உலகின் முதலாவது முழு முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக ஸ்பெய்ன் மருத்துவர்கள் தெரிவித்துள்னர்.
ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த 30 சத்திர சிகிச்சை நிபுணர்களினால் இந்த விசேட சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முழுவதுமாக சிதைவடைந்த முகமொன்றுக்கு பதிலாக மற்றுமொரு நபரின் முகமொன்றின் பாகங்கள் பொருத்தி இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் முழுவதுமாக குறித்த நபரின் முகம் சிதைவடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாடை, மூக்கு, முகத் தோல், உதடுகள் மற்றும் பற்கள் உள்ளிட்ட பூரண முகப் பகுதியும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
முகமாற்று அறுவைச் சிகிச்சை 22 மணித்தியாலங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கு முன்னர் பத்து முகமாற்று அறுவைச் சிகிச்சைகள் உலகில் இடம்பெற்ற போதிலும், இந்த அளவிற்கு மிகவும் சிக்கல் மிகுந்த முழு முகமாற்று அறுவை சிகிச்சையொன்று இதுவரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், தற்போதே தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டினால் குறித்த நபர் காயமடைந்ததாகவும் இதற்கு முன்னர் ஒன்பது தடவைகள் நடத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள் பலனளிக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
சுவாசித்தல், உணவு உண்ணல், பேசுதல் போன்ற பல்வேறு அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது குறித்த நபர் அவதியுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF