Sunday, April 11, 2010

கூகிள் எர்த் மூலம் ஆதிமனிதன் பற்றிய ஆராய்ச்சிகள்

கூகிள் அல்லது கூகிளிங்க் என்பதே தேடுதல் என்ற பொருள் படும்படியாக உருவாகி வருவது அறிந்ததே. தற்போது கூகிள் எர்த் மூலம் ஆதிமனிதனின் உடற் சுவட்டு ஆதாரங்கள் இருந்த இடத்தைக் கண்டுகொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


இரண்டு மில்லியன் ஆண்டுகள் பின்னோக்கிய காலத்தில் ஆப்பிரிக்க நிலப்பகுதியில் தோன்றிய ஆதிமனிதனை ஒத்த உயிரினம் என அறியப்படுகிறது. படிப்படியான இன்றைய நாகரீக மனிதனின் வளர்ச்சியின் தொடர்பை இட்டு நிரப்பக்கூடிய கண்டுபிடிப்பாக இது இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1.9 மில்லியன் வருடத்துக்கு முற்பட்ட இரண்டு எலும்பு படிமங்கள் (ஆஸ்ட்ரோப்லிதெக்ஸ் செடிபா )ஒரே இடத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. அவை ஒரு தாய் (20 அல்லது 30 வயது) மற்றும் ஒரு மகனுடையதாக (8) இருக்கலாம் என அறிவியலார்கள் தெரிவிக்கிறார்கள்.

தெற்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திச் சென்ற லீ பெர்கர் , 2008 லிருந்து கூகிள் எர்த்தை
பயன்படுத்தத்தொடங்கி இருக்கிறார். முன்பே அவரைப்போன்ற ஆராய்ச்சியாளர்களால் பலகாலமாக தேடப்பட்டு பின்பு கண்டுபிடிக்கப்பட்ட 130 குகைகளையும் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட 20 ப்ரதேசங்களையும் அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவே பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். பின்பு புதிய குகைப் பிரதேசங்களையும் கூகிள் எர்த்தின் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கண்டுகொண்டார்.

மிக்கேல் ஜோன்ஸ் , கூகிள் எர்த்தின் தொழில்நுட்பத் தொடர்பாளர் , தங்கள் கூகிள் எர்த்தின் மிகச்சீரிய தேடுதல் முறையாலும் சிறந்த வழிகாட்டுதல் முறையாலும் பெர்க்கர் இதற்கு முன்பே அறியப்படாத கிட்டத்தட்ட 500 குகைப் பிரதேசங்களை கண்டுபிடித்ததாகக் கூறுகிறார். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF