிவாரணி எனவும் கருதுவதால் இவ்வகை மருந்தை ரகசியமாக தயாரித்து கள்ள மார்கெட்டில் விடுகிறார்கள்.ஆனால் இதற்கு குழந்தைகள் உடல் எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது. யார் இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்ற விபரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Thursday, May 10, 2012
அதிநவீன வசதிகளுடன் அறிமுகமாகியது செம்சுங் கெலக்ஸி SIII !
செம்சுங் கெலக்ஸி SIII உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய கெலக்ஸி SIII யானது பல புதிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது.இதன் முன்னைய வெளியீடான கெலக்ஸி SII மற்றும் செம்சுங் கெலக்ஸி நோட் ஆகியனவும் சந்தையில் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்றதுடன் விற்பனையிலும் சாதனை படைத்தது.
' ஸ்மார்ட் போன்' என்றாலே செம்சுங் என்ற அளவிற்கு இது பிரபலம் பெற்றது. மேலும் இதுவே செம்சுங்கினை கையடக்கத்தொலைபேசிச் சந்தையில் மிகப்பெரும் ஜாம்பவானாக ஆக்கியது.சந்தையில் உச்சத்தில் இருக்கும் செம்சுங் தனது நிலையைத் தக்கவைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பில் தற்போது செம்சுங் கெலக்ஸி SIII இனை வெளியிட்டுள்ளது.
கூகுளின் அண்ட்ரோய்ட் 4.0 ஐஸ் கிரீம் சென்விச் இயங்குதளத்தின் மூலமே இது இயங்குகின்றது.செம்சுங் கெலக்ஸி SIII தொடர்பான ஒரு பார்வை இதோ: செம்சுங் கெலக்ஸி SIII ஆனது தோற்றத்தில் கெலக்ஸி SII வினை விட சற்று பெரியது மட்டுமன்றி வேற்பட்டது.
Dimensions
Samsung Galaxy SIII 136.6 x 70.6 x 8.6 mm Samsung Galaxy SII 125.3 x 66.1 x 8.5 mmவெள்ளை மற்றும் நீல நிறங்களில் இது வெளியாகியுள்ளது.'ஹைப்பர்கிளேஸ்' எனப்படும் நவீன உற்பத்திச் செயன்முறையின் மூலம் உருவாக்கப்பட்ட பளபளப்பான பிளாஸ்டிக் மூலம் கெலக்ஸி SIII உருவாக்கப்பட்டுள்ளது.
திரை( screen)
செம்சுங் கெலக்ஸி SIII ஆனது சுப்பர் எமோலெட் (Super AMOLED capacitive touchscreen, 16M colors) தொடுதிரையைக் கொண்டுள்ளது. இத்திரையானது 4.8 அங்குலமானது. இதன் ரெசலுயுசன் 1280x720 என்பதுடன் படவணு அடர்த்தி 306 (ppi pixel density) ஆகும். திரையின் பாதுகாப்பிற்காக Corning Gorilla Glass 2 பொருத்தப்பட்டுள்ளது.
கெமரா (Camera)
செம்சுங் கெலக்ஸி SIII ஆனது12மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டிருக்குமென ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.எனினும் 8 மெகாபிக்ஸல் கெமராவினையே இது கொண்டுள்ளது.இது சற்று ஏமாற்றமளிக்கும் காரணியாகக் காணப்படுகின்றது.
இதன் கெமராவின் இதர அம்சங்கள்:
Primary: 8 MP, 3264x2448 pixels, autofocus, LED flash
Feature: Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization
Video: 1080p@30fps
Secondary: 1.9 MP, 720p@30fps
இதன் மற்றைய தொழில்நுட்ப அம்சங்கள்:
ஆரம்பம் முதலே எதிர்பார்க்கப்பட்டதனைப் போல 'குவாட்கோர்' புரசசர் மூலமே இயங்குகின்றது. சிறந்த கிரபிக்ஸ் அனுபவத்தினையும் வேகமான செயற்பாட்டினையும் வழங்கக்கூடிய Exynos 4212 Quad Chipset, Mali-400MP GPU, Quad-core 1.4 GHz Cortex-A9 CPU ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
அப்பிளின் ஐ போன் மற்றும் சந்தையில் உள்ள சில கையடக்த்தொலைபேசிகளைப் போல இதுவும் 'மைக்ரோ சிம் கார்ட்' (MicroSIM card) க்கு மட்டுமே இயங்கும். பொதுவாக நாம் மேலே கூறிய தொழில்நுட்ப அம்சங்கள் பல ''ஸ்மார்ட் போன்' உலகிற்கு புதிதானவை அல்ல.
குறிப்பாக சுப்பர் எமோலெட் திரையானது செம்சுங்கின் கெலக்ஸி SIII, கெலக்ஸி நோட் உட்பட பல செம்சுங் ஸ்மார்ட் போன்களில் ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல 8 மெகபிக்ஸல் கெமராவையே கெலக்ஸி SII வும் கொண்டுள்ளது. குவாட் கோர் புரசசரினைக் கொண்ட ஸ்மார்ட் போனை எச்.டி.சி. நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. HTC One X என்ற 'ஸ்மார்ட் போனே' கெலக்ஸி SIII இனைப் போல குவாட் கோர் புரசசரினைக் கொண்டுள்ளது. எனினும் நாம் மேலே கூறியவற்றினை விட பல அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை செம்சுங் கெலக்ஸி SIII கொண்டுள்ளது.இவ்வசதியானது குரல் கட்டளைக்கு ஏற்ப சில செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடியது.
அதாவது "Hi Galaxy!" என்றவுடனேயே உங்களது போனின் குரல் 'சென்சர்' மற்றும் போனின் திரை விழிப்படைவதுடன் செயற்பாட்டிற்குத் தயாராகிவிடும். இதன் மூலம் குரல்கட்டளையை வழங்கி கெமரா மூலம் புகைப்படம் பிடிக்கவும், வொல்யுமை (volume) ஐ கூட்டிக் குறைக்கவும் முடிவதுடன்குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றை அனுப்பவும் முடியும்.இதைப்போன்ற கட்டளைக்கு ஏற்பட செயற்படும் 'சைரி' என்ற வசதி அப்பிளின் ஐ போனிலும் காணப்படுகின்றது.
2. Motion Detection
நீங்கள் ஒருவருக்கு குறுந்தகவல்களை அனுப்பும் வேளையில் உங்களது செம்சுங் கெலக்ஸி SIII இனை சற்று உயர்த்தினால் தானாக அந்நபருக்கு அழைப்பினை மேற்கொள்ளும் வசதியே இது.
3. S Beam
செம்சுங் கெலக்ஸி SIII ஆனது NFC (Near field communication ) சிப்பினை கொண்டிருப்பதனால் S Beam மூலம் இவ்வசதியைக் கொண்டிருக்கும் இன்னொரு ஸ்மார்ட் போனை ஒட்டியவாறு வைத்திருப்பதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற தகவல்களைப் பரிமாற்றிக்கொள்ள முடியும்.
NFC மற்றும் வை-பை டிரக்ட் தொழில்நுட்பங்களின் உதவியுடன் இச்செயற்பாடு நடைபெறுகின்றது. இதைவிட செம்சுங் கெலக்ஸி SIII உடன் கிடைக்கப்பெறும் All-Share Cast டொங்கலின் உதவியுடன் DLNA (Digital Living Network Alliance) வசதியைக்கொண்டுள்ள தொலைக்காட்சிகளில் செம்சுங் கெலக்ஸி SIII இன் திரையை தோன்றவைக்க முடியும்.
4. Pop Up Play
இவ்வசதியானது திரையின் எப்பகுதியிலும் வீடியோவை பிளே செய்வதற்கான வசதியினை வழங்குகின்றது. மேலும் உங்கள் போனில் நீங்கள் வேறு எந்த வேலையைச் செய்துகொண்டிருந்தாலும் உதாரணமாக மின்னஞ்சல்களைப் படித்துக்கொண்டிருக்கும்போதோ, குறுந்தகவல்களை அனுப்பும் போதோ வீடியோவினைக் கண்டுகளிக்க முடியும்.
5. Burst Shot
இவ்வசதியானது நீங்கள் செம்சுங் கெலக்ஸி SIII மூலம் புகைப்படமெடுக்கும் போது செக்கனுக்கு 20 வரையான புகைப்படங்களை தன்னியக்கி முறை மூலம் எடுத்துத்தரக்கூடியது. அவற்றில் சிறப்பானதை நீங்கள் தெரிவு செய்துகொள்ள முடியும் அல்லது உங்களது 'போனே' சிறப்பானதைத் தெரிவு செய்தும் தரும்.
6. Smart Stay
இது கண்ணின் அசைவிற்கு ஏற்ப செயற்படும் தொழில்நுட்பமாகும் ( Eye Recognition Technology). நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனைப் பார்க்கும் போது அதன் திரை தானாக ஒளிரும். நீங்கள் திரையைப் பார்க்காத போது அது செயற்படு நிலையிலிருந்து மாறிவிடும். சக்தியை சேமிக்கும் முகமாகவே இவ்வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது.
இவையே குறிப்பிடத்தக்க வசதிகளாக உள்ளன. இவற்றைத்தவிர HD புரண்ட் கெமரா, புகைப்படங்களில் காணப்படும் நபர்களின் முகங்களை அதிநுட்பமான முகத்தினை இனங்கண்டு கொள்ளும் (face-recognition technology) தொழில்ச்நுட்பம் அதன் மூலம் அப்புகைப்படங்களை உடனே உரிய நபருக்கு அனுப்பக் கூடிய வசதி என செம்சுங் கெலக்ஸி SIII இன் அதி நவீன வசதிகளின் பட்டியல் நீள்கின்றது. செம்சுங் கெலக்ஸி SII பெற்றதினைப் போன்ற வரவேற்பினை கெலக்ஸி SIII பெறுகின்றதா என பொறுத்திருந்து பார்ப்போம்!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Tuesday, May 1, 2012
பெரு நாட்டில் கடற்கரையில் திடீரென உயிரிழந்த 1200 பெலிகான் பறவைகள்!
பெரு நாட்டில் உள்ள பயூரா என்ற கடற்கரை பகுதிகளில் ஏராளமான பெலிகான் பறவைகள் வசிக்கின்றன.இவைகளில் 1200 பறவைகள் திடீரென செத்து விழுந்தன. இதனால் கடற்கரை பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் பெலிகான் பறவைகள் உடல்களாக காட்சி அளித்தன.இதே போன்று அந்த பகுதியில் 54 கடல் சிங்கங்களும், சில கடல் ஆமைகளும் செத்து கிடந்தன. இவை எதனால் திடீரென இறந்தன என்பது தெரியவில்லை.
இதுகுறித்து ஆய்வு நடத்தி கண்டுபிடிக்கும்படி அந்நாட்டு அமைச்சர் கேப்லியல் ஆகோஸ்டா உத்தரவிட்டு உள்ளார். இதே கடல் பகுதியில் கடந்த ஆண்டு 800 டால்பின் மீன்கள் செத்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
Subscribe to:
Posts (Atom)