Tuesday, April 13, 2010

விண்வெளியை சுத்தப்படுத்தும் செயற்கைகோள்

அமெரிக்கா, ரஷியா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஆய்வுப்பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் இந்த செயற்கை கோள்கள் செயல் இழந்து குப்பையாகி விடுகின்றன.

சில செயற்கைகோள்கள் உடைந்து சிதறி துண்டு துண்டாகவும் ஆகின்றன. இவை விண்வெளி குப்பைகள் ஆக சுற்றி வருகின்றன.

கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் முலம் சுமார் 5 ஆயிரத்து 500 டன் எடையுள்ள குப்பைகள் விண்வெளியில் சேர்ந்துள்ளன. இந்த குப்பைகளால் ஏற்கனவே விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் மற்றும் இனி அனுப்ப இருக்கும் செயற்கைகோள்கள் போன்றவற்றுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. டெலிவிஷன் ஒளிபரப்பு மற்றும் தகவல் தொடர்புகள் பாதிக்கும் அபாயமும் இருக்கிறது.

இந்த பிரச்சினையை தீர்க்க இங்கிலாந்து விஞ்ஞானிகள் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன்படி மிகச்சிறிய நானோ செயற்கைகோள்களை தயாரித்து அவற்றை விண்வெளிக்கு அனுப்பி அதன் முலம் விண்வெளி குப்பைகளை சேகரித்து அழிக்கப் போகிறார்கள்.

இந்த குப்பைகளை சேகரிக்கும் வகையில் இந்த நானோ செயற்கைகோளில் காந்த வலை ஒன்றும் இணைக்கப்படும். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் குப்பைகளை கவர்ந்து இழுக்கும். பின்னர் இவற்றை பூமியின் மேற்பரப்புக்கு இழுத்து வரும். அப்போது இந்த குப்பைகளுடன் சேர்ந்து நானோ செயற்கைகோளும் எரிந்து சாம்பலாகி விடும். அடுத்த ஆண்டு இதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்குகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF