Tuesday, April 13, 2010

தோல் புற்றுநோயை குணப்படுத்த புதிய மருந்து

தோல் புற்றுநோயால் உலகம் முழுவதும் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் கடந்த 25 ஆண்டுகளில் மற்ற புற்றுநோய்களைவிட தோல் புற்றுநோயினால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


எனவே, இதற்கான மருந்தை சிகாகோ ரஷ் மெடிக்கல் சென்டர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஹோவர்ட் கவுப் மேன் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்தை இங்கிலாந்தில் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தோல் நோயினால் மிகவும் பாதிக்கப்பட்ட 50 நோயாளிகளுக்கு புதிய மருந்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்களுக்கு 9 மாதங்களுக்கு மேல் அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் 16 சதவீதம் பேருக்கு முற்றிலும் நோய் குணமானது. 28 சதவீதம் பேருக்கு பாதிக்கு மேல் குணமானது.

இந்த மருந்து, புற்று நோயை ஏற்படுத்தும் செல்களை அழித்து ஆரோக்கியமான செல்களை உருவாக்குவதாக பேராசிரியர் டாக்டர் ஹொவர்ட் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல ஆய்வுக்குப்பின் இந்த புதிய மருந்து 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF